Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

உலகை அச்சுறுத்தும் தூக்கமின்மை – ஓர் அறிவியல், ஆன்மீகப் பார்வை.

பகலில் ஓடியாடி திரியும் மனிதன் இரவிலே தூக்கத்தினால் சுருங்கி விடுகின்றான். இயங்கிக் கொண்டிருக்கும் உடம்பிட்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றாகும். பகலில் கடன் சுமையால் அல்லல் படுபவன் கூட, இரவில் தன்னை மறந்து நிம்மதியாக தூங்குகின்றான். சுருக்கமாகச் சொன்னால் தூக்கம் என்பது இறைவன் நமக்களித்த அருளாகும்.

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும்,பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.
(அல்குர்ஆன் – 25: 47)
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன், இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும்,சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான்.
(அல்குர்ஆன் – 6 :96)
ஓய்வை தரக்கூடிய தூக்கம் எவ்வாறு உருவாகின்றது?
மனித மூலையில் மெலடொனின் (Melatonin) என்ற ஹோர்மோன் ஒன்று சுரக்கின்றது. இந்த ஓமோன் உறக்கத்தைத் தூண்டும் ஒரு சுரப்பியாகும். இது வெளிச்சத்தில் குறைவாகவும், இருளில் கூடுதலாகவும் சுரக்கின்றது. அதனால் தான் இரவு என்றாலே உலகமே தூக்கத்தில் அயர்ந்து விடுவதுடன் பகலில் கூட மனிதன் இருட்டு மூலையைத் தேடி சென்று தூங்குவதற்கு எத்தனிக்கின்றான்.
தூக்கமின்மை. – (Insomnia) 
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரங்கள் தூங்க வேண்டும் என்று மருத்துவ உலகம் சிபாரிசு செய்வதாக லன்டன் பி.பி.சி இணையதள செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
ஆனால் எம்மில் சிலருக்கு எவ்வளவு தான் புரண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் இருப்பதுண்டு. அதே நேரத்தில் தூக்கத்தை தாமாகவே இல்லாமல் செய்வதுமுண்டு. உதாரணமாக இரவு நேரத்தில் நாம் விளித்திருப்பதைக் கூறலாம்.
மூலையில் சுரக்கும் Serotin என்ற சுரப்பியின் அளவு குறையும் போதே தூக்கமின்மை ஏற்படுகின்றது. இதுவொரு நோயல்ல. ஆனால் இதுவொரு நோயின் அறிகுறியாகும். இதனால் ஏற்படும் விளைவுகள் பாரிய அளவில் நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தூக்கமின்மையினால் மனிதனுக்குள் சுமார் 80 வகையான பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன என்றும், முறையான தூக்கமின்மையினால் மனிதனின் உடல் செயல்பாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்றும், மரபனுவில் பாரிய மாற்றத்தையும் உண்டாக்குகின்றது என்றும் ஐக்கிய இராச்சியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். (மாலை மலர், பி.பி.சி)
தூக்கமின்மையினால் உயிரனுக்கள் (விந்தனுக்கள்) குறைகின்றது. என்று மருத்துவ உலகம் வாதிக்கின்றது. குறைந்த தூக்கத்தை உடையவர்களுக்கு இல்லறத்தில் நாட்டமில்லாமல் போவதுடன், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து மன அழுத்தமும் ஏற்படுகின்றது என்று தெரிவிக்கின்றார்கள். (தினமலர், பி.பி.சி)
தூக்கமின்மைக்கான காரணங்களும், தீர்வுகளும்.
பெருகி வரும் இணையதள பாவனை.
தூக்கமின்மைக்கான மிக முக்கிய காரணம் இணையதளத்திற்கு மனிதன் அடிமையாகிவிட்டான் என்பதேயாகும். அதிலும் குறிப்பாக சமூக வலை தளங்களில் தனது காலத்தை கழிப்பதுதான். பொன்னான தூக்கத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு இரவு முழுதும் மேலதிகமான வணக்கத்தை நிறைவேற்றுவதே மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலாக கருதப்படுகின்றது. ஆனால் இன்று மார்கம் தெரிந்தவர்கள் கூட தன் உடம்பை கவனிக்காமலும், தன் மனைவியின் உணர்வுகளை புரியாமலும் இணையதளங்களில் தங்கள் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இது மார்க்கத்தில் மிகவும் வெருக்கத்தக்க செயலாக கருதப்படுகின்றது.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ்வே! நீ பகல் எல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குதாகக் கேள்விப்பட்டேனே! (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். நான், “ஆம் (உண்மைதான்) அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதே! (சில நாள்) நோன்பு நோற்றுக்கொள். (சில நாள்) நோன்பை விட்டு விடு! (இரவில் சிறிது நேரம்) நின்று வணங்கு! (சிறிது நேரம்) உறங்கு! உன் உடலுக்கென (நீ செய்ய வேண்டிய) கடமைகள் உனக்கு உண்டு. உன்னுடைய கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு. உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு” என்று சொன்னார்கள்.
(புகாரி – 5199)
இரவில் ஆரம்ப நேரத்தில் உறங்கிப் பழக வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் ஆரம்ப நேரத்தில் தான் உறங்குவார்கள்.
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அயிஷா (ரலி) அவர்களிடம், “நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரவின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். பிறகு தமது படுக்கைக்குத் திரும்புவார்கள். முஅத்தின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொன்னதும் விரைவாக எழுந்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
(புகாரி – 1146)
ஆயிஷா (ரலி) அவர்கள் தன் கணவர் முஹம்மது (ஸல்) அவர்கள் உறங்கும் நேரத்தை அறிந்தே வைத்திருந்தார்கள். இன்று பெரும்பாலானவர்களின் மனைவியர்கள் தம் கணவர்கள் தூங்குகின்றார்களா? விழித்திருக்கின்றார்களா? என்பது கூட தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இதனால் அவர்களின் குடும்ப வாழ்வில் நிறைய சிக்கள்களும், சங்கடங்களுமே ஏற்படுகின்றன.
நன்மைக்காக விழித்திருக்கின்றார்களோ இல்லையோ, வீனான காரியங்களில் ஈடுபடுவதற்கு மனிதன் தனது பொன்னான இரவு நேரத்தை வீணடிக்கின்றான். அல்லாஹ்வின் தூதரவர்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றார்கள்.
அபூபர்ஸா (நள்லா பின் உபைத்) (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்பின் (உறங்காமல் வீனாக) பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி – 568)
ஆரம்ப நேரத்தில் உறங்குவதுதான் சிறந்தது என மருத்துவ உலகமும் இன்று இஸ்லாத்தின் செய்தியை உறுதிப்படுத்துகின்றது.
நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மருத்துவப் பேராசிரியர் ஜேம்ஸ் காங்விஸ்க் தலைமையிலான ஆய்வுக் குழு, மொத்தம் 15,659 வளரிளம் பருவ மாணவ மாணவியரிடம் ஆய்வு மேற்கொண்டது. இரவில் சீக்கிரமாகவே தூங்குவதால் போதுமான அளவில் தூங்கமுடிகிறது. இதனால் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை நீங்குவதோடு, மன அழுத் பாதிப்பில் இருந்து வெகுவாக பாதுகாத்துக் கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது என ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன. நள்ளிரவு அல்லது 12 மணி நேரத்துக்குப் பிறகு படுக்கைக்கு செல்பவர்களுக்கு இரவு பத்து மணி அல்லது அதற்கு முன்பு உறங்கச் செல்பவர்களைக் காட்டிலும் 24 சதவீதத்துக்கும் அதிகமான மன அழுத்தமும், அதன் விளைவாக 20 சதவீதத்துக்கும் அதிகமாக தற்கொலை எண்ணமும் ஏற்படுவதற்கான அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறது, அந்த ஆய்வு.
மனக் குழப்பம்.
எம்மில் பலர் படுக்கை அறைக்குள் கூட கவலையுடனேயே நுழைகின்றோம். பகலில் நிகழ்ந்த மனத் தாக்கங்களுக்கு இரவில் வாடி வருந்துகின்றோம். இதனால் அன்றிரவு முழுதும் தூக்கமின்மையால் தவிக்கின்றோம்.
மருத்துவ உலகம் இதற்கு ஒரு தீர்வை சொல்கின்றது. அதாவது தூக்கம் வராதவர்கள் தூக்க செல்லும் போது அவர்களின் மன நிலையை மாற்ற வேண்டும் என்று சொல்கின்றது.
நபியவர்கள் கூட இதற்கு தெளிவானதொரு வழிகாட்டலை தந்துள்ளார்கள். தூங்குவதற்கு செல்லும் போது ஒவ்வொரு மனிதனும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளை ஓதும் போது அவர்களின் மன நிலை இறைவனின் பக்கமும், மரண சிந்தனையின் பக்கமும் சென்று விடுகின்றது. இப்படியொரு மனிதன் தனது சிந்தனையை இறை நினைவின் பக்கம் கொண்டு செல்லும் போது தூக்கம் தானாக ஏற்படுவதற்கான சிந்தனை மாற்றம் அங்கு நடை பெறுகின்றது.
உதாரணமாக தூங்குவதற்கு முன்பு ஓதுவதற்காக பல பிரார்தனைகளை கற்றுத் தந்த இறைத் தூதர் அவர்கள் இப்படியொரு பிரார்த்தனையும் கற்றுத் தருகின்றார்கள். இப் பிரார்த்தனை மனிதனை இறை சிந்தனையின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகும்.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் “நபியை நான் நம்பினேன்.”என்று பிராத்தித்துக்கொள்! (இவ்வாறு நீ பிராத்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்! (புகாரி – 247)
அமுக்குப் பேய் என்பது உண்மையா?
சிலர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தன்னை அமுக்குப் பேய் அமுக்கியதாக பயந்து விளித்துக் கொள்வதுடன், அன்றிரவு முழுவதும் மனம் குழம்பி தூக்கத்தை கெடுத்துக் கொள்கின்றார்கள். தூக்கத்தின் போது மூலை ஓய்வு அடைகின்றது என்பது முற்றிலும் உண்மையல்ல. தூக்கத்தின் போது மூலையானது ஏனைய உறுப்புகள் ஓழுங்காக இயங்குகின்றதா? என்று சரிபார்த்துக் கொள்கின்றது. அந்த வகையில் தான் காலை தூக்கு, கையைத் தூக்கு என்ற சில கட்டளைகளை மூலை கை, கால் போன்ற உறுப்புகளுக்கு பிரப்பிக்கின்றது. சில சமயங்களில் அக்கட்டளை செயல் வடிவம் பெற வாய்ப்பிருந்தும் எம்மால் கை, கால்களை தூக்க முடியாமல் அல்லது திருப்பக் கூட முடியாமல் போயிருக்கலாம். இந்நேரம் நமது செயல்பாடுகள் அற்றுப் போவதினால் தான் கை, கால்களை யாரோ கட்டிப் போட்டதைப் போல் தோன்றுமே தவிர அமுக்குப் பேய் வந்துவிட்டதென்று அர்த்தமல்ல.
தூக்கத்தைக் கெடுக்கும் அசுத்தம்.
பகல் முழுவதும் ஓடியாடித் திரிந்த களைப்பினால் பெரும்பாலானவர்கள் கட்டிலைப் பார்த்ததும் மல்லாக்க விழுந்து தூங்க முற்படுகின்றார்கள். ஆனால் இது அவர்களுக்குறிய ஆரோக்கியமான தூக்கத்தை பெற்றுத்தராது. தூக்கமின்மையினால் அவதியுறுபவர்களுக்கு தூங்கச் செல்வதற்கு முன்பாக குளித்து சுத்தமாகுமாறு நவீன மருத்துவம் அறிவுரை வழங்குகின்றது. (www.OneIndia)
மருத்துவ உலகம் இன்றைக்கு வழங்கும் அறிவுரைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கிவிட்டது.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். (புகாரி – 247)
ஆகவே நாம் தூங்கச் செல்லும் முன்பு நம்மை சுத்தம் செய்து கொள்வது சிறந்த தூக்கத்தை பெற்றுத் தரும்.
தூங்குவதற்கு முன் எண்ணுதல். – Counting Sleep.
தூக்கமின்மையினால் அவதிப்படுபவர்களுக்கு Counting Sleep செய்யுமாறு அதாவது தூங்குவதற்கு முன் இலக்கங்களை எண்ணுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள். இன்றைக்கு உலகில் பல பாகங்களிலும் நடை முறையில் உள்ள ஒரு மருத்துவ செயல்பாடாக இது மாறியிருக்கின்றது. உதாரணமாக இங்கிலாந்தை சேர்ந்த மக்கள் தூங்கச் செல்லும் போது சுமார் 37 நிமிடங்கள் வரை எண்ணுவதற்கு நேரத்தை செலவு செய்கின்றார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. (Amarkkalam.com)
இன்றைக்கு மருத்துவ உலகம் சொல்லும் செய்தியை இஸ்லாமியர்கள் 1400 வருடங்களாகவே நடை முறைப்படுத்தி வருகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள்  படுக்கைக்குச் செல்லும் போது, “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்‘ என்று முப்பத்து நான்கு முறையும், “அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே‘ என்று முப்பத்து மூன்று முறையும், “சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்‘ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள் (புகாரி – 3113) (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
தூங்கச் செல்லும் முன்பு இலக்கங்களை எண்ணுவதினால் வெரும் தூக்கம் மாத்திரம் ஏற்படும். ஆனால் இஸ்லாம் சொல்வதைப் போல் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று சொல்லும் போது எண்ணிய வகையில் தூக்கமும் ஏற்படும். அதே நேரம் இறைவனிடம் நன்மையும் கிடைக்கும். என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
தூக்க மாத்திரைகள் தீர்வாகுமா?
தூக்கத்தை தேடும் பலர் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாகின்றார்கள். அனைத்து தூக்க மாத்திரைகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையே! தூக்க மாத்திரையின் உபயோகம் வேறு விதமான பல நோய்களுக்கும் நம்மை ஆளாக்கிவிடக் கூடியதாகும். ஆனால் இஸ்லாம் சொல்வதைப் போல் நமது வாழ்வை நாம் மாற்றி அமைத்து, தூங்குவதற்கு முன்னர் நபியவர்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றும் போது நிம்மதியான, ஆரோக்கியமான தூக்கத்தை நாம் நம்வாழ்வில் பெற்றுக் கொள்ள முடியும்.
rasminmisc
0 comments

விண்வெளியில் இருந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய சீன வீராங்கனை

சீனா கடந்த 11-ம் தேதி, 'ஷென்சு- 10' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இரண்டு விண்வெளி வீரர்களும், ஒருவீராங்கனையும் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு 15 நாட்கள் தங்கி ஆய்வுப்பணிகள் மேற்கொள்கிறார்கள். அதில் சென்றுள்ள வாங் யாபிங் என்ற சீன விண்வெளி வீராங்கனை ஆரம்ப மற்றம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அங்கிருந்தபடி இயற்பியல் வகுப்புகள் எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் நேற்று விண்வெளியில் உள்ள 'டியாங்காங்-1' ஆராய்ச்சி நிலையத்தில் இருந்தபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். பம்பரம், பந்து, தண்ணீர் போன்றவற்றுடன் மற்றொரு வீரரையும் வைத்து புவியீர்ப்பு விசை இல்லாத நிலை குறித்து விளக்கினார். விண்வெளியில் ஒரு பொருளின் எடையினையும், அதன் தன்மையையும் பல்வேறு பரிசோதனை மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார்.

சாதாரண எடை அளவுகோல்கள் விண்வெளியில் பயன்படாது என்பதனை விளக்கிய அவர், அதற்கென பிரத்தியேக எடை அளவுகோலை உபயோகித்து காட்டினார். சக வீரரைப் பயன்படுத்தி விண்வெளியில் பொருட்கள் நகரும் விதத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார்.

பம்பரத்தினை வைத்து சுழல்முறைகளை விளக்கிய அவர், பந்தினை உபயோகித்து பெண்டுலம் செயல்முறைகளை விளக்கினார். கடைசியில் உலோக வளையம் ஒன்றை வைத்து தண்ணீர்த் திரை ஒன்றை ஏற்படுத்தினார். இதன்மூலம் வெளிப்புற விசை குறித்து விளக்கிய வாங் பின்னர் அதில் மேலும் தண்ணீரை ஊற்றி பந்துபோல் ஆக்கி மாணவர்களின் கரகோஷத்தை பெற்றார்.


பெய்ஜிங் நகரில், 330-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதெற்கென தயார் செய்யப்பட்ட பிரத்யேக வகுப்பறையில் அமர்ந்து இந்த காட்சிகளை கண்டு களித்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு வாங் விளக்கமும் அளித்தார்
0 comments

விண்ணில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?



(ஓர் ஆன்மீக அறிவியல் கண்ணோட்டம்)
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கீங் கலிலியோ கலிலி போன்றவர்கள் தொடக்கம் இன்றுள்ள விஞ்ஞானிகள் வரை அனைவரையும் இந்த வின்வெளி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.இனி விஷயத்திற்கு வருவோம்.
பறக்கும் தட்டு விளக்கம் என்ன?
பறக்கும் தட்டு என்ற பெயரில் ஒன்று இந்த உலகுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் அதில் ஏதோ மனிதனை ஒத்த தோற்றத்தில் உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வதாகவும் அது உலகில் உள்ள வாகனங்களை விட வித்தியாசப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.ஆனால் இவையனைத்தும் வடி கட்டிய பொய்களாகும்.
(மேலதிக விபரங்களுக்கு பறக்கும் தட்டு பற்றிய நமது ஆய்வுக் கட்டுரையை படிக்கவும்)
மனிதன் விண்ணில் வாழ முடியுமா?
இந்த உலகைப் பொருத்தவரை மனிதன் வாழ்வதற்குறிய சிறப்பான தகுதியான இடமாக இறைவன் பூமியை மாத்திரம் தான் அமைத்திருக்கிறான் பூமியல்லாத எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாதென்பது உருதியாக்கப் பட்ட விஞ்ஞானமாக இருக்கிறது.
இதையே திருமறைக் குர்ஆனும் தெளிவாக உறுதிப் படுத்துகிறது.
பூமியில் தான் வாழ முடியும்.
மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருமறை வசனங்கள் தெளிவா எடுத்தியம்புகின்றன.
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளன என்றும் நாம் கூறினோம்.(2:36)
(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன  என்று (இறைவன்) கூறினான்.(7:24)’அதிலேயே(பூமியிலேயே)வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.(7:25)
பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்(7:10)
அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்(30:25)
இவ்வசனங்களில் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5 80 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.
முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து இக்கோளின் அதிகப் பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.
அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.
வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10 08 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.
மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலை விலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.
ஜூபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.
சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.
யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும் நெப்டிய+ன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும் புலூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.
பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர் காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும் இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.
சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள ப+மியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.
சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.
மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும் குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். உயிர் வாழ அவசியமான காற்றும் ப+மியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது.
அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனி லிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை குளிர் வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.
இறைவன் சொன்ன வார்த்தைகள் விஞ்ஞானமே தோற்றுப் போகும் அளவு மிகவும் உருதியானதாக உள்ளது.
ஏன் எனில் மனிதன் சுகமாக தனது வாழ்வை இந்தப் பூமியில் மாத்திரம் தான் கழிக்க முடியும் என்பது முக்காலமும் அறிந்த இறைவன் விதித்த முறையாகும்.
ஆக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் கடைசிவரை மனிதன் இந்த பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் ஒரு சில நாட்கள் மாத்திரம் தான் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனைப் பயன் படுத்தி மற்ற கோள்களில் தங்க முடியும் அது தவிர பூமியில் வாழ்வதைப் போல் வாழ இயலாது என்பது தெளிவாகி விட்டது.
விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?
பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம் தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது.ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.
பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.
(ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29) மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும்என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.
துருவப் பிரதேச ஆய்வின் போது செவ்வாயில் இருந்து விழுந்ததாக சொல்லப் பட்ட பனியைப் பற்றி ஆய்வு செய்யப் பட்டதில் அதன் உள்ளே இருந்த பாசிலைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையானதாக இருப்பின் திருமறையின் இவ்வசனத்தை விஞ்ஞானம் உருதிப் படுத்திய பட்டியலில் முதன் முதலில் இந்தப் பாசிலைப் பற்றிய செய்தியே இடம் பிடிக்கும்.
இந்தப் பாசிலைப் பற்றிய செய்தி செவ்வாய் மற்றும் அதைப் போன்ற மற்ற கோள்களிலும் சூட்சும உயிரினங்கள் (Micro-Organism) இருப்பதாகவே கூறுகின்றன.
உதாரணமாக மனிதனாகிய நாம் கரிமம் அடிப்படையிலான உயிரினமாக (Cabom Based Organism) படைக்கப் பட்டுள்ளோம்.இதே போல இந்தப் பேரண்டத்தின் மற்றக் கோள்களில் சிலிக்கான் (Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அதைப் போன்ற வேறு தனிமங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம்.
ஆனால் அப்படிப் பட்ட கோள்களில் புவிவாழ் உயிரினங்களாகிய நாம் ஒரு போதும் கண்டிப்பாக வாழ முடியாது என்பது தெளிவான விஷயமாகும்.
எது எப்படியோ விஞ்ஞானம் சொல்கிறதோ இல்லையோ முக்காலமும் அறிந்த இறைவன் பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்றும் பூமியல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும்  தெளிவாக சொல்லியுள்ளான் இதுவே நமது நம்பிக்கைக்கு போதுமான ஆதாரமாகும்.
நன்றி - rasminmisc 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger