துபாயில் உலகின் உயரமான பின்னல் கோபுரம்

twisted Towerதுபாய் : உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா உள்ளிட்ட மிகப் பெரும் கட்டிடங்களை கொண்டுள்ள துபாயில் தற்போது உலகின் மிக உயரமான பின்னல் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.


உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா, உலகின் மிகப் பெரும் குடியிருப்பு கட்டிடம் , உலகின் மிகப் பெரும் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் துபாயில் உள்ளது அறிந்ததே. அவ்வரிசையில் தற்போது உலகின் உயரமான பின்னல் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள துபாய் மெரினா எனும் பகுதியில் 272 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள கயான் கோபுரம் கீழிலிருந்து மேல் வரை 90 டிகிரி கோணத்தில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 75 மாடிகள் கொண்ட கேனல் கோபுரம் 1017 அடி உயரம் கொண்டதாகும்.

2006ல் தொடங்கப்பட்ட இக்கோபுரம் தொழில்நுட்ப காரணங்களால் இடை நிறுத்தப்பட்டு பின் 2009ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். தற்போது இக்கோபுரத்தின் 80 சதவிகித குடியிருப்புகள் ஏற்கனவே விற்று விட்டதாக இக்கோபுரத்தை நிர்வகிக்கும் கயன் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger