பரக்காதெனியாவில் மங்கிப்போன மாநாடு



ஒரு மாணவனின் உலக குமுறல் 


சில ஆண்டுகளுக்கு முன்னால் தவ்ஹீத் இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த இஸ்லாமிய இயக்கம் என்று சொல்லும் அளவுக்கு மதிக்கப்பட்ட ஒரு இயக்கம் தான் தாருத்தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா(பரகாதெனியா)-இது இவர்களின் மதரசா பெயர்-. ஆனால் இன்று அந்த இயக்கமானது மக்களை தவ்ஹீத் என்ற பெயரில் தவரான வழியின் பக்கம் அழைப்பு விடுக்கிற இயக்கமாக மாறிவிட்டது. அதை நம்பிய சில மக்களும் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதை போல அஸ்ஸலபிய்யாவை தவ்ஹீத் என்று நம்பி ஏமாந்து விடுகின்றார்கள்.


சில மக்கள் நினைக்கிறார்கள் 'ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எப்ப பார்த்தாலும் அஸ்ஸலபியாவை குற்றம் சொல்வதே வேலையாபோச்சி' என்று நாம் ஏன் அவர்களை விமர்சனம் செய்கின்றோம் என்றால ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக அல்ல மாறாக எல்லா இயக்கங்களும் தவ்ஹீத் கொள்கைதான் என்று நம்பி ஏமாந்து வழி தவறிப்போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். 


ஏன்? எதற்காக ? என்ன ஆதாரம் ? என்று அணுஅணுவாக கேள்வி கேட்டுப்பின்பற்றுவோர் தவ்ஹீத்வாதி. எந்த கேள்வியையும் கேட்காமல் தலைவர் சொல்வதுதான் தன் வழி என்று சாக்கடையில் விழுவது சமாதி 
வழிபாட்டில் உள்ளவன் கொள்கை.


மறுமையில் மண்டியிட்டு மன்றாடும் சில கூட்டத்தாரைப்பற்றி அல்லாஹ் சொல்கின்றான் 'எங்கள் இறைவா! எங்;கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்' எனவும் அவர்கள் கூறுவார்கள்(33:67)
தலைவருக்கு கட்டுப்படுதல் என்பது அவரை கண்மூடி பின்பற்றுவதையே இங்கே அல்லாஹ் சொல்கின்றான். அவர் எது சொன்னாலும் சிரி என்று நம்புவதும், அவர் தவருசெய்தாலும் ஏன் எதுக்கு என்று கேள்வியின்றி தாழ்ந்துபோவதுமே அல்லாஹ் மேற்குறிய வசனத்தில் பறைசாற்றுகின்றான்.
தவரு செய்வோனின் தவரை கண்டு கொள்ளாமல் அவர்களை சிறந்தவர்கள் என்று கூறுவது முஸ்லிமின் பண்பில்லை. அந்த வகையில் அஸ்ஸலபியாவை சிறந்த தவ்ஹீத் ஜமாஅத்தாக ஏற்றுக்கொள்ளவில்லை அஸ்ஸபியா பெரியார்கள் செய்யும் மார்க்கமற்ற செயல்கள் ஒன்றா? இரண்டா? அடுக்கி கிட்டே போகலாம்.

காரணம் இல்லாமல் அவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவில்லை ஆதாரத்துடன் தான் அவர்கள் வழிதவறிய கூட்டம் என்று சொல்கின்றோம்.
மேற்குறிப்பிட்ட அஸ்ஸலபிய்யா என்ற தவ்ஹீதில் இருந்து வழிதவறிய இயக்கமானது பரகாதெனியாவை தலைமையாக கொண்டு ஜே.ஏ.எஸ்.எம் என்ற பெயரில் இயங்கும் இயக்கம்.

அதில் அபூபர் சித்தீக் மதனி , இஸ்மாயில் ஸலபி, கலீலுர்ரஹ்மான், றிஸ்வான் மதனி போன்றவர்கள் அங்கதவர்களாக கொண்ட ஒரு இயக்கம். 
குர்ஆன்,சுன்னாவை தவிர எதை பின்பற்றினாலும் வழிகேடு என்று சொன்ன ஜே.ஏ.எஸ்.எம் என்ற அஸ்ஸலபியா இயக்கம் இன்று எப்படி மாறிப்போய் விட்டது என்றால் அல்குர்ஆன் சுன்னாஹ் அத்தோடு ஸலபுஸ் ஸாலிஹீன்கள் இவைகளும் மூல ஆதாரம் தான் என்ற வழிகெட்ட கொள்கைக்கு திரும்பிவிட்டார்கள். இதை அவதூறாகவோ அநியாயமாகவோ சொல்லவில்லை அவர்களின் கைப்பட எழுதிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சொல்கின்றோம்.

அஸ்ஸலபியா தவ்ஹீத் என்ற பெயரில் உள்ள இயக்கம் பல ஆலிம்களை கொண்டு ஒரு தர்ஜுமா வெளியிட்டது. அந்த தர்ஜுமாவுக்கு அஸ்ஸலபியாவின் முதீர் எக்கள் சித்தீக் அபூபக்ர் சித்தீக் மதனி மதிப்புரை வழங்கும் போது
( இம்மொழியாக்கத்தின் தமிழ் நடை எளிமையானதாகவும், அடைப்புக்குறிகள் குறைவானதாகவும் இருப்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகும். அதேவேளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலும் ஸலபுஸ் ஸாலிஹீன்களது விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் இம்மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ) பாருங்கள் எதை வழிகெட்ட கொள்கைகள் சொல்லிவந்ததோ அதே கருத்தை அப்படியே சொல்லிக்காட்டி இதும் எங்கள் கொள்கைதான் என்று சொல்கின்றார்
அறிவுள்ள மக்களுக்கு இந்த அஸ்ஸலபியா இயக்கம் வழிகெட்டுவிட்டது என்பதற்கு முதீர் சொன்ன இது ஒன்றே போதும்.
ஆனாலும் சில செய்திகளை இன்னும் குறிப்பிட்டுக்காட்டி இவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும், பல காலமாக தவ்ஹீத் என்ற லேபலில் எப்படி காய் நகர்த்தியிருக்கிறார்கள் என்பதையும் மக்களை எப்படி ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்.
ஜே.ஏ.எஸ்.எம் என்ற இயக்கத்தின் மூத்த அறிஞர்களின் ஒருவரான றிஸ்வான் மதனி இஸ்லாம் கல்வி என்ற தங்கள் கருத்துக்களை எழுதும் ஒரு இணையதளத்தில் 15-11-2011 அன்று காப்பி அடிக்கும் நவீன முஜ்தஹிதுகள் என்ற ஒரு தலைப்பில் கட்டுரை(குருட்டுரை) வெளியிட்டு இருந்தார்.
அதில் இஸ்லாத்தைப்பற்றி குறிப்பிடும் போது இஜ்மா-கியாஸ் என்பதும் மார்க்கத்தில் உள்ளதாக சித்தரித்துக்காட்டுகின்றார். இஜ்மா-கியாஸ் ஏற்றுக்கொள்வது தவ்ஹீத் வாதிகளின் கொள்கையில்லை என்பது தவ்ஹீதை விளங்காதவர்களுக்குக்கூட தெரிந்த ஒரு அம்சம் அதைக்கூட ஆதரித்து வெளிட்டுயிருக்கிறார் என்றால் இவர்களை என்ன என்று சொல்வது.
அதே போல் கட்டுரைகளில் தான் இப்படி என்று இல்லை சந்தர்ப்பத்துக்கு நரிவேசமும் போடுவார்கள். 
பாருங்கள் ஒருநாள் மாவத்தகம காவல்துறையில் 2009-10-14 அஸ்ஸலபியா என்ற வழி தவரிய ஜமாஅத்தின் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி ,செயலாளர் கலீலுர்ரஹ்மான் , இஸ்மாயில் ஸலபி போன்றவர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர்ராசிக் மீது ஒரு முறைப்பாடு பதிவு செய்கிறார்கள். அந்த கூட்டத்தில் இருந்த அஸ்ஸலபியா சார்பில்; ஒரு குட்டி அபூஜஹ்ல் காவல் அதிகாரியிடம் ' தவ்ஹீத் வாதிகள் சிலையை வணங்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று போட்டுக்கொடுத்தான். குட்டி அபூஜஹ்ல் சொன்னது பற்றி சித்திக்கிடமும், ஸலபியிடமும், கலீலிடமும் கேட்கப்பட்டது  முக்காடு போட்டு மௌனம் சாதித்தார்கள். அதன் மூலம் உறுதியாக தெரியவந்தது இவர்கள் அயோக்கியர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்க ஷிர்க்கையும் ஆதரிப்பார்கள் சாக்கடையிலும் இறங்குவார்கள் என்பதை மக்கள் மத்தியில் இல்லாமல் மௌனமாக மாவத்தகமையில் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் முன்னால் சொன்னால் அஸ்ஸலபியா தவ்ஹீத் லேபல் நாரிப்போகும் என்பதால் மாவத்தகமையில் மறைத்து விட்டார்கள்.

 அதுமட்மில்லங்க இவர்களின் ரவுடிச்சேட்டையில் அடுத்த கட்டமாக 

சில மாதங்களுக்கு முன்னால் பரகாதெனியாவில் உள்ள அத்தக்பீர் என்ற புத்தகக்கடையின் உரிமையாளர் பரகாதெனியாவில் மார்க்கத்தை பரப்பி வந்தார் அவரின் பிரச்சாரத்துக்கு எதிராக அஸ்ஸலபியா ஜமாஅத் பலவித இன்னல்களையும் தொல்லைகளையும் கொடுத்து வந்தார்கள்;. 
இதே நிலை தொடர்ந்து நீடித்தது ஒரு நாள் சத்தியப்பாதையில் பரகாதெனியாவில் ஜும்ஆ தொழுகை ஸ்ரீ லங்க தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயினால் நடத்தப்பட்டது. தொழுகைக்கு எதிராக வழிகெட்ட அமைப்புகள் குரைக்க ஆரம்பித்தது. பரிச்சனை கிளம்பி காவல் நிலையம் வரை சென்றது. முக்கியமாக அவர்களுடன் கைகோர்த்து வந்தவர்கள் அஸ்ஸலபியா என்பது குறிப்படத்தக்கது. அதில் எஸ்.எல்.டி.ஜே க்கு எதிராக காவல் நிலையத்தில் ஒருவன் 'ஐய்யா ஜும்ஆ தொழுகைக்கு குறைந்தது 40 பேர்களாவது வேண்டும் இவர்கள் வீட்டில் ஜும்ஆ தொழுகின்றார்கள் இவர்களின் ஜும்ஆ செல்லாது' என்றான். அதை கேட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் அதற்கு பதில் சொல்லாமல் நல்ல நோக்கத்தில் அஸ்ஸலபியா ஆலிம்களான ஆபுபக்கர், ஸலபி பக்கம் அந்த கேள்வி கேளுங்க அவங்களே அதற்கு பதில் சொல்வார்கள் என்றார்;. ஆனால் அபூபக்கர் சீத்திக் மதனி அஸ்ஸலபியா அதிபர் பழைய தவ்ஹீத் வாதி என்ன சொன்னார் என்றால் ஆமாம் 40 பேர் அவசியம்தான் 39 பேர் இருந்த தொழமுடியாது என்ற மத்ஹபு கருத்தை உண்மை படுத்தி சொல்லி தன்னை ஒரு முனாபிக் என்பதை இனம் காட்டிக்கொண்டார். கோமாலி என்பதையும் காண்பித்தார்.

இவர்களின் காக்கபிடிப்புக்கும் ஒரு அளவில்லை

ஜமாதே இஸ்லாமிய என்ற ஷியாக்கள் அடிப்படையில் இயங்கும் இயக்கத்தின் பத்திரிகை அல்ஹஸனாத். அந்த பத்திரைகையை வாழ்த்தி வால் புடிச்சாரு நம்ம இஸ்மாயில் ஸலபி.  உண்மை உதயம் என்ற பெயரில் உள்ள அவரின் கருத்துக்களை எழுதும் கடதாசியில்2005-05 பக்கம் 3யில் பல வழிகெட்ட பத்திரைகையை புகழ்ந்து கொண்டு வரும் போது அல்ஹஸனாத்தையும், எங்கள் தேசத்தையும், மீள்பார்வை போன்ற பத்திரிகையை ஊக்கு வித்து வளர்க்க வேண்டு;ம் என்று புகழ்ந்து தள்ளுகின்றார் வழிகெட்ட பத்திரிகைகளை தோழுரித்து மக்களுக்கு காண்பிக்க வேண்டிய சகோதரர் இஸ்மாயில் அவர்கள் இப்படி வழிகேட்டை வாங்கி பாகேட்ல போடுவது நியாயமா?
உலரல் மன்னர் மார்க்கத்தை சமரசம் செய்யும் சமரசமன்னர் என்று அழைக்கப்படும் அகார் முஹம்மது(ஜமாதேஇஸ்லாமி-ஷியா) இவர் வைத்துள்ள இணைய தளத்தில் உள்ள தகவல்களை படிச்சி பாத்து இஸ்மாயில் ஸலபி வாழ்த்துச்செய்தி அனுப்பி வைக்கிறார் ' தமிழ் உலகிற்கு நன்கு பரீட்சியமானவரும் தலைசிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான அஷ்ஷைக் அகார் முஹம்மது நளிமியின் ஆழமான இந்த சிந்தனை அனைத்து மொழியிலும் வளர அல்லாஹ்விடம் பிராத்திக்கிறேன்'
அதுமட்டுமா புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் ஜமாத்தே இஸ்லாமின் ஒன்று கூடலில் இஸ்மாயில் ஸலபி அழைக்கப்பட்டார் அவர் அங்கு உரை நிகழ்த்தினார் ஆனால் அவர்களின் கொள்கை பற்றி எந்த வித மறுப்பும் சொல்ல வில்லை.


இஸ்லாஹிய அரபுக்கல்லூரியிக்கு ஒரு நாள் நிகழ்வுக்கு இஸ்மயில் ஸலபி அழைக்கப்பட்டார் .அங்கு நிகழ்ச்சியின் போது கேள்வி கேட்கப்படுகின்றதுஃ பிஜே என்பவரை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? என்று அதற்கு இஸ்மாயில் ஸலபி சொன்னாறு ஒரு காலத்தில் காதியானி நன்றாகத்தான் இருந்தார்கள் அது போல் !!!பிஜே அப்படியில்லை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அந்த நிலைக்கு போனாலும் போவார் என்றார்.



இப்படி ஜமாதே இஸ்லாமியை சந்தோசப்படுத்த எப்படியல்லாம் நாக்கை வளைத்து பேசியிருக்கிறார் என்பதை பாரத்த பின்பும் இவர்களை மக்களுக்கு இனம்காட்ட வில்லை என்றால் எப்படி இருக்கும்?
புதுப்பள்ளி திறப்பு ஜும்ஆ உரை விஷேட பேச்சாளராக றிஸ்வான் மதனி அழைப்பட்டார் அந்த பள்ளி வாசளில் நபி வழிக்கு மாற்றமாக பித்அத் முறைப்படி இரண்டு பாங்கு சொல்லி ஜும்ஆ நடத்தப்பட்டது கூட்டுதூஆவும் ஒதப்பட்ட பள்ளி. பித்அத் என்று சொன்னாறா இல்லை பேசாமல் வந்துட்டாரு பாருங்களேன் இவர!
இவளே குப்பைகளை தாங்கிச்செல்லும் குப்பை லாரியாக இருக்கும் இவர்கள் எந்த முறையிலாவது மக்களை தக்க வைக்கவேண்டும் என்பதற்காக 2012-09-29,30 அன்று ஒரு இஜ்திமா நடத்தினார்கள். அதில் பேசப்படும் பேச்சுக்கள் அதில் சொல்லப்படும் சொற்கள் இவைகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? அதிகமான இடங்களில் நாக்குத்தவறிய இவர்களின் நாக்கில் இருந்து வரும் வார்த்தைகளை நம்புவார்களா? 


அவர்களைப்பற்றி அறியாத மக்கள் அங்கே சென்று கலந்துகொண்டார்கள். சீக்கிரத்தில் அவர்களின் அயோக்கியத்தனத்தை மக்கள் புரிந்து கொண்டு சத்தியப்பாதையில் செல்லும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைந்து கொண்டு இந்நாட்டில் தவ்ஹீத்தை வளரச்செய்யும் காலம் தொலைவில் இல்லை... 

முஹம்மது நப்லி
-  நன்றி - குழப்பிகள் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger