ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை!

காரைக்கால்:   வகுப்பு நேரத்தில் ஆசிரியர்களின் கவனம் வேறு விஷயத்தில் சிதறுவதால், மாணவர்களின் கவனமும் சிதறுகிறது.

வரும் 5 ஆண்டில் இதே நிலை நீடித்தால் ஆசிரியர்கள் அனைவரும் வீட்டுக்கு செல்லவேண்டியதுதான். என, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வல்லவன், காரைக்காலில் உள்ள பச்சூர், தக்களூர், க.மன்னவன், தலத்தெரு மற்றும் நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்தார். அப்போது, ஆரம்ப பள்ளி வகுப்பறைகளுக்கு சென்ற வல்லவன், ஆசிரியரை சிறிது நேரம் வெளியே நிற்க வைத்துவிட்டு, மாணவர்களிடம், அவர்களது பாடம் குறித்த கேள்விகளை கேட்டுள்ளார். மாணவர்கள் பதில் கூற முடியாமல் திகைக்கவே, பாட புத்தகத்தை வழங்கி குறிப்பிட்ட பகுதியை சப்தமாக படிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், மாணவர்களால் தெளிவாக தவறின்றி படிக்க முடியவில்லை.

தொடர்ந்து ஆசிரியர்களை அழைத்து, ஆரம்ப பள்ளி மாணவர்களால் தமிழ் புத்தகத்தில் உள்ள ஒரு பகுதியை தவறு இல்லாமல், வேகமாக சப்தத்தோடு படிக்க முடியவில்லை. நானும் அரசு பள்ளியில் தான் படித்தேன். நான்காம் வகுப்பிலேயே ஆங்கில புத்தகத்தை சப்தமாக தவறில்லாமல் படிப்பேன். ஆனால், தற்போது மாணவர்களால் தவறில்லாமல் படிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு ஆசிரியர்களின் கற்பித்தல் உள்ளது. வகுப்பு நேரத்தில் ஆசிரியர்களின் கவனம் வேறு விஷயத்தில் சிதறி வருகிறது. இதனால் மாணவர்களின் கவனமும் சிதறுகிறது.
2007-ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்றனர். தற்போது 98 ஆயிரம் பேர் மட்டுமே கல்வி கற்று வருகின்றனர். ஆண்டுக்கு மாணவர்களின் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் 5 ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 20 ஆயிரமாக இருக்கும். அப்போது ஆசிரியர்களூக்கு பதவி உயர்வு எல்லாம் வழங்க முடியாது. அனைவரும் வீட்டுக்கு செல்லவேண்டியதுதான். ஆசிரியர்களுக்கு வேறு துறையில் வேலையும் வழங்க இயாலாது. எனவே, அரசு மாணவர்களுக்கும், பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கும், பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி, மாணவர்களின் கல்விதரத்தை உயர்த்தவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் பள்ளி வரும் போதே பல்வேறு சிந்தனைகளோடு வருகின்றனர். அவ்வாறு வரும அசிரியர்களால் மாணவர்களுக்கு முறையான பாடம் கற்பிக்க முடிவதில்லை. அதனால், அனைத்து ஆசிரியர்களுக்கும் புதுச்சேரி, காரைக்கால் என தனித்திறன்,  முறையான கல்வி போதித்தல் குறித்து, சிறப்பு முகாம் நடத்தவுள்ளோம். நானும் இனி மாதம் ஒரு முறை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்யவுள்ளேன். அப்போது எனது அதிகாரத்திற்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger