கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் சித்தராமையா!

பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்ட விழாவில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பொறுப்பேற்றார்.. 

பெங்களூர் கஸ்தூர்பா சாலையில் அமைந்துள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் முற்பகல் 11.35 மணிக்கு நடைபெற்ற விழாவில் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் சித்தராமையாவுக்கு பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

இன்று சித்தராமையா மட்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் வேறு எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை. 

இந்த விழாவுக்காக விதானசெளதா உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்ணப்பூக்கள், வண்ண விளக்குகளால் கண்டீரவா விளையாட்டுத் திடல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இப்பதவியேற்பு விழாவில் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

நன்றி - onindia 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger