புதுடெல்லி: விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறப் படுவதாவது:.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் அழைக்கப்படும் அழைப்புகள் அனைத்தும் உள்ளூர் அழைப்புகளாக கருதப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் 2000ல் அறிமுகப்படுத்தியது.
ஆனால் இந்த சேவையை நிறுத்துமாறு 2003ம் ஆண்டில் தொலைதொடர்புத் துறை உத்தரவிட்டது. ஆனால் 2005 ஆம் ஆண்டு வரை இந்த கொள்கையை ஏர்டெல் நிறுவனம் கடைபிடித்தது.
விதிமுறைகளை மீறிய இச்செயலால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் புகார் தெரிவித்தது. இதனால் ஏர்டெலுக்கு, 650 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
Post a Comment