இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 4500 ஸ்டேர்லிங் பவுண்கள் ''பாண்ட்'' பணமாக கட்ட வேண்டும் என்று பிரிட்டனால் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நடவடிக்கையை கண்டித்திருந்த நைஜீரியாவின் செனட் சபை, இதற்கு பதிலடியாக தாமும் இப்படியான நிபந்தனையை விதிக்க நேரிடும் என்று கூறியுள்ளது.
இது ஒரு பக்கசார்பான நடவடிக்கை என்று இந்திய தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வர 6 மாத விசாவைப் பெறவேண்டுமானால், அதற்காக அவர்கள் 4500 ஸ்டேர்லிங் பவுண்களுக்கும் அதிகமான பணத்தை பாண்டாக கட்ட வேண்டும்.
அந்த விசாக் காலம் முடிந்த பின்னரும் அவர்கள் பிரிட்டனில் தங்கினால், அந்தப் பணத்தை பிரிட்டன் பிடித்துக்கொள்ளும்.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் மிகவும் அதிகமாக குடிவரவு விதிகளை துஷ்பிரயோகம் செய்வதாக பிரிட்டன் கூறுகிறது.
Post a Comment