உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.


ரோக்கியமான உடல் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருக்கும்.
ஒருவரின் உடல்நிலையை பொறுத்து அவருடைய மனநிலையும் மாறும்.

உதாரணத்திற்கு காய்ச்சலால் தலைவலியால் பாதிக்கப்பட்ட நபரிடம் நீண்ட நேரம் பேச்சு கொடுத்து பாருங்கள் மற்ற நேரங்களில் இனிமையாக பேசக்கூடியவர் உடல் நிலை பாதிக்கப்பட்டவுடன் எரிந்து விழுவர் அல்லது
உக்காந்து அருத்துகிட்டு இருக்கானே என்று மனதுக்குள் திட்டுவார்.

சரி விஷயத்துக்கு வருவோம்



உடற்பயிற்சிகளை ஏன் செய்ய வேண்டும்?

மனித வாழ்வின் பெரிய துயரம் ஏதுவென்றால் அது இயற்கையை விட்டுப் பிரிந்து, செயற்கையில் மூழ்கி இருப்பதே ஆகும்.

இயற்கை போட்டுத் தந்த பாதையை விட்டு விலகி செல்ல செல்ல நோய்கள் நம்மை நேருங்கி கொண்டே வரும் அவ்வாறு நேருங்கி வரும் நோய்களை உடலை அண்டாமல் பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியம்.

பொருள் தேடி வாழவும் உடம்புதான் மூலகாரணமாகிறது.பொருள் தேட வேண்டுமானால் முறையாக உழைக்க வேண்டும். முறையாக உழைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் வேண்டும். இல்லாவிடில் நோயினால் பீடிக்கப்பட நேரிடும்.

நோயினால் பீடிக்கப்பட்ட உடலோடு நிம்மதியாக வாழவே முடியாது. நிம்மதியற்ற வாழ்வும் ஒரு வாழ்வாகுமா?
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறதா?

உடலில் தோன்றும் நோயை உடலைக் கொண்டே தீர்க்கத்தான் உடற்பயிற்சிகள் இந்த பயிற்சிகள் உடலைச் சிற்சில முறைகளில் வளைத்தும் நெளித்தும் முறுக்கியும்,நெகிழ்த்தியும் செய்வதால் உடலில் உள்ள நாளமில்ல சுரப்பிகள் நன்கு சுரக்க ஆரம்பித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு தூங்கி எழுந்தவுடன் அல்லது அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும்போது சோம்பலை போக்க நெளிப்பு விடுவோம் அப்படி நெளிப்பு விட்டபிறகு ப்ரஸ்சாகி விடுவோம் இப்படி நெளிப்பு விடுவது கூட ஒருவகையான உடற்பயிற்சிதான். இறைவன் இயற்கையாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொது (Default)வாக வழங்கியிருக்கிறான். (நாய் அல்லது பூனை நீண்ட நேரம் படுத்து கிடந்தால் எழுந்து உடம்பை ஒரு முறை முறித்து விட்டு தான் ஓட ஆரம்பிக்கும்)

அதிகமான உடலுழைப்பு உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

கண்டிப்பாக செய்ய வேண்டும் எவ்வளவு கஷ்டமான வேலை செய்தாலும் முழு உடலும் வேலை செய்யாது சிலர் கைகளுக்கு மட்டும் அதிகமான வேலை கொடுப்பார்கள், சிலர் கால்களுக்கு மட்டும் அதிகமான வேலை கொடுப்பார்கள்
இப்படி ஒரே உறுப்புக்கு அதிகமான வேலைப் பளு கொடுப்பதால் எற்ப்படுகின்ற தீமைகளை விட்டும் உடற்பயிற்சி பாதுகாக்கும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

ஓட்டையான பானையில் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் நீரைச் சேமித்து வைக்க முடியாது. முதலில் ஓட்டையைத்தான் அடைக்க வேண்டும்.

நமக்கு சக்தி எங்கிருந்து வரும்?

1.நாம் சுவாசிக்கும் காற்று

2.நாம் குடிக்கும் நீர்

3.நாம் அருந்தும் உணவு

இவை மூன்றிலிருந்து தான் நமக்கு சக்தி கிடைக்கிறது. இந்த மூன்று விஷயங்களில் நாம் சீராக வைத்துக் கொண்டால் நோய் நம்மை அணுகாது. அணுகும் நோயும் விலகி விடும்.

முதலில் காற்றை எடுத்துக் கொள்வோம்

மனிதன் உயிர் வாழப் பிராண வாயு எனப்படும் ஆக்ஸிஜன் அவசியம். இந்த ஆக்ஸிஜன் தான் இரத்தத்தைச் சுத்திகரிக்கச் செய்கிறது. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

இந்த ஆக்ஸிஜனை மனித உடல் எந்த அளவுக்குப் பெறுகிறதோ அந்த அளவுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.காற்றிலிருந்து அதிக அளவு ஆக்ஸிஜனை உடல் பெற்றுக் கொள்ள உடற்பயிற்சி வழி செய்தாலும். ஒரு சில விஷயங்களை நாம் உடற்பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டும்.

1. எப்போதும் மூச்சை கவனிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் வாயினால் சுவாசிக்காதீர்கள்

2.தம் அடிப்பதை நிறுத்த வேண்டும் தயவுசெய்து சிகரேட் பிடிக்காதீர்கள்.
இறைவன் சுவாசிக்க தான் மூக்கை படைத்து இருக்கிறான் புகை பிடிக்க அல்ல
இயற்கைக்கு மாற்றமாக புகைப் பிடிப்பதால் ஏற்படும் கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.



       
                                         
                                                 இந்த வீடியோக்களை பாருங்கள்





3.விடுமுறை நாட்களில் நல்ல சுத்தமான காற்று கிடைக்கும் இடங்களுக்கு சென்று வாருங்கள் மரங்கள் அதிகம் உள்ள பூங்கக்கள் மலைப்பிரதேசங்கள் கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று வாருங்கள்.
(அங்கேயும் இந்த பயலுவுக தம் அடிச்சு நாஸ்த்தி பன்றது வேற விஷயம்)

அப்புறம் நாம் குடிக்கும் நீர் அருத்தும் உணவு
இது சம்பந்தமாக விரிவாக எழுத வேண்டியிருப்பதால் அடுத்த பதிவில்

டிஸ்கி:

இங்கு (சவூதியில்)  எனது உடற்பயிற்சி வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு பயிற்சிகளை சொல்லிக் கொடுக்க தொடங்கு முன் இரண்டு நாட்கள் அவர்களிடம் உடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன? ஆரோக்கியமான உடலை பெறுவது எப்படி? என்ற தலைப்புகளில் வகுப்பு எடுப்பது வழக்கம். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்களை தயார் படுத்தி விட்டு பிறகு தான் பயிற்சிக்குள் நுழைவார்கள்.

எனது பிளாக்கில் பயிற்சிகளை கற்றுக் கொடுக்க ஆரம்பித்த போது நேரடியாக பயிற்சிக்குள் சென்று விட்டேன் என்ற மனக்குறை இருந்துக் கொண்டே இருந்தது அதை போக்கும் விதமாக உடற்பயிற்சி செய்யும் முன் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் இப்பதிவு.

நன்றி - வலையுகம் 
Share this article :

+ comments + 1 comments

Wednesday, 04 December, 2013

Sir i like to become the police officer...how to increse my chest,arms and body shape...there is no jim in my village...please tell the exercise that how to increse that above all things in my home tried exercise...thank you

Email...arjun.malli50@gmail.com

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger