வழக்கை விசாரித்த நீதிபதி பாட்சா மற்றும் நீதிபதி சாந்த குமார் நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய பென்ச் படத்தை தற்போது அனுமதிக் முடியாது எனக் கூறி வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
மேலும் ”படத்தை பார்த்த பின்னர் தான் முடிவு எடுக்க முடியும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற 26 ஆம் தேதி படத்தை பார்க்க நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.
”தனிக்கை துறை அனுமதி அளித்த பின்னர் படத்தை தடை செய்வது சட்டப்படி குற்றம்” என்பது கமல் மற்றும் இன்னும் சிலரின் வாதம்.
ஆனால் அதை நிராகரிக்கும் வன்னம் தற்போது நிதிபதிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
தனிக்கை துறை அனுமதி அளித்துள்ளது என்றாலும், படத்தை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தற்போது கூறியுள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளே படத்தை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் எனக் கூறியுள்ள நிலையில், நமது நாட்டின் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சாரக உள்ள மனிஸ் திவாரி ”தனிக்கை துறை அனுமதி அளித்த பிறகு சாதாரணமாக எந்த படத்தையும் தடை செய்து விடக்கூடாது” என்ற கருத்தில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
நன்றி - tntj.net
Post a Comment