ஜம்முவில் உள்ள சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தானை சார்ந்த சனாவுல்லா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மருத்துவ குழுவின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் இறந்து போனதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்தே சுய நினைவின்றி இருந்த சனாவுல்லா உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழந்த நிலையில் அவர் மரணித்துள்ளார். சனாவுல்லாவின் மரணம் பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சனாவுல்லாவின் உடல் இந்திய அரசின் அனுமதி பெற்று பாகிஸ்தான் எடுத்து செல்லப்படும் என்றும் பாகிஸ்தான் தூதரக செய்தி தொடர்பாளர் கூறினார்.

நன்றி - இந்நேரம்
Post a Comment