Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label நிவாரண உதவிகள். Show all posts
Showing posts with label நிவாரண உதவிகள். Show all posts

தீ விபத்தில் வீடிழந்த 7 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடித்த கடலூர் TNTJ


கடலூர் மாவட்டம் கடலூர் OT க்கு அருகில் உள்ளது வசந்தரான்பாலயம் என்ற சிறு கிராமம் உள்ளது இங்கு சென்ற  31/12/2012 அன்று கூட்டு குடும்பங்களாக ஒரே பகுதியில் அருகருகே வசித்து வந்தவர்களின் வீட்டில் சமைக்கும்போது ஏற்பட்ட கடுமையான தீ விபத்தால் 7 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது 
இதில் ஒரு வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்தது 
இந்த கோர தீயில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து  நாசமாயின 
இதில் உள்ள ஒருவர் வீட்டில் சிறிது சிறுதாக சேர்த்து வைத்திரிந்த நகைகளும் தீயில் எரிந்து போனது ..
இதில் நகைகள் , கிரைண்டர்கள் , ப்ரிட்ஜ் , பீரோக்கள் அதில் உள்ள அணைத்து துணிமணிகள் 
உட்பட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதில் ஒரே நாளில் ஒன்றுகூட இல்லாதவர்களாய் இந்த 7 வீட்டினரும் பரிதாபமாக இருந்தனர் 
இதை பார்வையிட்ட அரசு துறையினர் வீட்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து தங்களின் கடமையை முடித்துகொண்டனர் 
அப்பகுதிக்கு உடனடியாக சென்ற TNTJ வினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு 
பாதித்த வீடுகளை பார்வையிட்டு உடனடி முதல் உதவியாக அந்த 7 குடும்பத்திற்கும் 5/1/2013 அன்று
TNTJ சார்பில் 7 வீடுகள் கட்டி கொடுத்தனர் 
முதலில் முஸ்லிம் அல்லாதவர்களின் இரண்டு வீடுகளை கட்ட ஆரம்பித்தபின்தான் முஸ்லிம்களின் 5 வீடுகள் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இதைபார்த்த முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகள் TNTJ வின் மனித நேய பணியை வெகுவாக பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்.
இதுபற்றி கூறிய வீடிழந்த கிறிஸ்துவ சகோதரி கூறுகையில் :
கிறிஸ்துவ அமைப்பினர் எதுவுமே செய்யவில்லை தரேன் என வெறுமனே சொல்கிறார்களே தவிர  
எதுவுமே செய்ய வில்லை 
ஆனால் எந்த வித சம்பந்தமும் இல்லாத TNTJ வினர் நாங்கள் தெருவில்  இருக்கும் நிலையில் மனிதாபிமானத்தோடு எந்த வித சுய லாபமும் இல்லாமல் பல ஆயிரங்கள் செலவு செய்து வீடு  கட்டி கொடுத்தீர்கள் 
எங்கள் பாத்திரம் உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலானது , பிள்ளைகளின் பள்ளிகூட யூனிபார்ம் உட்பட அனைத்தும் நாசமானது என கூறினார் 
,கடலூர் மாவட்ட TNTJ நிர்வாகம் சார்பில் உடனடியாக அந்த பெண்மணிக்கு ஸ்டவ் அடுப்பு உட்பட பண்ட பாத்திரங்கள் வாங்கி கொடுக்கப்பட்டது 
கடைசி வரை உங்கள் உதவிகளை மறக்கவே முட்டியாது என கூறி கண்கலங்கினார் அந்த கிறிஸ்துவ பெண்மணி
அதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற சார்பாக ஸ்டவ் அடுப்பு உட்பட பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
0 comments

நாடு முழுவதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் வெள்ள நிவாரணப் பணி

நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள வெள்ள அணர்த்தம் காரணமாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஜாதி, மத, பேதமின்றி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. நிவாரணப் பணியின் முதல் கட்டமாக வவுனியா – சித்தி விநாயகர் கோவில் மண்டபம், சின்னசிப்பிக்குளம், வாடிவதை கிராமம், குமாரசாமி கலாசார கோவில் மண்டபம், பொலன்னருவை – மாணிக்கம்பிட்டி, பழைய ஊர், சோனக ஊர், மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியடி ஆகிய இடங்களில் சுமார் 500 குடும்பங்களுக்கு 10 லட்சம் பெருமதியான உலர் உணவுப் பொருட்கள், பாய், போர்வை மற்றும் புதிய ஆடைகள் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

நன்றி - sltj 
0 comments

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டும் பணியில் sltj


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடைத்தெருக்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் என கொழும்பு பூராகவும்  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகிள் உள்ளிட்ட குழுக்கள் இரண்டு நாட்களாக  நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட காட்சிகள்.
0 comments

பொலன்னறுவையில் பாரிய வெள்ளம் – களத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்


ஓரிரு நாட்களாக இலங்கையில் பல இடங்களிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்குகளாலும் மண் சரிவுகளினாலும் அதிகளவான மக்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இன்று வரைக்கும் சுமாராக 77000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். 8500 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
பொலன்னறுவையில் பாரிய வெள்ளம்
பொலன்னறுவை மாவட்டம் தமன்கடுவ பிரதேச சபைக்கு உற்பட்ட  மாணிக்கம்பிட்டி, குசுங்கம, கல்லேல்ல,  திவுலான, புதூர் ஆகிய கிராமங்களும் மணம்பிட்டி பகுதியும் வெள்ளத்தால் மூழ்கியது. நேற்று (18.12.2012) காலை முதல் தற்போது வரை மாணிக்கம்பிட்டி பகுதியில் 4 அடிக்கு மேற்பட்ட வெள்ள நீர் காணப்படுகிறது.மற்ற பகுதிகளிலும்வெள்ள நீரால் மக்கள்அவதிப்படுகின்றனர்.
களத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
மாணிக்கம்பிட்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான முதலுதவிகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தமன்கடுவ கிளை சகோதரர்கள் நேற்று முதல் செய்து வருகின்றனர். பாதிக்கப் பட்ட மக்கள் பொது இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
 நன்றி - sltjweb.com 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger