கருத்துச்சுதந்திரம் என்றால் என்ன?

கருத்துச் சுதந்திரம் என்றாலும் அல்லது வேறு எந்த வகைச் சுதந்திரம் என்றாலும் அற்கு எல்லையும் கட்டுப்பாடும் உண்டு. ஒருவரது கருத்தினால் உடல் பொருளுக்கோ அல்லது மானம் மரியாதைக்கோ பங்கம் ஏற்பட்டால், அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல. இதுதான் நல்லது, இதுதான் கெட்டது என்று கூறி அதற்கான வாதங்களை எடுத்துவைத்தால், அது கருத்து சுதந்திரம் எனலாம். எதிரியின் கருத்தில் மாறுபட்ட நிலை நமக்கு இருந்தால், அதைக் காரண காரியத்துடன் விளக்கி, நியாயப்படுத்தாமல், அவன் காட்டுமிராண்டி, பிற்போக்காளன், மதவெறியில் சொல்கிறான் என்றெல்லாம் எழுதுவதும் பேசுவதும் ஒருக்காலும் கருத்துச் சுதந்திரம் ஆகாது. அது எழுத்து வன்முறையாகும்.


தூக்குத் தண்டனை சரியா தவறா என்பதில் சரி என்பவர்களும் தவறு என்பவர்களும் தத்தமது கருத்து சரியானது என்று ஆதாரங்கள் அடிப்படையில் வாதங்களை முன் வைக்கலாம். எதிர்க் கருத்து உடையவர்களின் வாதங்களில் உள்ள பலவீனங்களையும் அதில் உள்ள அறியாமையையும் சுட்டிக்காட்டலாம்.

தூக்குத் தண்டனையை காட்டு மிராண்டிகள்தான் உண்டாக்கினார்கள் என்பதும், மதத்தின் பெயரால் இனவாதக்குழுக்கள் உருவாக்கிக் கொண்டனர் என்றும் எழுதுவதில் எந்தக் கருத்தும் இல்லை. பிறரை தக்க காரணமின்றி இழிவுபடுத்துவதுதான் இதில் உள்ளது. ஆனால் நமது நாட்டில் உள்ள எல்லா ஊடகங்களும் இதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்று வாதிடுகின்றன.

மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயர் கொண்ட மூளையைப் பயன்படுத்தாத ஒருவர் ரிசானா என்பவர் விஷயத்தில் இப்படித்தான் எழுதினார். அவர் தனது வாதத்திற்கு ஏற்கத்தக்க எந்த ஒரு ஆதாரத்தையும் வைக்காமல், இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும், சவூதி அரசையும், இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்களையும் இழிவுபடுத்தி எழுதினார். அதைத்தான் எல்லா ஊடகங்களும் கருத்துச் சுதந்திரம் என்றன.

இதுதான் கருத்துச் சுதந்திரம் என்பது இவர்களின் நிலை என்றால், நாம் பதிலடியாக மனுஷ்ய புத்திரனுக்கு உரைக்கும் வகையில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினோம். பதிலடியாகத்தான் பயன்படுத்தினோம். இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்கிறார்கள். அதாவது எழுத்தாளர் என்று அறியப்பட்டவர் எதைச் சொன்னாலும் கருத்துச் சுதந்திரமாம்; அவர் எழுதியது தவறு என்று சொல்வது கருத்துச் சுதந்திரம் இல்லையாம்.

ஒரு மனிதன் புண்படக்கூடாது என்பதால் நமது விமர்சனத்தை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூச்சல் போடுபவர்கள் 150 கோடி முஸ்லிம்கள் தமது தாய், தந்தையரைவிட மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை காட்டுமிராண்டி என்று சித்தரித்தால் நாங்கள் புண்படுவோம், அது எங்களைப் பாதிக்கும் என்பதை இவர்கள் உணருவதில்லை.

கேடுகெட்ட முறையில் எழுதி வம்பை ஆரம்பித்து வைத்த நபர் புண்படக்கூடாது, ஆனால் 150 கோடி மக்களை யார் புண்படுத்தினாலும் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இவர்களின் அகராதியில் கருத்துச் சுதந்திரமாம்.

ஜெயலலிதாவை சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் அவர் பொதுவாழ்வில் இருப்பதால்தான். அவரின் இந்தக் கொள்கை தவறு என்று ஆதாரங்களை அள்ளிவீசி விமர்சித்தால் கருத்துச் சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்ளலாம்

ஜெயலலிதா 15 வயதில் என்ன செய்தார் 20 வயதில் என்ன செய்தார் என்று உண்மையையும், பொய்யையும் கலந்து எழுதினால், இதில் என்ன கருத்துச் சுதந்திரம் உள்ளது? அவர் எந்த வயதில் எப்படி இருந்தால் இவர்களுக்கு என்ன? இதைத் தட்டிக்கேட்டால் கருத்துச் சுதந்திரம் என்பார்கள். இவ்வாறு எழுதக்கூடிய மற்றும் வெளியிடக்கூடிய நபர்களின் அந்தரங்கத்தையும் மனைவி மக்களையும் குறிப்பிட்டு நீ மட்டும் ஒழுங்கா என்று யாராவது கேட்டால் அது பிற்போக்கு என்பார்கள்.

வம்புக்கு வந்தவர்களை விட்டுவிட்டு பதிலடி கொடுப்பவர்களை பாய்ந்து பிராண்டுகிறார்கள்.

பிழைப்புக்காக எல்லா ஈனத்தமான செயல்களையும் செய்து, மது, மாது என்று அனைத்து பலவீனங்களிலும் அனைவரையும் மிஞ்சி இருக்கும் கேடுகெட்ட கயவர்கள்தான் சினிமாக்காரர்கள்.

பிழைப்புக்காக எதையாவது செய்து தொலையட்டும். பெண்களை ஆடை உரித்து காட்டட்டும். மனைவியிடம் சல்லாபம் செய்வதையும் கட்டிப்புரள்வதையும் படம் பிடித்துக் காட்டட்டும். தம்மை உத்தம புத்திரர்களாக, நாட்டைக் காப்பவர்களாக காட்டித் தொலைக்கட்டும். இவர்கள் பணம் சம்பாதிக்க குர்ஆனை ஏன் பயன்படுத்த வேண்டும்? இஸ்லாமிய சின்னங்களாக அறியப்பட்டவைகளுக்கு ஏன் பயங்கரவாத முத்திரை குத்த வேண்டும்?

பிற மதத்தவர்கள் புனிதமாகக் கருதக்கூடியவைகளை பிழைப்புக்குப் பயன்படுத்த இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கதாநாயகர்களாக நடிக்கும் ஒருவரைப்போல் மேக்கப் செய்து அவரைத்தான் அது குறிக்கிறது என்று புரிந்து கொள்ளும் வகையில் சித்தரித்து அந்நபர் காமலோலனாகவும், மனைவியைக்கூட்டிக் கொடுப்பவராகவும், கள்ள நோட்டு அச்சடிப்பவராகவும் பிம்பப்படுத்தி ஒரு படம் எடுத்து இது கற்பனைக்கதைதான் என்று நாம் கூறினால் மற்றவர்களைப் புண்படுத்தும் இந்தத் திரைத்துறையின் முன்னோடிகள் இதையும் கருத்துச் சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்வார்களா?

விஜயகாந்த், அர்ஜூன், விஜய், கமல் ஆகிய நடிகர்களில் ஒருவரைக் குறிப்பதுபோல் சித்தரித்தால் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றால், மற்றவர்களைப்பற்றி மட்டும் என்னவேண்டுமானாலும் சொல்ல இவர்களுக்கு மட்டும் தனி உரிமையா என்று கேட்க விரும்புகிறோம்.

விஸ்வரூபம் படம் முஸ்லிம்களை அப்பட்டமாக இழிவுபடுத்துகிறது என்பதற்காக முஸ்லிம்கள் அரசிடம் முறையிட்டனர். இது ஏதோ தேசவிரோதச் செயல்போல் சித்தரிக்கப்பட்டு குதித்து வெறியேற்றினார்கள்.

விஸ்வரூபம் முஸ்லிம்களைப் புண்படுத்துகிறது என்று சொன்னால் தொலைக்காட்சியில் இரண்டு கேடுகெட்ட சினிமாத்துறையினர் உட்கார்ந்துகொண்டு பெரும்பான்மையான இந்துக்கள் கொந்தளித்தால் என்னவாகும் என்று மிரட்டுகின்றனர். இன்னொரு நபரோ இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார். இதுபோல் முற்றிலும் விஷம் கக்கும் விதத்தில் இரண்டு கயவர்களும் பேசிக்கொண்டே சென்றனர். அப்போதுதான் இவர்கள் முஸ்லிம்களைக் கருவறுப்பதையே கொள்கையாக வைத்துக் கொண்டு நடித்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது.

இரண்டு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்தீர்கள் என்று கேட்கும் இந்த அயோக்கியர்கள் மட்டும் என்ன செய்தார்கள்? நாட்டில் உள்ள மற்றவர்கள்தான் என்ன செய்தார்கள்? மற்றவர்கள் செய்தவற்றை முதலில் பட்டியலிட்டுவிட்டு, பின்னர் முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கவேண்டும்.

இந்தக் கொடூரத்திற்காக நாட்டில் யாரும் எதுவும் செய்யவில்லை. செய்யவும் முடியாது; இந்திய அரசுதான் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். உண்மை இவ்வாறு இருக்க முஸ்லிம்கள் என்ன செய்தீர்கள் என்று உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் ஊடகத்தில் அமர்ந்துகொண்டு கேள்வியெழுப்புவது அப்பட்டமான மதவெறிதான் என்பதில் எந்தச்சந்தேகமுமில்லை.

எல்லா தீவிரவாதிகளையும் ஒழிக்க அவதாரம் எடுத்துள்ள விஜயகாந்த், அர்ஜுன், கமல் மற்றும் விஜய் ஆகியோருக்கு இராணுவ உடை அணிவித்து, பாகிஸ்தான் எல்லைக்கு அனுப்பி வைத்தது போலவும், முஸ்லிம்கள் அப்படிச் செய்யவில்லை என்பதுபோலவும் கேள்வி எழுப்பப்படுகிறது என்றால் இது எந்த வகை கருத்து சுதந்திரம்?
 

இராணுவவீரர்கள்கொல்லப்பட்டதற்குநீதிகிடைக்கும்வரை
  • திரைப்படங்களில்நடிக்கமாட்டோம்,
  • அவற்றைதயாரிக்கமாட்டோம்,
  • எந்தத்திரைப்படத்தையும்இயக்கமாட்டோம்என்றுஅறிவிக்கும்குறைந்தபட்சஎதிர்ப்பையும்கூடஇவர்கள்செய்யவில்லை.
  • அவ்வாறுநடந்துவிட்டு,நடிகைகளுடன்ஆட்டம்போட்டுக்கொண்டிருக்கும்இவர்கள்முஸ்லிம்களைமட்டும்தேசவிரோதிகளாகச்சித்தரிக்கஇத்தகையகேள்விகளைக்கேட்கின்றனர்.

இந்தக் கேள்விக்கும் விஷ்வரூபம் பட விவகாரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பெரும்பாலான இந்துக்கள் பொங்கி எழுந்தால் என்னவாகும் என்ற மிரட்டலும் இதுபோன்றதுதான்.

இந்தப் படத்துக்கும் இந்துக்களுக்கும் என்ன சம்பந்தம்? இந்து முஸ்லிம் கலவரத்தைக் கூறும் கதையாக இருந்து, இந்துக்களுக்கு சாதகமாக கதை அமைக்கப்பட்டு, அதன் காரணமாக இப்படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தால், அப்போது வேண்டுமானால் இந்துக்களுக்கு சாதகாமான ஒன்றை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்று வாதிடலாம்.

விஷ்வரூபம் இந்து முஸ்லிம் சம்பந்தப்பட்டது அல்ல. இந்தியா சம்பந்தப்பட்டதுகூட அல்ல. கதைக்களம் இந்தியாவில் நடப்பது போன்று இல்லை. இப்படத்தில் குர்ஆன் இழிவுபடுத்தப்படுகிறது. முஸ்லிம்களின் புனிதச் சொற்கள் வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காகத்தான் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். இதற்கு எதிராக இந்துக்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? அவர்களுக்கு இதில் என்ன பாதிப்பு ஏற்படும்? பிரச்சினை கமலுக்கும் முஸ்லிம்களுக்குமானது. பின்னர் அரசுக்கும் கமலுக்குமாக மாறியது. இது எப்படி இந்துக்கள் பிர்ச்சினையாகும்?

படம் எடுத்த கமலஹாஸன் இந்து மதத்தின் தலைவராக இருந்தால்கூட தர்க்க ரீதியாக இப்படிச் சொல்ல முடியாது. எந்த மதத்தையும் நம்பாதவர், கடவுளை வழிபடாதவர் கமல். அவர் எப்படி இந்து மதத்தின் அடையாளமாக சித்தரிக்கப்படுகிறார்? சினிமா துறையில் உள்ள இரு கயவர்களும் இந்துத்துவா வெறியில் ஊறித்திளைத்து அதை வெளிக்காட்டாமல் இருந்தாலும், கமலுக்கு ஆதரவாக கருணாநிதி உள்ளிட்டோர் கருத்துச் சொன்னதால் தங்களை இனம் காட்டிக்கொண்டார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், சிறுபான்மையினர் பற்றி யாரும் எதையும் சொல்லலாம் என்பது கருத்து சுதந்திரம். ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இது எங்கே போய் முடியுமோ என்று நமக்கு அச்சமாக உள்ளது.

நன்றி - onlinepj.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger