Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label கம்பியூட்டர் - தகவல். Show all posts
Showing posts with label கம்பியூட்டர் - தகவல். Show all posts

கட்டாய பாதுகாப்பு சோதனைகள்.......

கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கம்ப்யூட்டர் மலரின் ஒவ்வொரு வார இதழிலும், பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ஆகியவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. ஒரு சில எச்சரிக்கைகள் குறித்து எழுதப்படும்போது, அவற்றைக் குறிப்பிட்டு நமக்கு தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும், மின் அஞ்சல் செய்திகளும் வருகின்றன. சென்ற வாரம், மதுரை வாசகர் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய மொத்த வழிகளை முத்துக்களாய்த் தந்துவிடுங்களேன் என்று கேட்டுக் கொண்டார். அந்த வகையில் சிந்தித்த போது கிடைத்த சில எளிய ஆனால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.

1. சரியான ஸ்டாண்டர்ட் விண்டோஸ் அக்கவுண்ட்:விண்டோஸ் எக்ஸ்பியில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என்று ஒன்று அறிமுகப்படுத்தியது. ஏனென்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் யூசர் அக்கவுண்ட் வரையறை செய்யப்பட்டு இருந்தது. எனவே, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஸ்டாண்டர்ட் அக்கவுண்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்டு அட்மினிஸ்ட்ரேட்டர் இயக்கம் தந்த பிரச்னை தீர்க்கப்பட்டது. இதன் மூலம் சரியான அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் கொடுத்து மட்டுமே செட்டிங்ஸ் மாற்றப்பட முடியும். கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மற்றும் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்களால் அதிக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவதில்லை. இந்த User Account Control வசதியை நாம் மேற்கொள்ள வேண்டும்.

2. பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் யூசர் அக்கவுண்ட்:ஒவ்வொரு யூசர் அக்கவுண்ட்டிற்கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கும் முறையின் மூலம், நம் அனுமதியின்றி சிஸ்டத்திற்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல், Control Panel, User Accounts and Family Safety, User Accounts எனச் சென்று ‘Create a password for your account’ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். 

3. விண்டோஸ் அப்டேட் செட்டிங்ஸ்: சிஸ்டத்தினை அப்டேட் செய்திடுக என்று மெசேஜ் பெறுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், இதனை அலட்சியப்படுத்துவது அதற்குச் சரியான தீர்வல்ல. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில், கண்ட்ரோல் பேனல் திறந்து, System and Security என்பதில் கிளிக் செய்திடுக. அதன் பின்னர் Windows Upate அதன் பின் Change settings எனச் சென்று, அப்டேட் செய்திடுவதற்கான செட்டிங்ஸ் அமைக்கவும்.

4. செக்யூரிட்டி ஸ்கேன் செயல்படுத்துக: வாரம் ஒருமுறையாவது, ஹார்ட் ட்ரைவ் முழுவதும் ஸ்கேன் செய்திட வேண்டும். என்னதான், விண்டோஸ் மலிசியஸ் சாப்ட்வேர் பாதுகாப்பு மற்றும் ஆண்ட்டி வைரஸ் இயங்கினாலும், இந்த சோதனையையும் மேற்கொள்வது அவசியம்.

5. யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் செயல்படுத்துக: எக்ஸ்பி தொடங்கி, பின்னர் வந்த சிஸ்டங்களில் சந்தித்த அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, யூசர் அக்கவுண்ட் தற்போது விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில் செயல்படுகின்றன. இவற்றைச் செயல்படுத்துவது அவசியம். 

6. விண்டோஸ் ஆண்ட்டி வைரஸ் சாதனங்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தந்துள்ளது. இது தவிர, கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் பல தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தினாலும், மைக்ரோசாப்ட் தந்துள்ள புரோகிராமினையும் பயன்படுத்த வேண்டும். 

7. பயர்வால் பாதுகாப்பு: கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பிற்குப் பயன்படுத்தும் ரௌட்டர் ஆகியவற்றில் பயர்வால் பாதுகாப்பினை ஏற்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்துவது, கூடுதலான பாதுகாப்பினைத் தரும்.

8. வை-பி செட்டிங்ஸ் அமைப்பு: கம்ப்யூட்டரில் உள்ள வை-பி செட்டிங்ஸ் முறை பழைய WEP முறையில் இருந்தால், அதனை மாற்றி அமைக்க வேண்டும். பழைய முறை பாதுகாப்பற்றது என இப்போது பயன்படுத்தப் படுவதில்லை. தானாக, வை-பி இணைப்பினைத் தேடும் வகையில் செட்டிங்ஸ் இருந்தாலும் மாற்றி அமைக்க வேண்டும். 

9. புதிய வெப் பிரவுசர்: எப்போதும் நாம் பயன்படுத்தும் இணைய பிரவுசர், அண்மைக் காலத்தில் மேம்படுத்தப் பட்டுத் தரப்படுவதாக இருக்க வேண்டும். இதனால், புதிய பிரவுசர்களில் தரப்படும் பாதுகாப்பு வசதி நமக்குக் கிடைக்கும். 

10. அறியாத அழைப்புகள்: தேவையற்ற, நாம் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை அறவே ஒதுக்க வேண்டும். அறிந்தவர்களிடமிருந்து கூட எதிர்பாராத வேளைகளில் வரும் அழைப்புகளைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

11. வெவ்வேறு பாஸ்வேர்ட்: இணைய செயல்பாடுகள் அனைத்திற்குமாக, ஒரே பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் ஒரு பிரவுசரில் இது கண்டறியப்பட்டால், நீங்கள் முற்றிலுமாக உங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.

12. பாஸ்வேர்ட் சோதனை: பே பால் மற்றும் கூகுள் போன்ற நிறுவன தளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இப்போதெல்லாம் இரு நிலை பாதுகாப்பு சோதனை வசதி தரப்பட்டுள்ளது. இவற்றில் நுழையும் போது, உங்கள் மொபைல் போனுக்கு பாதுகாப்பு குறியீடு அனுப்பப்பட்டு, அதன் மூலமே, நீங்கள் இவற்றை அணுகும் வகையில் இது அமைக்கப்படுகிறது. இதனை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

நன்றி - கிங்க்டோம் 
0 comments

ஈசெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய லெப்டொப் பாதுகாப்பு கட்டமைப்பு


லெப்டொப் காணாமல்போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதனை மிக இலகுவாக கண்டுபிடிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு கட்டமைப்பொன்றை ஈசெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Smart Security 6 என்ற பெயரைக்கொண்ட இப்புதிய பாதுகாப்பு கட்டமைப்பின் ஊடாக லெப்டொப்களின் பாதுகாப்பு உறுதிப்படுகின்றது. 

இந்த பாதுகாப்பு கட்டமைப்பில் பதிவு செய்துள்ள பாவனையாளர் ஒருவரது லெப்டொப் காணாமல்போனாலோ அல்லது திருடப்பட்டாலோ www.myeset.com என்ற இணையத்திற்கு அதனை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் சில நிமிடங்களில் கணினி இருக்கும் இடத்தையும் அதனை திருடியவரின் புகைப்படத்தையும் உரிமையாளர் அறிந்துகொள்வதற்கு இதுவழி செய்யும். 

இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஈசெட்டின் இலங்கைக்கான பிரதிநிதிகளின் தாய் நிறுவனமான டி.சி.எஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷியான் அனன் ´லெப்டொப் கணினியை திருடியவர் இணையத்தளத்தில் பிரவேசித்தவுடன் இந்த பாதுகாப்பு கட்டமைப்பு அவரது புகைப்படத்தை வெப்கெம்மில் பதிவு செய்யும். 

அத்துடன் கூகுல் மெப் உதவியுடன் கணினி இருக்கும் இடத்தையும் இனங்கண்டுகொள்ளும். அத்துடன் கணினியின் உரிமையாளருக்கு உடனடியாக திருடியவரின் புகைப்படம், இருக்கும் இடம் ஆகிவற்றை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும். அத்துடன் இந்த தகவல்களை பொலிசாரால் கூட பொருட்படுத்த முடியாமல் போய்விடும்" என தெரிவித்தார். 

அத்துடன் இந்த விசேட அம்சங்கள் தவிர டெபிட் கிரடிட் கார்ட்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளின்போதும் அந்த கார்ட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட திட்டங்கள் உள்ள அதேவேளை இதன்மூலம் எவ்வித தயக்கமுமின்றி இணையத்தளம் ஊடாக கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்பின் ஊடாக உள்நுழையக்கூடிய Malware எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருளிலிருந்தும் கணினியை பாதுகாக்க இந்த கட்டமைப்பால் முடியும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பானது உலகம் முழுவதிலும் பிரபலமடைந்த Smart Security 5 மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். 

இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பு தவிர ஈசெட்டினால் இன்னும் சில புதிய உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Nod32 Antivirus உற்பத்தியும் அவற்றில் அடங்குகின்றது. இது எவ்விதத்திலும் கணினியின் வேகத்தை குறைக்காத அதேநேரம் பாவனையாளர்களது நடவடிக்கைகளுக்கும் எவ்விதமான இடையூறையும் ஏற்படுத்தாது. 

அத்துடன் கணினியை பாதிக்கும் வைரஸ்கள் மற்றும் Spyware எனப்படும் உளவுமென்பொருள் ஆகியவற்றிலிருந்து கணினிக்கு பாதுகாப்பை வழங்;குகின்றது. 25ஆண்டுகளாக கணினிகளை பாதுகாக்க அயராது செயற்படும் ஈசெட்டின் புதிய படைப்பாக இது காணப்படுகின்றது.
 
இலங்கை முஸ்லிம் 
0 comments

TERACOPY மென்பொருள் இலவசமாக


Teracopy என்னும் மென்பொருள் ஒரு கோப்பை வேகமாக copy செய்ய உதவுகிறது பெரும்பாலும் அனைவரும் இந்த மென்பொருளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அதனால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன் ... 

windows 8 இல் அனைவரும் ஒரு பிரச்னையை சந்திதிருபீர்கள் அது என்னவென்றால் windows 8இல்  ஒரு கோப்பை copy செய்யலாம் என்று நினைத்தால் அந்த கோப்பு paste ஆக அதிக நேரம் பிடிக்கும் windows 8இன் copy செய்யும் வேகம் windows 7 ஐ விட மிக மெதுவாக இருக்கும் ....
இது உங்களில் பல பேரை எரிச்சலடைய செய்திருக்கும் அதை தீர்த்துவைக்க இந்த மென்பொருள் பயன்படும் ...


இந்த மென்பொருளின் pro versionஐ நான் உங்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளேன் ...


இங்கே சென்று முழு பதிப்பையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் ...
நன்றி - கிங்க்டோம் 

0 comments

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...




Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு 
எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் 
என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை 
பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் 
தள்ளிபோக்கொண்டிருக்கும்.


ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் 
நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் 
ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை 
நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் 
தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே 
தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை 
உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு 
தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் 
இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை 
வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....


SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் 
எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று 
தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் 
அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. 
அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க 
வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை 
தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள 
Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை 
கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை 
விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core 
என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் 
அது இன்றைய 
நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz 
என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் 
ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் 
நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் 
இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் 
Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை 
விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக 
இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் 
இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை 
திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்
பொழுது 
கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக 
முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் 
புரோகிராம்களை
பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு 
முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட 
RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். 
( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது 
அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். 
பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் 
கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் 
அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். 
கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் 
எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் 
அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் 
கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் 
மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை 
இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு 
விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் 
காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் 
உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை 
என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் 
பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் 
அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால்
 உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய 
இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது 
SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. 
இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் 
டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் 
எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் 
வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க 
தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் 
அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். 
இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) 
என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் 
விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு 
இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது 
என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் 
அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் 
செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக 
இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது 
மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க 
வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் 
ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் 
என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் 
இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது 
சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது 
இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். 
அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics 
(shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் 
எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் 
நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் 
அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card 
கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. 
கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் 
இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் 
நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் 
வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி 
உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி 
குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card 
இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் 
பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள 
லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் 
சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் 
சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் 
லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 
ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். 
ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் 
மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் 
மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு 
அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium 
வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற 
வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட 
Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு 
மிக சிறந்தது.  

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் 
நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) 
சிறப்புடன் பயன்படுத்த முடியாது. 
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் 
இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா 
என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ 
கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் 
வாங்கும் லேப்டாப்பில் 
HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் 
மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.
tnanks  to kingdom 
0 comments

ஒரு தளத்தை முழுவதுமாக டவுன்லோட் செய்து இணையம் இல்லாதபோதும் பயன்படுத்தலாம் !!


இனிமேல் இணைய இணைப்பு இல்லாதபோது கூட நாம் விரும்பிய  தளத்தை  பயன்படுத்தலாம் ...

உங்களுக்கு பிடித்த தளத்தை முழுவதுமாக டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால் இணையம் இல்லாதபோது கூட அணைத்து பக்கங்களையும் பயன்படுத்திகொள்ளலாம் ....

இவ்வாறு ஒரு தளத்தை முழுவதுமாக டவுன்லோட் செய்வது சாத்தியமா என்று நீங்கள் சந்தேகிக்கலாம் ...ஆனால் அந்த சந்தேகம் இனி உங்களுக்கு வேண்டாம் ஏனெனில் இது சாத்தியமே என்பதால் தான் ...

தோழர் techthangam அவர்கள் இது போன்று ஒரு தளத்தை டவுன்லோட் செய்ய ஒரு மென்பொருளை அறிமுகபடுத்தினார் ஆனால் அது பிளாக்கர் தளங்களை ஆதரிக்கவில்லை ஆகையால் இணையத்தில் தேடியதில் இலவசமாக ஒரு நல்ல மென்பொருள் கண்ணிற்கு எட்டியது ....

அந்த மென்பொருளின் பெயர் HTTrack Website Copier ....

மென்பொருளை இங்கே சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ...

மென்பொருளை எப்படி உபயோகிப்பது பற்றி கீழுள்ள படங்களை பார்த்து தெளிவுபெருங்கள் ...

1.install  செய்தவுடன் மென்பொருளை திறந்துகொள்ளவும் ...

2 .அடுத்து next என்பதை கொடுத்தல் கீழுள்ள படத்தை போன்று வரும்

பிறகு next கொடுக்கவும் ..

3 .

4.பிறகு next என்பதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ வரும் அதில் finish என்பதை கிளிக் செய்தால் தளம் டவுன்லோட் அக ஆரம்பிக்கும் ....


இனி பிடித்த தளத்தை டவுன்லோட் செய்து இணையம் இல்லாத போதும் படித்து மகிழுங்கள் ....
எதாவது சந்தேகம் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் 
நன்றி - கிங்டம் 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger