100 விமானப் பயணங்கள் ரத்து!


100 விமானப் பயணங்கள் ரத்து!நேற்று மாலையிலிருந்து கடும் பனி காரணமாக , சீனாவின் பீஜிங் விமானநிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானப் பறப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவின் க்ஸின்ஹுவா செய்தி முகவம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. பீஜிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட இருந்த; அங்கு வந்து சேரவிருந்த 115 விமானங்கள் திட்டமிட்டபடி செல்லவோ, வரவோ இயலாமற் போனது என்று அத்தகவல் குறிப்பிடுகிறது.

பீஜிங் விமான நிலையம், பயணியர் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். கடந்த 2012ம் ஆண்டில் 81.8 மில்லியன் பயணியர் அங்கு வந்து போயுள்ளனர். அமெரிக்காவின் ஹார்ட்ஸ் ஃபீல்ட் அட்லாண்டா விமான நிலையத்துக்கு அடுத்த படியாக பீஜிங் விமான நிலையம் அதிக அளவு பயணியர் பயன்பாடுடையதாக உள்ளது.
பீஜிங் விமான நிலையத்தின் பனியை அகற்றும் பணியில் 800 பணியாளர்களும் 230 எந்திரங்களும் ஈடுபட்டு வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பல பகுதிகளில் கடுங்குளிரும் பனிப்பொழிவும் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி - இந்நேரம் 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger