இந்தியாவை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க மோகம்!


சமீப காலமாக இந்திய சினிமாகள் அமெரிக்க மோகத்தை உரமிட்டு வளர்க்கின்றன என்றே சொல்லலாம்.
அமெரிக்க மோகத்தின் தாக்கம் தமிழ் சினிமாக்களை கூட விட்டு வைக்க வில்லை. ஒவ்வொரு தமிழ் சினிமாவிலும் ஏதாவது ஒரு அமெரிக்க புராணம் பாடும் வசனம் இருக்காமல் இல்லை.
அதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் நமது தமிழ் புலவர்கள் சிவாஜி படத்திற்கு பாடல் எழுதினர். காவேரி ஆறும் கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா என்கிற பாடலில் அண்ணன் வந்தால் தமிழ் நாடும் மாறும்  அமெரிக்கா என்கிற வரியை சேர்த்தனர். 
அதுபோல், விஸ்வரூபம் பட பிரச்சனையில் கமல் நான் இந்தியாவை விட்டு வெளியேற போகிறேன் என்று சொன்னது அமெரிக்காவில் செட்டில் ஆகும் நோக்கில்தான். இதை கூட அவர் விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் அந்நிய பெண்களுக்கு முத்தம் கொடுத்த காட்சிக்கு பின்னர், சில நண்பர்கள் என்னை ஹாலிவுட்டில் இருக்க வேண்டிய ஆள் என்று சொன்னதாக சொல்லி காட்டுவார்.
இப்பொழுது அதற்க்கெல்லாம் ஒருபடி மேல் சென்று அமெரிக்கா விசா கிடைத்தால்தான் ஒருவர் இந்திய பிரதமர் வேட்பாளருக்கே தகுதி பெற்றவர் என்கிற நிலை உருவாகி  விட்டது. அமெரிக்காவிற்கு விசா மறுக்கப்பட்ட ஒருவரை இந்திய பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் அவர் ஜெயிக்க முடியுமா என்கிற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. இந்த கேள்வி சுதேசி வேடமிட்டு நடிக்கும் மதவாத வர்ணாசிர கூட்டத்திற்கும் எளுந்துள்ளதுதான் இங்கே வேடிக்கை.
இந்நிலையில், குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை முன்னின்று நடத்திய நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர வேண்டும் என்று அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.  என்னதான் நரேந்திர மோடி முகத்தில் கரி பூசினாலும் இவருக்கு அமெரிக்க மோகம் குறையவில்லை. அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஹிந்துத்துவா அமைப்புகள் இவரை எப்படியாவது அமெரிக்க வரவழைத்து விட வேண்டும் என்று பல்வேறு வழிகளில் முயற்சிகளை  செய்கின்றனவாம். 
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக இவர் முன்னிறுத்தப்படும் பொழுது அமெரிக்க விசா மறுப்பு என்பது இவரது இமேஜை வெகுவாக பாதிக்கும் என்று ஹிந்துத்துவா இயக்கங்கள் நம்புகின்றன.

சிந்திக்கவும் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger