Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

3 மில்லியன் டாலர் விலையில் ஓர் ஆடம்பர மோட்டார் இல்லம்

உலகின் மிக விலையுயர்ந்த டபுள்டெக்கர் மோட்டார் இல்லம் ஒன்றை துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வாங்கியிருக்கிறார். ஆஸ்திரியாவை சேர்ந்த எலிமென்ட் பிளாஸோ இந்த மோட்டார் ஹோமோ வடிவமைத்து கொடுத்துள்ளது. இரண்டடுக்கு நடமாடும் பங்களாவாக கட்டப்பட்டிருக்கும் இந்த மோட்டார் இல்லத்தில் இருக்கும் வசதிகள் ஆடம்பரத்தின் உச்சம்.

பிரம்மாண்டம் 

40
அடி நீளத்தில் இரண்டடுக்கு கொண்டதாக இந்த மோட்டார் இல்லம் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் விசாலமான ஹால் போன்ற அறை உள்ளது. அதில், பெரிய ஷோபா மற்றும் பொருட்கள் வைப்பதற்கான வசதியும் உண்டு.

மினி பார் 

இந்த மோட்டார் இல்லத்தின் கீழ் தளத்தில் மினி பாரும் உள்ளது.

மாஸ்டர் பெட்ரூம் 

மேல் தளத்தில் மாஸ்டர் பெட்ரூம் உள்ளது. மரவேலைப்பாடுகளுடன் மனதுக்கு இதமாக காட்சியளிக்கிறது.

பாத்ரூம் 

சகல வசதிகளுடன் கூடிய சுத்தம், சுகாதாரத்துக்கு எடுத்துக்காட்டான குளியலறை.

டிரைவர் காக்பிட் 

மேல்தளத்தில் டிரைவர் காக்பிட் உள்ளது.

விரிவுப்படுத்தலாம் 

இந்த மோட்டார் இல்லத்தை தேவையென்றால் பக்கவாட்டில் விரிவுப்படுத்திக் கொள்ளலாம். இதற்கு ஒரு பட்டனை தட்டினால் போதும். இதன்மூலம் ஏராளமான இடவசதி கிடைக்கும்.

மொட்டை மாடி.. 

ஒரு பட்டனை தட்டினால் மொட்டை மாடியிலும் அமர்ந்து கொள்ளலாம். அங்கே டேபிள், சேர்களும் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.

விலை 

3.1
மில்லியன் டாலர் விலையில் இந்த மோட்டார் இல்லத்தை துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியிருப்பதாக எலிமென்ட் பிளாஸோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


 முக நூலில் சுட்டது...
0 comments

எண்ணெய் வளம் கொழிக்கும் கத்தாரில் தான் கோடீஸ்வரர்கள் அதிகமாம்!

துபாய்: கோடீஸ்வரர்கள் அதிகமாக வாழும் நாடு கத்தார் என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட கத்தார் குடிமக்களில் 14.3 சதவீதத்தினர் கோடீஸ்வரர்களாம். 

செல்வந்தர்களிடமே மென்மேலும் செல்வம் கொழிக்கும் என்பதை நிரூபிக்கிறது இந்த ஆய்வறிக்கை. உலக நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது பாஸ்டன் ஆலோசனைக் குழு. 

இதில், சராசரியாக கத்தாரில் வாழ்பவர்களில் ஆயிரத்தில் 143 பேர், பொதுவாக ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்கள் என தெரிய வந்துள்ளது. இது மற்ற நாடுகளின் செல்வந்தர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் அதிகமாகும். 


இருமடங்கு வளர்ச்சி : 



மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் செல்வந்தர்களின் வளர்ச்சி சென்ற ஆண்டில் மட்டும் 9.1 என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளதாம். இது 2012 ஆண்டை ஒப்பிடும்பொழுது இருமடங்கு வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.




எண்ணெய் வளமே காரணம் : 


மேலும் இது, 2017க்குள் 6.5 டிரில்லியன் டாலராக உயரக் கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அமையப் போவது அங்குள்ள எண்ணெய் வளம் என அறிக்கை தெளிவு படுத்தியுள்ளது.

மற்ற கோடீஸ்வர நாடுகள் : 

அதிக கோடீஸ்வரர்கள் வாழும் மற்ற அரபு நாடுகளில், குவைத் 11.5 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், பஹ்ரைன் 4.9 சதவீதத்துடன் ஏழாவது இடத்திலும் , ஐக்கிய அரபுக் குடியரசு 4 சதவீதத்துடன் ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறது.

பாஸ்டன் ஆலோசனைக்குழு : 


இது பாஸ்டன் ஆலோசனைக் குழுவின் 13வது அறிக்கை. பாஸ்டன் ஆலோசனைக் குழு உலக் அளவில் வியாபார உத்திகளுக்கும், நிர்வாக மேம்பாட்டிற்கும் ஆலோசனை மையமாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

விஞ்ஞானிகளை அதிரவைத்த 1000 தசாப்தங்கள் உறையா குருதி!

ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி வடக்கு கரையோர சைபீரியாவின் லியநொவோசிபேர்ஸ்க் ஆர்கிபிலாகோ எனவும் அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

fந்ஸ்ரீக்ஹெர்

இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிரவைத்துள்ளது.

குறித்த மெமத்  60 வயதாக இருக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர் செம்யொன் கிரிகோர்யெவ் தலைமையிலான ரஸ்ய மற்றும் கொரிய நாட்டுக் குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.

தென்கொரியாவும், ரஸ்யாவும் அழிந்து போன மெமத்தினை மீண்டும் உருவாக்கும் கூட்டு ஒப்பந்தமொன்றில் கடந்த வருடம் கையெழுத்திட்டிருந்தன.

மெமத்தின் உடலை மூடியிருந்த பனிக்கட்டியை அகற்றியதும் அதன் வயிற்றிலிருந்து இருண்ட நிறத்தில், கனமான இரத்தம் வடிந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்.

இரத்தம் திரவ நிலையிலேயே இருந்தமை, அதன் தசை இழையமும் புதிய இறைச்சியைப் போல சிகப்பு நிறத்திலேயே இருந்தமையும் தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக செம்யொன் கிரிகோர்யெவ் தெரிவித்துள்ளார்.

gfjujk

பொதுவாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் வாழும் சில உயிரினங்கள்  பனியில் தமது உடல் இழையங்கள் உறைவதைப் பாதுகாக்கும் பொருட்டு கிரயோபுரடெக்டன்ட்  'cryoprotectant' எனும் இரசாயனத்தை உடலில் சுரக்கும் இயல்பினைக் கொண்டுள்ளன.

மெமத்தின் குருதியிலும் கிரயோபுரடெக்டன்ட்  இராசயனம் அடங்கியிருக்கக் கூடுமெனவும் அதன் காரணமாகவே தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மெமத்தில் குருதி உறையாமல் திரவ நிலையில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை இரத்தத்திற்கு மேலதிகமாக பற்கள், எலும்புகள், தசை இழையங்கள் ஆகியவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.

இத்தகைய கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் மெமத்தை குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்கும் முயற்சிக்கு புத்துணர்வு அளிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.


sdgsdh

இதுமட்டுமன்றி 'மெமத்' இனை குளோனிங் முறையில் தம்மால் உருவாக்க முடியுமென ஜப்பானிய விஞ்ஞானியொருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ஜப்பானிய கொயாட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகிரா இரிடானியே ஒரு மெமத்தினை வெறும் 4 வருடங்களிலேயே உருவாக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்காக சிதைவடையாத நேர்த்தியான மெமத்தின் கருவை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் இதனை ஆபிரிக்க யானைகளின் கரு முட்டைகளில் செலுத்துவதன் மூலம் உருவாக்கமுடியுமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை முஸ்லிம் 

0 comments

மீண்டும் மியான்மாரில் (பர்மா) புத்தீஸ்ட்களின் அராஜகம்: தீ வைத்து கொழுத்தப்பட்ட பள்ளிவாசல்!


மியான்மாரில் லஷியோ என்ற நகரில் நேற்யை முன்தினம் (28-5-2013) மாலை புத்தீஸ்டுகள் பள்ளிவாசல் ஒன்றை தீயிட்டு கொழுத்து விட்டு அருகில் இருந்து முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மற்றும் கடைகளுக்கும் தீவைத்துள்ளனர்.  இதில் ஒரு முஸ்லிம் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்து 2 மணி நேரம் கழித்து வந்த மியான்மர் போலீஸ்  பாதிக்கப்பட்டுள்ளது முஸ்லிம்கள் என்பதை அறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பியுள்ளது.
பிறகு வேகு நேரம் கழித்து இரவில் வந்த ராணுவம் அந்த பகுதியில் ஆள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினர். எனினும் தீயிட்டு கொழுத்திய புத்திஸ்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முஸ்லிம்களை கருவருக்கும் புத்திஸ்ட்களின் அராஜகத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் மியான்மர் அரசின் செயல், தான் அண்டி பிழைக்கும் முஸ்லிம் நாடுகளுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக  தி நியுயார்க் டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
mas1
பற்றி எரியும் முஸ்லிம் கடைகள்
mas2
கொழுந்து விட்டு எரியும் தீ
vadikkaiவேடிக்கை பார்க்கும் போலீஸ்
mas3
mas5
கொழுத்தப்பட்ட பள்ளிவாசல்
mas4
0 comments

2000 வருட பழைமையான பாலைவன ஏரி-


சீனாவின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள பாலைவனத்தில் டுங்ஹுவாங் எனும் நகருக்கு அண்மையில் இந்த நீரூற்று உள்ளது. யுயேயாங்குவான் (பிறை ஏரி) என அழைக்கப்படும் இந்த நீரூற்று 2000 வருடகால பழைமையானதாகும்.
அப்பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி மிக அரிதாகவே பெய்யும் நிலையில் இந்த நீரூற்றின் மூலம் தூய்மையான நீர் கிடைத்து வந்தது.
அந்நீரூற்றின் மூலம் உருவான ஏரி 218 மீற்றர் நீளமும் 54 மீற்றர் அகலமும் கொண்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரி பாலைவன மணலினால் முற்றாக மூடப்படும் அபாயம் காணப்பட்டது. 1960களில் 5 மீற்றர் ஆழமானதாக இருந்த இந்த ஏரியில் 1990களில் ஒரு மீற்றர் அளவுக்கே நீர் காணப்பட்டது.
இதனால் ஏரியில் நீரை நிரப்பும் நடவடிக்கைகளை சீன அரசாங்கம் மேற்கொண்டது. இதனால் அந்த ஏரியும் அதைச்சூழவுள்ள நகரமும் புத்துயிர் பெற்றுள்ளன. தற்போது அங்கு பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் சென்றுருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - இலங்கை முஸ்லிம் 
710oasis
0 comments

உலகில் வெறிச்சோடி காணப்படும் சில பாலைவனங்கள்!!

பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பாலைவனங்களாக உள்ளன. பொதுவாக பாலைவனம் என்று சொல்வதற்கு காரணம், இங்கு மழையானது மிகவும் குறைவாக பொழிவது தான். மேலும் பாலைவனங்கள் அதிக வறட்சியுடன் இருப்பதால், அங்கு மக்கள் வாழ முடியாது. ஆனால் வறண்ட நிலப்பகுதிகளில் வளரக்கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் வளரும். அதுமட்டுமின்றி, பாலைவனங்களில் பகலில் அதிகப்படியான வெப்பமும், இரவு நேரத்தில் அதற்கு எதிர்மறையாக குளிரும் நிலவும். இதுப் போன்று பூமியில் நிறைய பாலைவனங்கள் உள்ளன. மேலும் இவற்றில் அதிகப்படியான குளிர் மற்றும் வெப்பம் என்ற இரண்டு வகையான பாலைவனங்களும் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமான சில பாலைவனங்களை, உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளோம். 

உலகில் வெறிச்சோடி காணப்படும் சில பாலைவனங்கள்!!!

சஹாரா பாலைவனம் (Sahara Desert) 


பாலைவனங்களில் மிகவும் பிரபலமானது தான் சஹாரா பாலைவனம். இது ஆப்ரிக்காவில் அனைத்துள்ளது. இந்த பாலைவனம் 9,400,000 கிலோமீட்டர் பரப்பளவுடையது. இது உலகில் உள்ள பாலைவனங்களுள் இரண்டாவது பெரிய பாலைவனமாகும். இந்த பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழமை வாய்ந்தது. இங்கு சாதாரணமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதுவே கோடைகாலமாக இருந்தால், குறைந்தது 57.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இருக்கும். 

அண்டார்டிக் பாலைவனம் (Antarctic Desert) 


உலகின் மிகவும் குளிச்சியான இடம் என்றால் அது அண்டார்டிக்கா தான். இந்த இடம் பொதுவாக உறைந்த நிலையில் பனிக்கட்டிகளாகத் தான் இருக்கும். அதே சமயம் இது ஈரத்துடன் கூடிய வறட்சியாக இருப்பதால், இதுவும் ஒரு பாலைவனமாக உள்ளது. இந்த பாலைவனத்தில் -80 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். மேலும் இந்த பாலைவனத்தில் பனிப் பிரதேசத்தில் வளரக்கூடிய விலங்குகளும், தாவரங்களும் மற்றும் இதர பிராணிகளும் மட்டும் தான் வாழ முடியும்.

அடகாமா பாலைவனம் (Atacama Desert) 


இதுவும் மிகவும் வறட்சியான மற்றும் விநோதமான ஒரு பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 105,000 கிலோ மீட்டர் ஆகும். இந்த பாலைவனம் நான்கு நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியது. மகர ரேகையின் எல்லையில் அமைந்துள்ள இந்த பாலைவனமானது, அரிதான வானிலை மாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த பாலைவனத்தில் இரவில் வெப்பநிலை குறைவாக, அதாவது -25 டிகிரி செல்சியஸ் காணப்பட்டாலும், பகல் நேரத்தில் 45 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
கலஹாரி பாலைவனம் (Kalahari Desert) 

உலகின் கவர்ச்சிகரமான பாலைவனங்களில் கலஹாரி பாலைவனமும் ஒன்று. இந்த பாலைவனம் 900,000 கிலோமீட்டர் பரப்பளவில் பரந்திருப்பதோடு, தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் இந்த பாலைவனத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தது 3 முதல் 7.5 இன்ச் மழையானது பொழிந்து விடுவதால், பெரும்பாலான மக்கள் இதனை ஒரு உண்மையான பாலைவனமாக நினைக்க மறுக்கின்றனர். ஆனால் மற்ற பாலைவனங்களை விட இங்கு தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழ முடிந்தாலும், சற்று சவாலாகவே இருக்கும். கோடைகாலத்தில் இங்கு வெப்பநிலையானது 50 டிகிரி செல்சியஸ் ஏறி இருக்கும்

தக்லாமகான் பாலைவனம் (Taklamakan Desert) 


சீனாவில் அமைந்துள்ள இந்த பாலைவனம், 337,000 கிலோமீட்டர் பரப்பளவுடையது. இதுவும் குளிர்ச்சியான ஒரு பாலைவனம். இந்த பாலைவனமானது எந்த காலத்திலும், இரவில் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும். குளிர்காலத்தில் இந்த பாலைவனத்தின் வெப்பநிலையானது -20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

தார் பாலைவனம் (Thar Desert) 



இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய பாலைவனம் தான், தார் பாலைவனம். இந்த பாலைவனம் இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களையும், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் பரவியுள்ளது.

கோபி பாலைவனம் (Gobi Desert) 


ஏறத்தாழ 13,000,000 சதுர கிலோமீட்டர் பரந்து காணப்படும் கோபி பாலைவனம், மத்திய ஆசியாவில் அமைந்துள்ளது. இதுவும் உலகின் பெரிய பாலைவனங்களுள் ஒன்று. இந்த பாலைவனத்திலிருந்து நிறைய தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் டயனோசர் முட்டையும் ஒன்று.

காரகும் பாலைவனம் (Karakum Desert) 



தர்க்மெனிஸ்தானில் உள்ள காரகும் பாலைவனமானது 350,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. இந்த பாலைவனத்தில் குறைந்த அளவில் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இந்த பாலைவனம் தான் உலகின் இரண்டாவது பெரிய நீர்பாசன கால்வாய் ஆகும். இந்த பாலைவனத்தில் ஒரு பெரிய துவாரம் உள்ளது. இந்த துவாரம் வருதற்கு காரணம், வேற்று கிரகத்தில் இருந்து பறக்கும் தட்டு விழுந்தது தான் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்கு பின்னணியில் நிறைய கதைகள் உள்ளன.

லட் பாலைவனம் (Lut Desert) 



தென்கிழக்கு ஈரானில் அமைந்துள்ள இந்த பாலைவனம், 51,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. இந்த பாலைவனத்தை உப்பு பாலைவனம் என்றும் கூறுவர். ஏனெனில் இந்த பாலைவனம் உப்பு, பாறை மற்றும் மண்ணை உள்ளடக்கியது. இந்த பாலைவனம் வெறிச்சோடி, வறட்சியாகக் காணப்படுவது மட்டுமின்றி, இது மிகவும் சூடான பாலைவனம் என்று நாசா செயற்கைக்கோள் நிரூபித்துள்ளது. ஏனெனில் இங்கு அதிகப்படியாக 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது நிலவுகிறது.

thanksto - tamil.boldsky.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger