Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label சமுக சீரழிவு. Show all posts
Showing posts with label சமுக சீரழிவு. Show all posts

சீரழியும் திரைப்பட சமூகம்!

3 வயது பச்சிளம் பெண் குழந்தை வன்புணர்வு; 60 வயது மூதாட்டி வன்புணர்வு - இவை நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்டன.
சமூக சீர்கேடுகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. 10 வருடங்களுக்கு முன் சமூகத்தில் பாரிய குற்றங்களாக கருதப்பட்டு வந்த விபச்சாரம், முறையற்ற உறவுகள், திருமணத்திற்கு முன் சல்லாபம், மது, புகைப்பிடித்தல் ஆகியவை இன்று சர்வ சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
இதற்கான முன்னணி காரணிகளில் ஒன்றாக திரைப்படங்களும் அத்திரைப்படங்களில் தோன்றும் நாயக நாயகிகளும் உள்ளனர் என்றால் அது மிகையல்ல.
ஓசூரில் அமையப் பெற்றுள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வந்த சென்னையச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவரது அறையில் படுகொலை செய்யப்படுகின்றார். அவரை கொலைச் செய்த கொலையாளிகள் மிளகாய்ப் பொடிகளை தூவிச் சென்றுள்ளனர். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்காக படமாக்கப்பட்டது இப்போது வாழ்வில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. ஆட்டோ சங்கர் போன்ற கொடூர கொலையாளிகள் உருவாக காரணமாக இருந்தவையும் திரைப்படங்களே என்று வரலாறு நமக்கு பாடம் நடத்துகிறது
தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆவேசமடைந்த மகன், தம் தந்தையையே குத்திக் கொன்ற துயர சம்பவம் ஆந்திர மாநிலம் நிலுமாபாத் மாவட்டம் கும்மரிவாடா பகுதியில் 10 தினங்களுக்கு முன் நடைபெற்றது. கணவன் மனைவிக்கிடையே தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தூண்டப்பட்ட மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட விபரீதம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சின்ன மண்டம் அருகே சகிபந்த் என்ற கிராமத்தில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்றது.
இன்றைய சமுதாயத்தில் திரைப்படங்களின் பாதிப்பு அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதை கீழ் வரும் சம்பவம் நமக்கு உணர்த்திக் காட்டுகின்றது. காதலனுடன் ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை செய்து கொள்கிறார் இந்தி நடிகையொருவர். இது குறித்த செய்தி தொகுப்புகள், அந்த நடிகை நடித்த திரைப்பட காட்சிகள் போன்றவை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதனை கவனித்து வந்த 5ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயதே நிரம்பிய பள்ளிச்சிறுவன் கவலையுற்றிருக்கிறான். வீட்டில் யாருமில்லா நேரத்தில் அவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுதந்திரப் போராட்ட காலத்தில் திரைப்படங்களும் நாடகங்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளன. அதே திரைப்படத்துறை இன்று கலாச்சார சீர்கேடுகளை வளர்க்கும் பணிகளையும், இளைஞர்-இளைஞிகளை வழிகெடுக்கும் பணிகளையும், சாதி-மத துவேசங்களைப் போற்றும் பணிகளையுமே செய்து வருகின்றன என்பது சுட்டெரிக்கும் உண்மை.
0 comments

கிரிக்கெட் (வீண்)விளையாட்டும் ஆபத்தும்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். 

கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி ஒன்றை ரசிக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட் ஒன்றாகத்தான் இருக்கும்.

நாட்டு நடப்புகள் உலக விஷயங்கள் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய விபரங்கள் பற்றி தெரியவில்லையா பரவாயில்லை! ஆனால் கிரிக்கெட் பற்றி புள்ளி விபரங்கள் ஒருவருக்குத் தெரியவில்லையெனில் அவர் அறிவீனராக கருதப்படுகிறார். அந்த அளவிற்கு கிரிக்கெட் எனும் போதை தலைவிரித்தாடுகிறது.

இப்படிப்பட்ட அதி முக்கியத்துவம்? வாய்ந்த கிரிக்கெட்டைப் பற்றி இஸ்லாமியப் பார்வை என்ன என்று ஆதாரத்துடன் பார்ப்போம். முதலில் இஸ்லாம் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எந்த ஒரு விளையாட்டுக்கும் எதிரி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் அபிசீனியர்கள் நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து (கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து அவற்றால் அவர்களை அடித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் உமரே! அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள் (புஹாரி: பாகம் 3, அத்தியாயம் 56, எண்: 2901)

ஆனால் எந்த வித பலனுமில்லாத நேரத்தை வீணடிக்கிற, அறிவுக்கு சம்பந்தமில்லாத, சூதாட்டத்தை ஊக்குவிக்கிற, நாட்டின் முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியில் தடை போடுகிற, ஆபாசத்தை தூண்டுகிற (Cheer Girls), ஆரோக்கியத்துக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு விளையாட்டையும் இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு விட்டுச் செல்லப்பட்ட ஆபத்துதான் இந்த கிரிக்கெட் என்று சொன்னால் மிகையாகாது. கிரிக்கெட் எனும் மாயப்பேயினால் நிகழக்கூடிய ஆபத்துக்களை ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தொழுகையை விடக்கூடிய நிலை:

கிரிக்கெட் விளையாடக்கூடிய, பார்க்கக்கூடிய ஒருவர், (அது பகல் ஆட்டமாகவோ அல்லது இரவு ஆட்டமாக இருந்தாலும் சரியே) தொழுகையை விடுபவராக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிம் ஐந்து நேரத் தொழுகையை கண்டிப்பாக ஐமாஅத்தோடு தொழக் கூடியவராக இருக்க முடியாது.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகையைப் பற்றித்தான் முதன்முதலாக விசாரிக்கப்படும் (அபூதாவூது)

தொழுகையை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு இருக்கும் ஒருவர் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் இந்த கேள்விக்கு என்ன பதில் தயாரித்து வைத்து இருக்கிறார்? தொழுகையை விடுவதால் இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய நிலை இருக்கும்போது அப்படிப்பட்ட விளையாட்டு நமக்குத் தேவைதானா? இளைஞர்களே சிந்திக்கக் கடமைப்பட்டு உள்ளீர்கள்!

வீண் செலவுகள் பண விரயம்:

இந்த விளையாட்டைப் போன்று எந்த ஒரு விளையாட்டிலும் பணம் வீணடிக்கப்படுவதில்லை. போட்டிகளைக் காண டிக்கெட் வாங்குவது, டிஷ் (குடை) வைப்பது, பணம் கொடுத்து கட்டண சேனல்களை (Pay Channel) பெறுவது, எல்லாமே வீண்செலவுகள். தான தர்மங்கள் செய்வதில் இருந்து விலகி நிற்கும் இவர்கள், போட்டிகளை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது ஆச்சரியமாக உள்ளது. அத்தியாவசிய செலவுகள் செய்வதற்கு ஆயிரம் முறை யோசிக்கக்கூடியவர்கள் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தயங்குவதில்லை.
இவர்கள் திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீதை வசதியாக மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

'முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில், நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. அவற்றில் ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை எவ்வாறு செலவு செய்தாய்... (திர்மிதி)

மேலும் இளைஞர்களே! இறைவன் கூறுவதுபோல் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரர்களாகி விடாதீர்கள்.

நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவனாக இருக்கின்றான். (17:27)

பணம் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை:

கிரிக்கெட் வீரர்கள் போன்று பணம் புகழ் ஈட்ட வேண்டும் என்ற பேராசை காரணமாக மார்க்கம், படிப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிரிக்கெட் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் செல்வச்செழிப்பில் மிதப்பதை பார்த்துவிட்டு இந்திய அணிக்காக விளையாடினால் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பதிலாக கிரிக்கெட் விளையாடுவதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை இஸ்லாமிய முறைப்படி வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது.

இறைவன் திருமறையில் கூறுகிறான் (செல்வத்தையும், மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக்கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது. (102:1).

இறைவன் கூறுவது போல செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை பராக்காக்கி விடவேண்டாம் மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் என்னுடைய குழந்தைகயை இஸ்லாமிய முறைப்படி வளர்த்தேன் என்று பயமில்லாமல் சொல்லக்கூடிய ஒருவராக அனைத்து பெற்றோர்களையும் ஆக்கி வைப்பானாக!

பொழுதுபோக்கு:

மிகப்பெரும் அறிஞர்கள் கூட இந்த விஷயத்தில் மூளை மழுங்கடிக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனமாக உண்மை. ஒரு உண்மையான இறைவிசுவாசிக்கு வணக்கவழிபாடுகள் மற்றும் நியாயமான அன்றைய தேவைகளுக்கு 24 மணி நேரம் போதாமல் இன்னும் ஒரு சில மணி நேரங்கள் இருந்தால் இபாதத்துகள் செய்வதற்கு நன்றாக இருக்குமே என்று நினைப்பான், நிலைமை இப்படி இருக்கும்போது, பொழுது போக்குவதற்கு என்று எங்கே நேரம் ஒதுக்க முடியும். இளைஞர்களே! உங்களுக்கென்று, இறைவன் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளான் பொழுது போக்குவதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மறுமையில் இறைவன் முன்னிலையில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் நேரத்தை எவ்வாறு செலவழித்தாய் என்ற கேள்விக்கு பதில் சொல்லாத வரை ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. (திர்மிதி)

விலைமதிப்பற்ற நேரத்தை கிரிக்கெட் பார்ப்பதில் கழித்துவிட்டு மறுமைநாளில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக நம்மை ஆக்கிவிடாமல் அல்லாஹ் அருள்புரிவானாக!.

உடல் ஆரோக்கியம்:

இந்த விளையாட்டை நியாயப்படுத்துவோர் கூறும் அநியாயமான காரணம்தான் இந்த உடல் ஆரோக்கியம். பகல் முழுக்க அல்லது இரவிலோ வெயில் மற்றும் குளிரில் உடலை வருத்திக் கொண்டு விளையாடுவது தான் ஆரோக்கியமான விளையாட்டு எனில் ஆரோக்கியமாக விளையாடக்கூடிய மற்ற விளையாட்டுக்களை என்னவென்று கூறுவார்கள். கிரிக்கெட் விளையாடுபவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தை விட ஆரோக்கியமில்லாமல் இருக்கும் நேரம்தான் அதிகம். Unfit, Cramp, Injury, Back pain, Wounds, Shoulder Operation போன்ற வார்த்தைகள் எல்லாம் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட வார்த்தைகள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதுதான் ஆரோக்கியம் என்றால், அந்த ஆரோக்கியம், இஸ்லாமிய இளைஞர்களே, நமக்குத் தேவையில்லை.

இறைவன் திருமறையில் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் (2:185) என்று கூறுகிறான்.

ஆகையால் கிரிக்கெட்டை விட்டு விலகி நில்லுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

சூதாட்டம்:

கிரிக்கெட்டும், சூதாட்டமும் பிரிக்க முடியாததாக ஆகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது. நாளுக்கு நாள் புதிய புதிய சட்டங்களை உண்டாக்குவதன் மூலம், சூதாட்டம் அதிகமாகிக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது. சூதாட்டத்தில் ஈடுபடாத பிரபல கிரிக்கெட் வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். Match fixing, Bookies இவைகள் எல்லாம் கிரிக்கெட்டும், சூதாட்டமும் இரண்டறக் கலந்து விட்டதையே காட்டுகிறது. இறைவன் திருமறையில் கூறுகிறான்.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். (5:90)

கிரிக்கெட் விளையாடுவதன் மூலமாகவோ அல்லது கண்டுகளிப்பதன் மூலமாகவோ ஏதோ ஒரு வகையில் சூதாட்டத்தை ஊக்குவிப்பவர்களாகவே இருக்கின்றோம். ஆகையால் இளைஞர்களே! ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ள இந்த கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ் போதுமானவன்.

ஆடைகுறைப்பு அழகிகள்:

மேற்கத்திய நாடுகளில் பிரபலமான, ஆட்டத்தின் நடுவே ரசிகர்களை மகிழ்விக்க இந்த அரைகுறை அழகிகள்? நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆடை குறைப்பு, புயல் இந்தியாவையும் மையம் கொண்டு விட்டது. இந்த ஆடைகுறைப்பு அழகிகளின்? (Cheer Girls) ஆட்டம், இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றே கூறலாம். ஆட்டத்தின் நடுவே காட்டப்படும் அழகிகளில் ஆட்டம் விபச்சாரத்தின் பக்கம் இட்டுச் செல்ல காரணமாக அமைகிறது.

கண்கள் செய்யும் விபச்சாரம் பார்ப்பது என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புஹாரி 609)

இறைவன் திருமறையில் '(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் (24:30)

கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதன் மூலம் நாம் கண்களால் விபச்சாரம் செய்தவர்களாக ஆகிவிடுகிறோம் மேற்கண்ட குர்ஆன் ஹதீதை கண்ணியப்படுத்தும் வகையிலும் விபச்சாரத்தின் பக்கமும் நம்மை இட்டுச் செல்லாமலும் இருக்க கிரிக்கெட் போட்டிகளை காண்பதில் இருந்து தடுத்துக் கொள்ளுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.......

இளைஞர்களே! விழித்தெழுங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பஜர் மற்றும் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழாதவர்களை முனாபிக் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். காலை நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக விழித்தெழும் நாம் பஜ்ர் தொழுகைக்கு தூங்கிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.

இளைஞர்களே! உங்கள் கால்கள் விளையாட்டு மைதானங்கள் (Stadium) பக்கம் செல்வதில் இருந்தும் தவிர்த்து பள்ளிவாசல்கள் பக்கம் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
இளைஞர்களே! உங்கள் முன் இந்த சமுதாயத்தை தட்டி எழுப்பக்கூடிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது மறுமையில் உங்கள் பொறுப்புகளைப்பற்றி கண்டிப்பாக வினவப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

இளைஞர்களே! கிரிக்கெட் வீரர்களை Roll Modelலாக ஆக்காமல் திருக்குர்ஆனில் 85வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிற ஓரிறைக் கொள்கையை மக்கள் முன்னியைலில் எடுத்து வைப்பதற்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஈமானின் பக்கம் திரும்ப வைத்த இளைஞரை உங்களுடைய முன்மாதிரியாக (Roll Model) ஆக்கிக் கொள்ளுங்கள்.

இறைவன் இந்த சமுதாயத்தை கிரிக்கெட் என்ற படுகுழியில் விழுவதில் இருந்தும் காப்பாற்றி கரை சேர்ப்பானாக ஆமீன்.

நன்றி - புதுஆத்தூர்


0 comments

வத்திகானில் ஒருபால் உறவுக்காரர்கள்: போப்பாண்டவர் ஒப்புக்கொண்டாரா?

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமான வத்திகானின் நிர்வாக பொறுப்புதாரிகளிடையே ஊழல் பரவியிருப்பதையும், "தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ள காய்நகர்த்தும் ஒருபால் உறவுக்காரர்கள்" இருப்பதையும் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்னமெரிக்காவின் கத்தோலிக்க குருமார்களுடன் போப்பாண்டவர் நடத்திய தனிப்பட்ட கூட்டம் ஒன்றில், அசாதாரண வெளிப்படைத்தன்மையுடன் அவர் இக்கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

தென்னமெரிக்க கத்தோலிக்க குருமார்கள் பங்குகொண்ட இந்த சந்திப்பு பற்றி உருவாக்கப்பட்டிருந்த தொகுப்பு அறிக்கை ஒன்று சிலி நாட்டில் இணையதளம் ஒன்றிடம் கசியவிடப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் அந்த இணையதளம் இத்தொகுப்பை பிரசுரித்துவிட்டுள்ளது.

அசாதாரண வெளிப்படைத்தன்மை

கசிந்து வெளியாகியுள்ள குருமார்கள் கூட்டத்தின் அறிக்கையை வைத்துப் பார்க்கையில், வத்திகானத்தில் காணப்படும் பிரச்சினைகள் பற்றி போப்பாண்டவர் மிகவும் வெளிப்படையாக விவாதித்துள்ளார் என்று தெரிகிறது.
வத்திகானின் நிர்வாகத்தில் நல்லவர்கள், புனிதர்களாக மதிக்கப்படவேண்டியவர்கள் நிறைய பேர் இருந்தாலும், அதற்குள்ளும் ஊழலுக்கு இடமிருக்கத்தான் செய்கிறது என கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னமெரிக்க குருமார்களிடம் போப்பாண்டவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
வத்திகானின் நிர்வாகிகள் இடையே "தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்வதற்காக காய்நகர்த்தும் ஒருபால் உறவுக்காரர்கள்" சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது உண்மைதான் என போப்பாண்டவர் இந்த கூட்டத்தில் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக தன்னால் என்ன செய்ய முடியும் என தான் ஆராய்ந்துவருவதாக போப்பாண்டவர் கூறியிருந்தார்.

மிரட்டலுக்குள்ளாகும் ஒருபாலுறவுக்கார பாதிரியார்கள்

ஒருபால் உறவுக்காரர்களாக இருக்கின்ற கத்தோலிக்க குருமார் சிலர், தமது நலனை முன்னெடுப்பதற்காக இணைந்து செயலாற்றுகிறார்கள் என இத்தாலிய ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது.
ரகசியங்களை வெளியில் சொல்லுவோம் என இந்த ஒருபால் உறவுக்காரர்களை சிலர் மிரட்டி வருவதாகவும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அச்சமயம் வத்திகான் குற்றச்சாட்டுகளை வலுவாக மறுத்திருந்தது.
ஆனால் தென்னமெரிக்க குருமார்களிடம் போப்பாண்டவர் தற்போது தெரிவித்துள்ள விஷயங்கள் பற்றி வத்திகான் எவ்விதத்திலும் பதில் சொல்ல மறுத்துவிட்டது.
போப்பாண்டவருடன் தாம் மேற்கொண்ட உரையாடலின் தொகுப்பறிக்கை பிரசுரமாக நேர்ந்ததற்காக தென்னாப்பிரிக்க குருமார்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆழமான வருத்தம் தெரிவித்துள்ளதுடன் போப்பாண்டவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
0 comments

இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட யூசுப் கர்ளாவி (வீடியோ ஆதாரத்துடன்)

இஸ்லாத்தை கேளிக்கூத்தாக்கி இஸ்லாத்தின் புனித தன்மையை மாசுபடுத்தும் யூசுப் கர்ளாவியின் மற்றுமோர் இசைக்கச்சேரியில் சஞ்சரிக்கும் அனாச்சார முன்மாத்திரி. இஸ்லாத்தில் இசை ஹராமாக்கப் பட்டுள்ள போதும் எகிப்தை சேர்ந்த கபரே நடனமாடும் பிரபல பாடகி ஒருத்தி பாட்டுப் பாடும் போது இந்த கர்ளாவி அதனை எந்த வித தயக்கமும் இல்லாமல் ரசித்து கேற்பதனை இந்த வீடியோவில் காணலாம். இந்த கர்ளாவியைதான் நவீன ஷியா அமைப்பான ஜமதே இஸ்லாம் தனது இயக்கத்தின் தலை சிறந்த இமாமாக எடுத்துக் கொண்டுள்ளது. 


0 comments

நைஜீரியாவில் ஒரு-பால் திருமணம் புரிவோருக்கு 14 ஆண்டு சிறை

நைஜீரியாவில் ஒருபால் திருமணத்தை ஒரு குற்றச்செயலாக அறிவிக்கும்  சட்ட மூலத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அங்கு இனிமேல் ஒரு பால் திருமணம் புரிபவர்களுக்கு 14-ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.

இப்போது பிரதிநிதிகள் சபையும் அதனை நிறைவேற்றிவிட்டது.நாடாளுமன்றத்தின் செனட் சபை 18 மாதங்களுக்கு முன்னரே இந்த சட்டமூலத்தை அங்கீகரித்துவிட்டது.
அதிபர் குட்லக் ஜொனதன் கைச்சாத்திட்டதும் சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.
நைஜீரியாவில் ஒருபால் உறவுக் காரர்களுக்கான சங்கங்களையும் கேளிக்கை விடுதிகளையும் நடத்துவதும் இனிமேல் சட்டவிரோதமாகிவிடும்.
அதுபோல, ஒருபால் உறவுக்காரர்களின் படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதையும் இந்த சட்டம் தடை செய்கிறது.
இதேவேளை, இவ்வாறான சட்டங்கள் நைஜீரியாவில் எச்ஐவி- எயிட்ஸ் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவிகளை கடுமையாகப் பாதிக்கும் என்று விமர்சகர்கள் ஏற்கனவே கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இந்த ஓரினச் சேர்க்கை சம்மந்தமாக .... ஆதிமனிதனை படைத்த கடவுள் அந்த மனிதன் மகிழ்வுற இன்னொரு ஆன் மகனை படைக்கவில்லை. மாறாக அங்கே ஒரு பெண்ணைப் படைத்து அந்த பெண்ணை ஆதிமனிதனுக்கு ஜோடியாக்கி, அவர்களை இன்புற்று வாழச் செய்து அவ்விருவர் மூலமாக மனித சமுதயத்தை பல்கிப் பெருகச் செய்தான். ஒரு ஆனும் பெண்ணும் இணைவதுதான் இயற்கை. ஆனும் பெண்ணும் இணையும் வகையில் தான் அவர்களின் உடலமைப்பும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகள், பறவைகள், தாவரங்கள் இவைகள் கூட ஜோடி ஜோடியாகவே படைக்கப்பட்டு, அவைகள் கூட எதிர்பாலினத்தில் தான் இன்புற்று மகிழ்கின்றன. ஒரு ஆன் சிங்கம் இன்னொரு ஆன் சிங்கத்தை உறவுக்கு பயன்படுத்தியதாக காண முடியாது. காரணம் அவைகள் இயற்கையை மீறவில்லை. ஆனால் மனிதன் எங்கும் எதிலும் புதுமையாக செய்வேன் என்று கிளம்பி இன்று நாகரீகம் என்ற பெயரில் ஒருபால் உறவு எனும் ஓரினச்சேர்க்கையில் வந்து நிற்கிறான். இந்த ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது மட்டுமன்றி, மனிதனை அழித்தொழிக்கும் கொடிய எயிட்ஸ் நோய் போன்றவற்றை பரப்பும் காரணியாக உள்ளது. 

ஒரு சாமான்ய மனிதன் தவறு செய்தால் அவனை அந்த தவறிலிருந்து தடுத்து நிறுத்தும் கடிவாளம் போடவேண்டிய இடத்தில் உள்ள நீதிமன்றம், கடந்த 2009ம் ஆண்டு, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற ஒரு தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பினை எதிர்த்து பாரதீய ஜனதா தலைவர் பி.பி.சிங்கால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த ஓரினச் சேர்க்கை விசயத்தில் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஓரினச் சேர்க்கை குற்றம்தான்' என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் '(இருவர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற ஐகோர்ட்டு தீர்ப்பில் எந்த சட்டத்தவறும் இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது' என்றும் முன்னுக்குப் பின் முரணாக வாதங்கள் வயப்பட்டு நீதிபதிகளின் கண்டனத்திற்கு இலக்கான மத்திய அரசு, இறுதியில் ஒரு வழியாக,


ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். ஐகோர்ட்டு தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். ஐகோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். அதற்கு எதிராக அரசு அப்பீல் செய்யவில்லை'' என்று முடித்துக் கொண்டது. இனி உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, ஓரினச்சேர்க்கை மீதான பார்வையிலும் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏற்கனவே ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசும் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து ஊதிவிட்ட நிலையில், இனி ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. ஆனால் எதார்த்தம் என்ன? 

இந்த விசயத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2009 ல் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ள, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற கருத்துப் பிரகாரம், இதே உரிமையை விபச்சாரம் மற்றும் கள்ளக்காதல், முறைகேடான உறவில் ஈடுபடுபவர்களும் கையிலெடுத்தால், ஒரு ஆனும் பெண்ணும் அந்தரங்கமான ஒரு இடத்தில் இருவரும் சம்மதித்து திருமணத்திற்கு செய்யாமலேயே கூடினாலும் யாரும் தடுக்க முடியாதே! விடுதிகளில் விபச்சாரம் செய்யும் ஆனும் பெண்ணும், விரும்பித்தானே செய்கிறார்கள். அவர்களை காவல்துறை கைது செய்வதும் நீதிபதிகளின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தவறுதானே! எந்த ஆனும் எந்த பெண்ணும் பரஸ்பரம் சம்மதித்து உறவு கொண்டால் அதை தடுக்கும் உரிமை இல்லாமல் போகுமே? அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா? இதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறதா? இதுதான் மக்கள் நலன் நாடும் தீர்வுகளா? சிந்திக்க வேண்டும். ஒரு பாலினச் சேர்க்கை என்பது உரிமை சம்மந்தப்பட்டதல்ல. அது ஒழுக்ககேட்டின் உச்சம். அது தடைசெய்யப் பட்டே தீரவேண்டிய ஒரு மிகப்பெரிய தீமையாகும். இதைப்பற்றி திருமறைக் குர்ஆன் ஒரு தீர்க்கமான தீர்வை சொல்கிறது. இதுபோன்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மாபாவிகள் நிலை என்னவானது என்று விளக்குகிறது.

ஓரினச் சேர்க்கையை சர்வசாதரணமாக செய்துவந்த ஒரு பகுதி மக்களிடம் கடவுளின் தூதராக லூத் [அலை] அவர்கள் வருகிறார்கள். பல்வேறு உபதேசங்களை அந்த மக்களுக்கு வழங்குகிறார்கள். பெண்களை விட்டுவிட்டு வேறு வழியில் நீங்கள் முறையற்ற தீய செயலை செய்கிறீர்களா? இதோ என்னுடைய புதல்விகள்; உங்களுக்கு திருமணம் செய்து வாழ பரிசுத்தமானவர்கள் என்றெல்லாம் கடவுளின் தூதர் லூத் [அலை] அவர்கள் சொன்ன அறிவுரைக்கு அந்த மக்கள் செவியை சென்றடையவில்லை. இறுதியாக, ''அந்த மக்கள் வசித்த அவ்வூரின் பூமியின் மேல் பரப்பை கீழ்ப் பரப்பாக மாறினோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழிவித்தோம் என்று குர்'ஆன் விவரிக்கிறது. ஆக இந்த ஓரினச் சேர்க்கை என்பது இறைவனின் கோபத்திற்கு இலக்காக்கும் செயல் என்பதும், இயற்கைக்கும் முரணான ஒன்று என்பதும், இவ்வாறான தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நீதிமன்றங்கள் அறியவேண்டிய ஒன்றாக உள்ளது. 

மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தீர்ப்புகள் வருகின்றன,,ஆனால் ஒழுக்கத்திற்கு பெயர்போன  இந்தியாவில் இது கேள்விக்குறியாகவே உள்ளது...பொருத்துதிருந்து பார்ப்போம் ,,காலங்கள் கனியும்,தீர்ப்புகள் மாறும் இன்ஷா அல்லாஹ் .......

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger