ஈசெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய லெப்டொப் பாதுகாப்பு கட்டமைப்பு


லெப்டொப் காணாமல்போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதனை மிக இலகுவாக கண்டுபிடிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு கட்டமைப்பொன்றை ஈசெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Smart Security 6 என்ற பெயரைக்கொண்ட இப்புதிய பாதுகாப்பு கட்டமைப்பின் ஊடாக லெப்டொப்களின் பாதுகாப்பு உறுதிப்படுகின்றது. 

இந்த பாதுகாப்பு கட்டமைப்பில் பதிவு செய்துள்ள பாவனையாளர் ஒருவரது லெப்டொப் காணாமல்போனாலோ அல்லது திருடப்பட்டாலோ www.myeset.com என்ற இணையத்திற்கு அதனை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் சில நிமிடங்களில் கணினி இருக்கும் இடத்தையும் அதனை திருடியவரின் புகைப்படத்தையும் உரிமையாளர் அறிந்துகொள்வதற்கு இதுவழி செய்யும். 

இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஈசெட்டின் இலங்கைக்கான பிரதிநிதிகளின் தாய் நிறுவனமான டி.சி.எஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷியான் அனன் ´லெப்டொப் கணினியை திருடியவர் இணையத்தளத்தில் பிரவேசித்தவுடன் இந்த பாதுகாப்பு கட்டமைப்பு அவரது புகைப்படத்தை வெப்கெம்மில் பதிவு செய்யும். 

அத்துடன் கூகுல் மெப் உதவியுடன் கணினி இருக்கும் இடத்தையும் இனங்கண்டுகொள்ளும். அத்துடன் கணினியின் உரிமையாளருக்கு உடனடியாக திருடியவரின் புகைப்படம், இருக்கும் இடம் ஆகிவற்றை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும். அத்துடன் இந்த தகவல்களை பொலிசாரால் கூட பொருட்படுத்த முடியாமல் போய்விடும்" என தெரிவித்தார். 

அத்துடன் இந்த விசேட அம்சங்கள் தவிர டெபிட் கிரடிட் கார்ட்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளின்போதும் அந்த கார்ட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட திட்டங்கள் உள்ள அதேவேளை இதன்மூலம் எவ்வித தயக்கமுமின்றி இணையத்தளம் ஊடாக கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்பின் ஊடாக உள்நுழையக்கூடிய Malware எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருளிலிருந்தும் கணினியை பாதுகாக்க இந்த கட்டமைப்பால் முடியும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பானது உலகம் முழுவதிலும் பிரபலமடைந்த Smart Security 5 மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். 

இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பு தவிர ஈசெட்டினால் இன்னும் சில புதிய உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Nod32 Antivirus உற்பத்தியும் அவற்றில் அடங்குகின்றது. இது எவ்விதத்திலும் கணினியின் வேகத்தை குறைக்காத அதேநேரம் பாவனையாளர்களது நடவடிக்கைகளுக்கும் எவ்விதமான இடையூறையும் ஏற்படுத்தாது. 

அத்துடன் கணினியை பாதிக்கும் வைரஸ்கள் மற்றும் Spyware எனப்படும் உளவுமென்பொருள் ஆகியவற்றிலிருந்து கணினிக்கு பாதுகாப்பை வழங்;குகின்றது. 25ஆண்டுகளாக கணினிகளை பாதுகாக்க அயராது செயற்படும் ஈசெட்டின் புதிய படைப்பாக இது காணப்படுகின்றது.
 
இலங்கை முஸ்லிம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger