தீ விபத்தில் வீடிழந்த 7 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடித்த கடலூர் TNTJ


கடலூர் மாவட்டம் கடலூர் OT க்கு அருகில் உள்ளது வசந்தரான்பாலயம் என்ற சிறு கிராமம் உள்ளது இங்கு சென்ற  31/12/2012 அன்று கூட்டு குடும்பங்களாக ஒரே பகுதியில் அருகருகே வசித்து வந்தவர்களின் வீட்டில் சமைக்கும்போது ஏற்பட்ட கடுமையான தீ விபத்தால் 7 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது 
இதில் ஒரு வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்தது 
இந்த கோர தீயில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து  நாசமாயின 
இதில் உள்ள ஒருவர் வீட்டில் சிறிது சிறுதாக சேர்த்து வைத்திரிந்த நகைகளும் தீயில் எரிந்து போனது ..
இதில் நகைகள் , கிரைண்டர்கள் , ப்ரிட்ஜ் , பீரோக்கள் அதில் உள்ள அணைத்து துணிமணிகள் 
உட்பட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதில் ஒரே நாளில் ஒன்றுகூட இல்லாதவர்களாய் இந்த 7 வீட்டினரும் பரிதாபமாக இருந்தனர் 
இதை பார்வையிட்ட அரசு துறையினர் வீட்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து தங்களின் கடமையை முடித்துகொண்டனர் 
அப்பகுதிக்கு உடனடியாக சென்ற TNTJ வினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு 
பாதித்த வீடுகளை பார்வையிட்டு உடனடி முதல் உதவியாக அந்த 7 குடும்பத்திற்கும் 5/1/2013 அன்று
TNTJ சார்பில் 7 வீடுகள் கட்டி கொடுத்தனர் 
முதலில் முஸ்லிம் அல்லாதவர்களின் இரண்டு வீடுகளை கட்ட ஆரம்பித்தபின்தான் முஸ்லிம்களின் 5 வீடுகள் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இதைபார்த்த முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகள் TNTJ வின் மனித நேய பணியை வெகுவாக பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்.
இதுபற்றி கூறிய வீடிழந்த கிறிஸ்துவ சகோதரி கூறுகையில் :
கிறிஸ்துவ அமைப்பினர் எதுவுமே செய்யவில்லை தரேன் என வெறுமனே சொல்கிறார்களே தவிர  
எதுவுமே செய்ய வில்லை 
ஆனால் எந்த வித சம்பந்தமும் இல்லாத TNTJ வினர் நாங்கள் தெருவில்  இருக்கும் நிலையில் மனிதாபிமானத்தோடு எந்த வித சுய லாபமும் இல்லாமல் பல ஆயிரங்கள் செலவு செய்து வீடு  கட்டி கொடுத்தீர்கள் 
எங்கள் பாத்திரம் உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலானது , பிள்ளைகளின் பள்ளிகூட யூனிபார்ம் உட்பட அனைத்தும் நாசமானது என கூறினார் 
,கடலூர் மாவட்ட TNTJ நிர்வாகம் சார்பில் உடனடியாக அந்த பெண்மணிக்கு ஸ்டவ் அடுப்பு உட்பட பண்ட பாத்திரங்கள் வாங்கி கொடுக்கப்பட்டது 
கடைசி வரை உங்கள் உதவிகளை மறக்கவே முட்டியாது என கூறி கண்கலங்கினார் அந்த கிறிஸ்துவ பெண்மணி
அதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற சார்பாக ஸ்டவ் அடுப்பு உட்பட பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger