ஜித்தா: சவூதி புதிய தொழிலாளார் கொள்கை (நிதாகத்) காலக்கெடுவை நீட்டிக்க பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சவூதி அரேபியா நாட்டில் புதிய தொழிலாளர் கொள்கையான நிதாகத் சட்டத்தின்படி, அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது பணி நிலையை ஜூலை 3-ஆம் தேதிக்குள் சரி செய்து கொள்ள வேண்டும் என்று சவூதி அரசு காலக் கெடு விதித்துள்ளது. மேலும் இந்த குறிப்பிட்ட தேதிக்குள் சரி செய்து கொள்ளாத வெளிநாட்டவர்கள் மீது அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் சவூதி அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் இன்னும் பலரின் பணி நிலை சரி செய்யப்படவில்லை என்றும். மீதமுள்ள இந்த குறுகிய நாட்களுக்குள் அது சாத்தியமில்லை என்றும் நவம்பர் 4-ஆம் தேதி (Muharram 1, 1435) வரை கால நீட்டிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் ஜித்தா தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் குழுவின் தலைவர் அப்துல்லாஹ் ரித்வான் சவூதி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்நாட்டு மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் கோரிக்கை வைத்திருப்பதாகவும். அவரிடமிருந்து நல்ல பதிலை எதிர் பார்ப்பதாகவும் ஜித்தாவில் நேற்று நடைபெற்ற வர்த்தக சபை கூட்டத்தில் ரித்வான் தெரிவித்தார்.
இதற்கிடையே 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும், துரித பணிகள் மூலமாக பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும். கால நீட்டிப்பிற்கு சாத்தியமில்லை என்றும் ஜித்தா தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment