Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

கட்டாய பாதுகாப்பு சோதனைகள்.......

கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கம்ப்யூட்டர் மலரின் ஒவ்வொரு வார இதழிலும், பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ஆகியவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. ஒரு சில எச்சரிக்கைகள் குறித்து எழுதப்படும்போது, அவற்றைக் குறிப்பிட்டு நமக்கு தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும், மின் அஞ்சல் செய்திகளும் வருகின்றன. சென்ற வாரம், மதுரை வாசகர் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய மொத்த வழிகளை முத்துக்களாய்த் தந்துவிடுங்களேன் என்று கேட்டுக் கொண்டார். அந்த வகையில் சிந்தித்த போது கிடைத்த சில எளிய ஆனால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.

1. சரியான ஸ்டாண்டர்ட் விண்டோஸ் அக்கவுண்ட்:விண்டோஸ் எக்ஸ்பியில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என்று ஒன்று அறிமுகப்படுத்தியது. ஏனென்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் யூசர் அக்கவுண்ட் வரையறை செய்யப்பட்டு இருந்தது. எனவே, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஸ்டாண்டர்ட் அக்கவுண்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்டு அட்மினிஸ்ட்ரேட்டர் இயக்கம் தந்த பிரச்னை தீர்க்கப்பட்டது. இதன் மூலம் சரியான அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் கொடுத்து மட்டுமே செட்டிங்ஸ் மாற்றப்பட முடியும். கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மற்றும் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்களால் அதிக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவதில்லை. இந்த User Account Control வசதியை நாம் மேற்கொள்ள வேண்டும்.

2. பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் யூசர் அக்கவுண்ட்:ஒவ்வொரு யூசர் அக்கவுண்ட்டிற்கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கும் முறையின் மூலம், நம் அனுமதியின்றி சிஸ்டத்திற்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல், Control Panel, User Accounts and Family Safety, User Accounts எனச் சென்று ‘Create a password for your account’ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். 

3. விண்டோஸ் அப்டேட் செட்டிங்ஸ்: சிஸ்டத்தினை அப்டேட் செய்திடுக என்று மெசேஜ் பெறுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், இதனை அலட்சியப்படுத்துவது அதற்குச் சரியான தீர்வல்ல. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில், கண்ட்ரோல் பேனல் திறந்து, System and Security என்பதில் கிளிக் செய்திடுக. அதன் பின்னர் Windows Upate அதன் பின் Change settings எனச் சென்று, அப்டேட் செய்திடுவதற்கான செட்டிங்ஸ் அமைக்கவும்.

4. செக்யூரிட்டி ஸ்கேன் செயல்படுத்துக: வாரம் ஒருமுறையாவது, ஹார்ட் ட்ரைவ் முழுவதும் ஸ்கேன் செய்திட வேண்டும். என்னதான், விண்டோஸ் மலிசியஸ் சாப்ட்வேர் பாதுகாப்பு மற்றும் ஆண்ட்டி வைரஸ் இயங்கினாலும், இந்த சோதனையையும் மேற்கொள்வது அவசியம்.

5. யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் செயல்படுத்துக: எக்ஸ்பி தொடங்கி, பின்னர் வந்த சிஸ்டங்களில் சந்தித்த அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, யூசர் அக்கவுண்ட் தற்போது விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில் செயல்படுகின்றன. இவற்றைச் செயல்படுத்துவது அவசியம். 

6. விண்டோஸ் ஆண்ட்டி வைரஸ் சாதனங்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தந்துள்ளது. இது தவிர, கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் பல தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தினாலும், மைக்ரோசாப்ட் தந்துள்ள புரோகிராமினையும் பயன்படுத்த வேண்டும். 

7. பயர்வால் பாதுகாப்பு: கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பிற்குப் பயன்படுத்தும் ரௌட்டர் ஆகியவற்றில் பயர்வால் பாதுகாப்பினை ஏற்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்துவது, கூடுதலான பாதுகாப்பினைத் தரும்.

8. வை-பி செட்டிங்ஸ் அமைப்பு: கம்ப்யூட்டரில் உள்ள வை-பி செட்டிங்ஸ் முறை பழைய WEP முறையில் இருந்தால், அதனை மாற்றி அமைக்க வேண்டும். பழைய முறை பாதுகாப்பற்றது என இப்போது பயன்படுத்தப் படுவதில்லை. தானாக, வை-பி இணைப்பினைத் தேடும் வகையில் செட்டிங்ஸ் இருந்தாலும் மாற்றி அமைக்க வேண்டும். 

9. புதிய வெப் பிரவுசர்: எப்போதும் நாம் பயன்படுத்தும் இணைய பிரவுசர், அண்மைக் காலத்தில் மேம்படுத்தப் பட்டுத் தரப்படுவதாக இருக்க வேண்டும். இதனால், புதிய பிரவுசர்களில் தரப்படும் பாதுகாப்பு வசதி நமக்குக் கிடைக்கும். 

10. அறியாத அழைப்புகள்: தேவையற்ற, நாம் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை அறவே ஒதுக்க வேண்டும். அறிந்தவர்களிடமிருந்து கூட எதிர்பாராத வேளைகளில் வரும் அழைப்புகளைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

11. வெவ்வேறு பாஸ்வேர்ட்: இணைய செயல்பாடுகள் அனைத்திற்குமாக, ஒரே பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் ஒரு பிரவுசரில் இது கண்டறியப்பட்டால், நீங்கள் முற்றிலுமாக உங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.

12. பாஸ்வேர்ட் சோதனை: பே பால் மற்றும் கூகுள் போன்ற நிறுவன தளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இப்போதெல்லாம் இரு நிலை பாதுகாப்பு சோதனை வசதி தரப்பட்டுள்ளது. இவற்றில் நுழையும் போது, உங்கள் மொபைல் போனுக்கு பாதுகாப்பு குறியீடு அனுப்பப்பட்டு, அதன் மூலமே, நீங்கள் இவற்றை அணுகும் வகையில் இது அமைக்கப்படுகிறது. இதனை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

நன்றி - கிங்க்டோம் 
0 comments

HTML Code 'ஐ ஒரு அழகான பெட்டிக்குள் வைப்பது எப்படி?



நமது பிளாக்/தளத்தின் லோகோ மற்றவர்க்கு வழங்குவதற்கும், மற்றும் டூல்பார், Widget வழங்குவதற்கும் HTML மற்றும் JavaScript போன்ற இனைய மொழிகளைதான் பயன்படுத்துகிறோம்.  அதை வழங்குவதற்கு ஒரு அழகான பெட்டியினுள்
வைத்து வழங்கினால் இடம் அதிகமாக பிடிக்காது, அழகாகவும் இருக்கும்.  சரி எப்படி இந்த பெட்டியை எப்படி உருக்குவது என்று பார்க்கலாம்.


கீழே உள்ள படத்தில் உள்ளது போல உங்கள் HTML Code தோன்றும்.
முதலில் உங்கள் பிளாக்கர் தளத்தில் உள்நுழைந்துக் கொள்ளுங்கள்.
 
பிறகு Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

<textarea name="textarea" cols="40rows="4" wrap="VIRTUAL">=====your
code=====</textarea>
பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் இருக்கும் your code என்பதை நீக்கிவிட்டு உங்களது HTML Code 'ஐ கொடுங்கள்.
பச்சை வண்ணத்தில் உள்ள cols="40" என்பதுதான் பெட்டியின் உயரம் உங்களுக்கு வேண்டிய அளவு உயரத்தை அமைத்துக் கொள்ளலாம்.

நீலே வண்ணத்தில் உள்ள rows="4" என்பதுதான் பெட்டியின் அகலம் உங்களுக்கு வேண்டிய அளவு அகலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

பிறகு Widget 'ஐ சேமித்துக் கொள்ளுங்கள் இப்போது உங்கள் வலைபதிவில் HTML Code அழகான பெட்டிக்குள் தோன்றும்.

நன்றி- tamilcomputer

0 comments

இரகசிய கோப்புகளை பகிர்ந்துகொள்ள wetransfer.com


மிகச்சிறந்த சேவையை வழங்கிறது இத்தளம். உங்கள் கோப்புகளை (Files) தரவேற்றம் செய்து , அதை உங்கள் நண்பர்களுக்கு Email ஆகவோ, அல்லது லிங்க்(LINK) ஆகவோ அனுப்பும் வழிமுறையை நமக்கு இலவசமாக வழங்குகிறது இத்தளம்.
சாதாரணமாக இதை மின்னஞ்சலிலும் செய்ய முடியுமே என்கிறீர்களா? மின்னஞ்சலில் குறைந்த அளவுடைய கோப்புகளை மட்டுமே இணைத்து அனுப்ப முடியும். ஆனால் இத்தளத்தில் 2GBவரைக்கும் உள்ள

கோப்புகளை ஒரே நேரத்தில் தரவேற்றம் செய்து, அதை உங்கள் நண்பர்கள் தரவிறக்கம் செய்ய வழிவகை செய்ய முடியும்.
குறிப்பிட்டு சொல்வதெனில் உடனடியாக இணையத்தின் மூலம் கணக்கு எதுவும் தொடங்காமலேயே இத்தளத்தைப் பயன்படுத்த முடியும்.
இதில் நீங்கள் பகிரும் கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும். 15 நாட்களுக்கு நீங்கள் பகிரும் கோப்புகள் எவையும் அழியாமல், மற்றவர்களுக்கும் தெரியாமல் பாதுகாப்புடன் இருக்கும். இரண்டு GB கொள்ளவு வரைக்கும் நீங்கள் உங்கள் கோப்புகளை (documents-files) இத்தளத்தினூடாக பகிர்ந்துகொள்ளலாம்.
எப்படி பயன்படுத்துவது?
இந்த தளத்தை திறந்தவுடன் ஒரு வட்டம் சுற்றிக்கொண்டிருக்கும். அதன் மீது மௌஸ் கர்சரை வைத்தால் ஒரு செய்தி தோன்றும். அதில் ok செய்தவுடன் அடுத்தப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
அப்பக்கத்தில் அவர்களுடைய விதிமுறைகளை(WeTransfer Terms of Service and Privacy Policy) ஏற்றுக்கொண்டு I agree என்பதை சொடுக்கியவுடன் அடுத்த பக்கம் தோன்றும்.
அதில் Add files என்பதைச் சொடுக்கி நீங்கள் பகிர நினைக்கும் கோப்புகளை தரவேற்றம் செய்துவிடலாம்.
அடுத்து தேவைப்பட்டால் add more files என்பதை கிளிக் செய்து மேலதிக கோப்புகளையும் செய்துகொள்ள முடியும். தரவேற்றம் முடிந்த பிறகு, கீழுள்ள பெட்டியில் Friend’s email என்பதை சொடுக்கி உங்களுடைய நண்பருடைய மின்னஞ்சல் முகவரியும், Your email என்பதைச் சொடுக்கி உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிடுங்கள்.
அடுத்து கீழிருக்கும் பெட்டியில் நீங்கள் உங்கள் நண்பருக்கும் கொடுக்கும் செய்தியை தட்டச்சிடுங்கள்.
இறுதியாக கீழுள்ள Transfer என்பதை சொடுக்குங்கள். இப்பொழுது Transferring நடக்கும். இறுதியாக Transfer complete என்ற செய்தி கிடைக்கும். கீழிருக்கும் Okay என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.. உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு உறுதிபடுத்தும் மின்னஞ்சலும்(confirmation email with download link), உங்களுடைய நண்பருக்கு ஒரு மின்னஞ்சலும் சென்றுவிடும்.
அந்த மின்னஞ்சல்களில் நீங்கள் தரவேற்றம்(UPLOAD) செய்த கோப்புகளை தரவிறக்கம்(DOWNLOAD) செய்வதற்கான சுட்டி இருக்கும்.
உங்கள் நண்பர் அந்த சுட்டியை CLICK செய்தவுடன் WE TRANSFER தளம் திறக்கும். அத்தளத்தில் கோப்பைத் தரவிறக்க DOWNLOAD என்ற பட்டன் இருக்கும். அதைக் கிளிக் செய்து உங்கள் நண்பர் அந்த கோப்பை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கோப்பை தரவிறக்கம் செய்துகொண்ட பிறகு, அந்த கோப்பானது We Transer தளத்திலிருந்து நீக்கப்படும்.
உங்களுக்கு வந்த மின்னஞ்சலிலேயே அந்த கோப்பு எந்த தேதியில் அழிக்கப்படும் என்பதையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
வெகு தொலைவில் உள்ள நண்பர்களுக்கு இணையத்தின் மூலம் கோப்புகளை உடனடியாக பரிமாற இத்தளம் ஏற்றது. இரண்டு GB வரையுள்ள கோப்புகளை எந்த ஒரு ரெஜிஸ்டரேசனும் இல்லாமல் ஒரே கிளிக்கில் அனுப்ப முடிவதே இத்தளத்தின் மிகப்பெரிய சிறப்பாக இருக்கிறது.
அவசரத் தேவைக்கு, உங்களிடம் உள்ள 2GB வரையுள்ள பெரிய கோப்புகளை உடனடியாக தரவேற்றம் செய்து, உங்கள் நண்பரை பாதுகாப்பாக Download செய்துகொள்ள வைக்கலாம்.
நீங்கள் உள்ளிடும் மின்னஞ்சலுக்குரியவரைத் தவிர மற்ற நபர்கள் யாரும் அந்த கோப்புகளை தரவிறக்கம் செய்ய முடியாது என்பதே இத்தளத்தின் சிறப்பம்சம்.
அதனால் மிக முக்கியமான கோப்புகள், தனிப்பட்ட ரகசிய கோப்புகள் ஆகியவை இத்தளத்தின் மூலம் உங்கள் நண்பர்கள், அலுவலர்கள், குடும்பத்தினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள முடியும்.
தளத்திற்கான URL: https://www.wetransferbeta.com/
மிக்க நன்றி நண்பர்களே…!
-நன்றி - அறிவுலகம் 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger