மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல் - 14 பேர் பலி!

பெஷாவர்: பாகிஸ்தானில் மசூதி மற்றும் மதரஸா மீது நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
 பாகிஸ்தானின் பெஷாவரில் குல்ஷான் காலனியில் மசூதியும் மதரசாவும் அமைந்துள்ளது. இன்று வெள்ளிக் கிழமை தொழுகைக்காக மக்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது 
மசூதிக்குள் பின் வழியாக மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில் அந்த மசூதியின் கதவு ஜன்னல்கள் எகிறி தெறித்தன. அதன் கூரை முற்றிலும் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 14 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவினைவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger