ரிஸானா நபீக் அறிந்ததும், அறிய வேண்டியதும்.


கொலை பற்றிய சுருக்க அறிமுகம்.

இலங்கை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் கடந்த 09 புதன் கிழமை சவுதி அரேபியாவில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உயிரிழந்தார். இவர் வேலை செய்த வீட்டு எஜமானியின் குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளின் படி தண்டிக்கப்பட்ட ரிசானா நபீக் விஷயமாக பல விதமான வாதப் பிரதிவாதங்களும், இஸ்லாம் மீதான விமர்சனக் கண்ணோட்டங்களும், பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் தொடர்ந்தும் எழுப்பப்பட்ட வன்னமே இருக்கின்றன. இது தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையின் மூலம் நாம் அறிய இருக்கின்றோம்.
ரிசானா விஷயமாக எழுப்பப்படும் வாதங்களும் பதில்களும்.
ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான சில விமர்சனங்கள் பரவலாக மீடியாக்கள் மூலமாக வைக்கப்பட்டு வருகின்றன. அந்த விமர்சனங்களுக்குறிய பதில்களை ஆரம்பமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
17 வயது சிறுமிக்கு மரண தண்டனை நிறைவேற்றலாமா?
ரிசானா நபீக் என்பவர் 17 வயது நிறம்பிய ஒரு சிறுமி. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் வயது வந்தவர்களாக அறியப்படுவார்கள் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஏகோபித்த முடிவாகும். இதில் சவுதி அரசம் கையெழுத்திட்டுள்ளது. அப்படியிரக்க 17 வயது சிறுமியை கொலை செய்தது எந்தவிதத்தில் நியாயம்? சிறுவர்களை கொல்லும் அளவுக்கு கொடூரமான சட்டத்தையா இஸ்லாம் சொல்கின்றது? என்பது ரிசானா விஷயத்தில் வைக்கப்படும் முதல் விமர்சனமாகும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் வயது வந்தவர்கள் என்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வயது வராத சிறுவர்கள் என்றும் ஐ.நா தீர்மானித்திருக்கின்றது. முதலில் இது ஒரு தவறான முடிவாகும். காரணம் 18 வயதில் தான் ஒருவன் வயதுக்கு வருவான் அதற்கு முன்பு வயதுக்கு வரமாட்டான் சிறுவன் என்ற அந்தஸ்தில் தான் இருப்பான் என்பதை எதை அடிப்படையாக வைத்து ஐ.நா தீர்மானித்தது? புத்திசாலித் தனமாக முடிவெடுக்க வேண்டியவர்கள் வயதுக்கு வந்தவர்கள், வயதுக்கு வராதவர்கள் என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு சரியான அளவு கோலை கொண்டிராமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதில் கவணிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் ரிசானா நபீக் 17 வயதுடையவர் அவருக்கு மரண தண்டனை விதித்தது தவறு என்பது இலங்கை அரசின் நிலை. ஆனால் இந்த விஷயத்தை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இதில் முழுக் குற்றமும் இலங்கை அரசைத் தான் சேருமே தவிர சவுதியை அல்ல. சவுதி அரசு வழங்கிய தீர்ப்பு என்பது கடவுச் சீட்டின் (பாஸ்போட்) தேதியை வைத்து முடிவெடுக்கப்பட்ட ஒன்றாகும். கடவுச் சீட்டில் போலியான தேதியை குறிப்பிட்டு திருட்டுத் தனமாக கடவுச் சீட்டு செய்ததற்குறிய முழுப் பொருப்பும் இலங்கை அரசைத் தான் சேறும். சவுதியைப் பொருத்த வரை ரிசானா கொலை செய்யும் போது வயது 24. காரணம் கடவுச் சீட்டு ரிசானாவின் வயதை 24 என்று தான் சொல்கின்றது.
அப்படியானால் ரிசானா குற்றவாளியானமைக்கு யார் காரணம் திருட்டுத் தனமாக கடவுச் சீட்டை செய்தவர்களும், அதற்கு வழி வைத்து இலங்கை அரசுமா? அல்லது தண்டனை கொடுத்த சவுதி அரசாங்கமா? கண்டிப்பாக இலங்கை அரசுதான் இதற்குப் பொறுப்பு என்பதை சிந்திப்பவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
சிறுமியா? வயதுக்கு வந்தவளா? என்பதை எதை வைத்துத் தீர்மானிப்பது?
சிறுவர்கள் என்பதையும் வயதுக்கு வந்தவர்கள் என்பதையும் தீர்மானிப்பதற்கான அளவு கோளாக 18 வயதைத் தான் உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் இந்த 18 வயது என்ற வரம்பு குற்றவாளியைத் தீர்மானிக்க முடியாத குழப்பத்தை உண்டாக்கக் கூடிய ஒரு முடிவாகும். அதனால் குற்றவாளிகளை இனம் காண்பதற்கு ஒரு பொதுவான நிலைபாட்டின் பக்கம் உலகு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
காரணம் ரிசானா 17 வயதுடையவள் அவளை தண்டித்திருக்கக் கூடாது என்று வாதிடும் அனைவரும் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இடம் பெற்ற கற்பளிப்பு மற்றும் கொலை சம்பவத்திற்கு தீர்வு காண முடியாமல். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குறை கண்டு வாய் மூடியிருப்பதை காண முடிகின்றது.
ஆம் ரிசானாவின் 17 வயதை எல்லையாக தீர்மாணித்து இஸ்லாத்தின் மீது கலங்கம் சுமத்தும் இவர்கள் டெல்லியில் நடந்த சம்பவத்திற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? வயதெல்லை பற்றி பேசுபவர்கள் இதற்கு பதில் தருவார்களா?
சிறுவனுக்கு தண்டனை வழங்கலாமா?
டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட 6 காமக்கொடூரர்கள் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை 5 பேர் மீது மட்டும்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 6வது நபராக உள்ள குற்றவாளிக்கு 17வயதுதான் ஆகியுள்ளது என்பதால் அவன் சிறுவன் என்ற அந்தஸ்தில் இருப்பதாகவும்இ சிறுவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும்இ அவனை சிறைக்கு அனுப்புவதற்கும் சட்டத்தில் இடமில்லை என்றும்இ வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையை(?) சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு படிக்க அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் இருப்பதால்இ அவனை பாலர் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் பேசி வருகின்றனர். அந்த பச்சிளம் குழந்தைக்கு(?) தண்டனை வழங்கலாமா? கூடாதா? என்ற கேள்விதான் தற்போது இந்தியாவில் முக்கியமான விவாதமாக நடந்து வருகின்றது.
கற்பழித்து காமக் கொடூரச்செயல் செய்த சிறுவன்(?) 5மாதத்தில் விடுதலையாம்:
டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரப்பி மாணவியை மிகக் கொடூரமாக தாக்கிஇ பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் 17வயது நிரம்பிய சிறுவன்(?) என்று சொல்லப்படக்கூடியவன்தான் மாணவியை மிகவும் மோசமாக தாக்கியவன் மற்றும் இரண்டு முறை பலாத்காரம் செய்தவன் என்றும் போலீஸார் கூறுகிறார்கள். இவனால்தான் அப்பெண் படுகாயமடைந்தார்இ பின்னர் உயிரிழந்தார். ஆனால் இவனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் இவனை மற்ற கோர்ட்டுகளில் விசாரிப்பது போல விசாரிக்க முடியாது. மாறாகஇ சிறார் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த முடியும்.
மேலும் இவனை சிறையிலும் அடைக்க முடியாது. சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்க்க முடியும். மேலும்இ இந்த சிறுவன் பெரும் தண்டனையிலிருந்து எளிதாக தப்பி விடும் அளவுக்கு சட்டம் இவனுக்குச் சாதகமாக உள்ளது.
குற்றம் இழைத்தபோது இந்த சிறுவனுக்கு வயது 17 என்பதால் இவனுக்கு கடும் தண்டனை கிடைக்காது. இந்த குற்றச்சாட்டு உண்மையாகுமேயானால் அதிகபட்சம் 3 வருடம்தான் அவனுக்கு தண்டனை கிடைக்கும். 3 வருட தண்டனையைக் கூட இவன் சிறையில் கழிக்க முடியாது. மாறாக சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்ப்பார்கள். அங்கு தண்டனை கிடையாதுஇ மாறாக போதனைதான் தருவார்கள். – இவனுக்கு 18 வயதாக இன்னும் சில மாதங்களே உள்ளன. இவனுக்கு இன்னும் 5 மாதத்தில் 18 வயது பூர்த்தியாகிவிடும். 18 வயதை எட்டி விட்டால் யாரையும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்க முடியாது. விடுவித்து விட வேண்டும். – அப்படி விடுவிக்கப்பட்ட பின்னர் இவனை சிறைக்கு மாற்றலாமா என்றால் அதுவும் முடியாது. காரணம்இ சிறார் குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை வழக்கமான சிறைக்கு மாற்ற முடியாதுஇ மாற்றக் கூடாது. அது சட்டவிரோதமாகும்.
பாலியல் பலாத்காரத்திலும்இ கடும் தாக்குதலிலும் ஈடுபட்டு மாணவியின் உயிர் போகக் காரணமான இந்த சிறுவன்(?) தற்போது பெரிய அளவிலான தண்டனை எதிலும் சிக்காமல் தப்பி விடும் வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாலியல் வன்கொடுமை புரிந்ததில் முதல் ஆளாக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூரனுக்கு 5 மாதங்களில் விடுதலையளிக்கக்கூடிய அளவிற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதை நினைத்து தற்போது அனைத்து தரப்பு மக்களும்இ அதிகாரிகளும் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.
மேற்கண்ட அவல நிலைக்கு காரணம் 18வயது யாருக்கு பூர்த்தியாகின்றதோ அவர்கள்தான் பெரியவர்கள் என்றும்இ 18 வயது பூர்த்தியாகதவர்கள் அனைவரும் குழந்தைகள் என்றும் இந்தியாவில் அற்புதமான(?) சட்டத்தை இயற்றி வைத்துள்ளனர்.
ஒரு பெண்ணை கொடூரமான முறையில் கற்பழித்து நாசக்கேடாக்கிஇ கொலை செய்த ஒருவன் சிறுவனா அல்லது பெரியவனா என்று இவர்கள் ஆய்வு செய்து கொண்டுள்ளார்களாம். அவன் சிறுவன்தானா என்பதை உறுதி செய்ய அவனுக்கு எலும்பு சோதனை செய்யப் போகின்றார்களாம்.
சோதிக்கப்பட வேண்டியது எலும்பா? மூளையா?:
ஒரு பெண்ணை கற்பழித்து காமக்கொடூர செயலை செய்தவனை 18வயது பூர்த்தியாகாத ஒரே காரணத்திற்காக சிறுவன் என்று சொல்வார்களேயானால் சோதனை செய்யப்பட வேண்டியது அவனது எலும்புகள் அல்ல; இவர்களது மூளைதான். இவர்களுக்கு மூளை என்ற ஒன்று உள்ளதா என்று இவர்களை சோதித்துப் பார்க்க வேண்டியதுதான் காலத்தின் கட்டாயம் என்பதும் தற்போது நமக்கு தெரிய வருகின்றது.
இந்த அளவுக்கு காமவெறியாட்டம் ஆடிய ஒருவனை சிறுவன் என்று சொல்வது எப்படி? இது சரியா? என்று அனைவரது உள்ளமும் உறுத்தியிருப்பதால்தான் தற்போது இந்த சட்டம் தவறான சட்டம் என்பதை அனைத்து அரசுகளும் உணரத்துவங்கியுள்ளன.
உள்துறை அமைச்சர் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டம் :
18 வயது நிறைவடையாதவர்கள் குற்றம் செய்தால் மைனர் என்ற காரணம் கூறி தப்பிவிடுகின்றனர். இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்தும்இ பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் அதிகபட்ச தண்டனை ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்வதற்காக  கடந்த ஜனவரி 4அன்று இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அனைத்து மாநில டி.ஜி.பிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
18வயது பூர்த்தியானால்தான் மேஜர்; அதற்கு கீழுள்ளவர்கள் சிறுகுழந்தைகள் என்ற சட்டம் கிறுக்குத்தனமான சட்டம் என்பதை அனைத்து டி.ஜி.பி.க்களும்இ அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் ஒப்புக் கொண்டனர். எனவே இனிமேல் 16 வயதானாலே மேஜராக கருதி குற்ற வழக்கில் தண்டனை அளிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வளவு பிரச்சனைகள் வந்த பிறகு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து இப்போது மைனர் வயதை குறைப்பதுதான் இதற்கான தீர்வு என்று முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் தற்போது எடுத்துள்ள இந்த முடிவு சரியானதுதானா என்று நாம் ஆய்வு செய்வோமேயானால் அதிலும் இவர்கள் தவறிழைக்கத்தான் செய்கின்றார்கள். மைனர் வயதை 16ஆக குறைத்தாலும் 15 வயது பையன் இந்த சேட்டையை செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
இந்தியாவில் தமிழகத்தில் தன்னிடம் ட்யூசன் படிக்க வந்த 15 வயதே நிரம்பிய ஒரு மாணவனை குமுதா என்ற ஆசிரியை உல்லாசம் அனுபவிக்க டெல்லிக்கு அழைத்துச் சென்று போலீசாரிடத்தில் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவங்கள் இவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா?. ஆசிரியையோடு விபச்சாரம் செய்து உல்லாசம் அனுபவித்த அந்த மாணவனையும் சிறுகுழந்தை என்று சொல்லப்போகின்றார்களா?
அதுபோல இந்தியாவில் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம்கோமட்டி பள்ளியைச் சேர்ந்த ரம்யா என்ற ஆசிரியை அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் நாகேஷ் என்ற 15 வயதே ஆன மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கல்யாணமும் செய்து கொண்ட சம்பவத்தால் ஆந்திரா மாநிலமே பரபரப்பானது இவர்களுக்குத் தெரியாதா?
இதைவிட மோசமாக அமெரிக்காவில் அமன்டாசோடலோ என்ற 36 வயது நிரம்பிய ஆசிரியை டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில் படித்த 14 வயது மாணவன் ஒருவனுடன் உறவு வைத்ததன் விளைவாக கர்ப்பமான காரணத்தால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை இவர்கள் பத்திரிக்கைகளில் படிக்கவில்லையா? அல்லது இவர்கள் பூமி அல்லாத வேறு கிரகத்தில் வசிக்கின்றார்களா?
ஆண்களின் நிலை இதுவென்றால் பெண்களின் நிலையை சொல்லவே வேண்டாம். “இராமநாதபுரத்தில் பள்ளிக் கூடத்தில் பிள்ளை பெற்ற 8ஆம் வகுப்பு மாணவி. ஆசிரியர்கள் அதிர்ச்சி!” என்று நாள்தோறும் வெளியாகும் இது போன்ற செய்திகள் இவர்களது கண்களில் படவில்லையா?
ஆக இந்தப் பிரச்சனைக்கு மைனர் வயதை 16 ஆகக் குறைத்து எந்தப் புண்ணியமும் இல்லை. மாறாக மைனர் யார்? மேஜர் யார்? என்பதற்கான சரியான அளவுகோலை இவர்கள் கையில் எடுத்து சட்டமியற்றினால்தான் இந்தப் பிரச்சனைக்கு சரியான நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இந்த விஷயத்திலும் வல்ல இறைவன் வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் நமக்கு அழகான வழிகாட்டுதலை கூறுகிறது.
இஸ்லாம் சொல்லக்கூடிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பூப்பெய்து பருவ வயதை அடைந்த 15இ 16 வயது பெண்களுக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அடிப்படையில் திருமண ஏற்பாடுகளைச் செய்த போதுஇ அநியாயக்கார அதிகாரிகள் சிறுகுழந்தைக்கு ஏன் திருமணம் முடித்து வைக்கின்றீர்கள் என்று முஸ்லிம்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்து அடாவடி செய்தனர்.
சிறுகுழந்தை எப்படி பூப்பெய்யும்?
சிறுகுழந்தைக்கு எப்படி குழந்தை பிறக்கும்? என்ற சாதாரண அறிவுகூட இல்லாமல் இவர்கள் நடந்தனர்.
ஆனால் தற்போது 16வயதில் கற்பழிப்பு செய்தவன் எப்படி சிறுகுழந்தையாக  இருக்க முடியும் என்று இவர்களே கேள்வியெழுப்புகின்றனர். அத்தகைய நிலையை வல்ல ரஹ்மான் அவர்களுக்கு இப்போது ஏற்படுத்தியுள்ளான்.
பருவ வயதை அடைவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்:
மைனர் வயது என்பதுஇ 16 அல்லது 15 வயது என்று ஏதாவது சட்டதிட்டங்களைப்போட்டு அதில் குழம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இஸ்லாம் சொல்லக்கூடிய வழிமுறைகளை இவர்கள் கடைபிடிப்பார்களேயானால் எந்த குழப்பமும் வராது.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பருவமடைந்து விட்டார்களா? என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே ஒழிய வயது ஒரு பிரச்சனை இல்லை என்பதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய அழகான தீர்வு.
ஆணாக இருந்தாலும்இ பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பருவமடைந்து விட்டார்களேயானால்  அவர்கள் மேஜர் என்றும்இ பருவமடையாவிட்டால் மைனர் என்றும் அழகான கோட்டை இஸ்லாம் போட்டுக்காட்டுகின்றது. அந்த அடிப்படையில் நாம் சட்டங்களை வகுத்தால் சிறுகுழந்தை கற்பழிக்குமா? அவன் குழந்தையா? அவனுக்கு எலும்பு மஜ்ஜையில் சோதனை செய்ய வேண்டுமா? என்ற குழப்பமெல்லாம் வராது.
மாறாக அவன் பருவமடைந்திருந்தால் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். பருவமடையாத சிறுவனால் இது போன்ற சேட்டைகளை செய்ய இயலாது எனும்போது அதுவே அந்தப் பிரச்சனையில் தீர்வு காண எளிய வழியாக அமைந்துவிடும்.
எனவே அரசாங்கங்களும்இ ஐ.நா வும் ஆழமாக யோசித்துஇ முழுமையாக ஆய்வு செய்து இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த சட்டத்தின் அடிப்படையில் சட்டமியற்றுமேயானால்இ இதுபோன்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
இது போன்ற பிரச்சனைக்கு இஸ்லாம் கூறும் தீர்வின் பக்கம்தான் மக்கள் வரவேண்டியுள்ளது. இஸ்லாம் கூறும் தீர்வுதான் இறுதியான தீர்வு என்பதையும்இ அதுதான் சரியான உறுதியான தீர்வு என்பதையும் மக்கள் சன்னஞ்சன்னமாக விளங்கி வருகின்றார்கள். காரணம் என்னவென்றால் இது இறைவனுடைய மார்க்கம் என்பதால்இ படைத்த இறைவனுக்குத்தான் தெரியும் மனிதன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சரியானதாக இருக்கும் என்பது. இந்த நிகழ்வுகளும் இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை உண்மைப்படுத்துகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை
2. சிறுவன் பருவ வயதை அடையும் வரை
3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: நஸயீ 3378 அபூதாவூத் 3822 இப்னுமாஜா 2031
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும் உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும்இ நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும் இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் (24 : 58))
ரிசானா தண்டிக்கப்பட்டது போல் அமெரிக்காவைச் சேர்ந்தவரோ அல்லது சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்வரோ தண்டிக்கப்பட்டுள்ளாரா?
பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல;  குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு  போராடும் மனித (?) உரிமைப் போராளிகளும்இ இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று திட்டமிட்டு பரப்பி வரும் ஊடகங்களும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டுஇ இஸ்லாமிய மார்க்கத்தைக் களங்கப்படுத்தப் போராடி வருவதால் அவர்களுக்குப் பதிலளிப்பதற்காக இந்தக் கட்டுரை.
குற்றவாளி இலங்கைப் பெண் என்பதால் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்கராகவோ ஐரோப்பியராகவோ இருந்தால் ராயல் பர்டன் எனப்படும் ராஜ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது.
அரசு சார்ந்த குற்றங்களுக்குத் தான் ராஜமன்னிப்பு பொருந்தும். தனிநபர் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை சவூதி மன்னரால் எதுவும் செய்ய முடியாது.
ஒரு மலையாளியைக் கொலை செய்த குற்றத்திற்காக  3 சவூதி இளைஞா்களுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. காரணம் அந்த மலையாளியின் வாரிசுதாரர்கள் மன்னிக்கவில்லை என்பதால்..
15 ஜுலை 1977 ஆம் ஆண்டு இளவரசி மிஸ்ஸால் பிந்த் ஃபஹத் பின் முஹம்மத் பின் அப்துல் அஜீஸ் ஆலே சௌத்இ படிக்கச் சென்ற இடத்தில் லெபனானில் நடந்த விபச்சார குற்றத்திற்க்காக ஜித்தாவில் வைத்து அவருடைய 19 வது வயதில் தலை வெட்டப்பட்டார்.
அதே போன்று 25 மார்ச் 1975ல் மன்னர் ஃபைஸல் பின் அப்துல் அஜீஸ் ஆலே சௌத் அவர்களை சுட்டு கொன்ற மன்னருடைய தம்பி மகன் இளவரசர் ஃபைஸல் பின் முஸைத் ரியாத் சதுக்கத்தில் பொது மக்கள் முன்னால் 18 ஜூன் 1975 தலை வெட்டப்பட்டார்.
ஆக சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே. இங்கு நாடு மொழி மதம் எதுவும் பார்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை மட்டுமே பார்க்கப்படுகின்றது.
ஒரு முன்னாள் பிரதமரையும் காவல்துறை உயர் அதிகாரியையும் இன்னும் 15 பேரையும் கொன்றவர்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரின் மனநிலையிலிருந்து பாராமல் ஜனாதிபதி மன்னித்தால் விடுதலை என்று கூறும் இந்தியத் திருநாட்டின் சட்டம் சவூதியில் இல்லை தான்.
டெல்லி பெண்ணைக் கற்பழித்துக் குடலை உருவிக் கொன்ற கயவர்களை பிரணாப் முகர்ஜி நினைத்தால் மன்னித்து விடலாம் என்று கூறும் இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.
படித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்று  கொண்டிருந்த ஏழை வாட்ச்மேனின் மகள் வினோதினியின் முகத்தை அமிலம் ஊற்றிச் சிதைத்துஇ கண்களைப் பறித்துஇ அவளை நிர்மூலமாக்கிய காமுகனையும் அரசாங்கம் நினைத்தால் மன்னித்து விடலாம் என்ற இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.
பாதிக்கப்பட்டவன் மன்னித்தால் தவிர வேறு யாரும் – அவர் மன்னராக இருந்தாலும் அதில் தலையிட முடியாது என்று சொல்லும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் தான் சவூதியில் இருக்கின்றது.
இதுபோன்ற சர்வதேச விமர்சனங்களுக்கு அஞ்சியே 30 லட்சம் ரியால்கள் (கிட்டத்தட்ட 5 கோடி இந்திய ரூபாய்) தருகிறேன்இ மன்னித்து விடுங்கள் என்று சவூதி அரசாங்கம் கெஞ்சியும் அந்தப் பெற்றோர் மன்னிக்கவில்லை என்றால் அவர்கள் அடைந்த பாதிப்பின் தன்மை நமக்குத் தெரியவில்லையா?
 ராஜ மன்னிப்பு இந்த விஷயத்தில் உண்டு என்றால் இப்படி நஷ்ட ஈடு தருகிறோம் என்று கெஞ்சுவதற்குப் பதில் அதைச் செய்திருக்குமே! இதைச் சிந்திக்க வேண்டாமா?
கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர்இ குற்றவாளியை மன்னித்திருக்கலாம். ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் மன்னிக்காமல் விட்டதற்காக அவர்களைக் குற்றம் சொல்லக் கூடாது. சட்டம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையைத் தான் இங்கு நாம் பார்க்க வேண்டும்.
சர்வதேச நிர்ப்பந்தத்திற்கோ விமர்சனங்களுக்கோ பயந்து இந்தத் தண்டனையை நிறைவேற்றாமல் இருந்தால் தான் அது அநீதி. இந்த விஷயத்தில் சவூதி அரசாங்கம் நீதியை நிலைநாட்டியுள்ளது.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தவறு செய்யவில்லை என்று ரிசானா எழுதியதாக ஒரு கடிதத்தைக் காட்டுகிறார்கள்.  ரிசானா நிரபராதி என்பதற்கு இந்த அறிவுஜீவிகள் சமர்ப்பிக்கும் மிகப் பெரிய ஆதாரம் இது தான்.
குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை மறுப்பது மட்டுமே அவர்  நிரபராதி என்பதற்கு ஆதாரமாகி விடுமா? உலகின் எந்த நாட்டிலாவது குற்றவாளியின் மறுப்பு சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா? கோவையில் இரண்டு குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள்இ இன்னொருவனுக்கு மரண தண்டனை விதித்தார்கள். அந்தக் குற்றவாளிகள்இ “சாமி சத்தியமாக நாங்கள் கொல்லவில்லை” என்று சொல்லி விட்டால் விடுதலை செய்து விட வேண்டும் என்று இந்த அறிவு சூனியங்கள் வாதிடுவார்களா?
இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் சரியாக விசாரிக்காமல் இந்தக் குற்றவாளிகளைக் கொன்று விட்டார்கள்இ நிரபராதிக்குத் தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று பாகிஸ்தான்காரன் வந்து குற்றம் சாட்டினால் இவர்கள் சும்மா விடுவார்களா?  அப்படியானால் சம்பந்தமில்லாமல் சவூதி அரேபிய காவல்துறையின் விசாரணையில் தலையிட இவர்கள் யார்?
ரிசானா எழுதியதாகக் கூறப்படும் அக்கடிதத்தில் விசாரணையின் போது நிர்ப்பந்தப்படுத்தி என்னிடம் கொலை செய்ததாகக் கையெழுத்து வாங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கிஇ அவளைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சவூதி அரசாங்கத்திற்கு என்ன வந்துவிட்டது? அப்படிச் செய்திருந்தால் 5 கோடி தருகிறேன்இ மன்னித்து விடுங்கள் என்று கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் என்ன?
எடுத்தேன் கவிழத்தேன் என்று இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு விடவில்லை. ஏழு வருட விசாரணைக்குப் பின் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தனை பெரிய மன்னராட்சியைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமே ஒரு குற்றவாளியை மன்னிக்கும் விஷயத்தில் தலையிட முடியவில்லைஇ பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மட்டுமே விடுதலை என்று கூறிஇ அடித்தட்டு மக்களின் சட்டமாகத் திகழும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. பழிக்காமல் இருங்கள்.
ஆசிய மனித உரிமை அமைப்பின் கண்டனம்?
ரிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இந்த விவகாரத்தை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் விசாரனைக்கு உட்படுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது. கோலை செய்த பெண்ணை மரண தண்டனை நிறைவேற்றியதற்காக – மனித உரிமை மீரலில் ஈடுபட்டதாக சொல்லும் ஆசிய மனித உரிமை அமைப்பு வேண்டுமென்றே பொதுமக்களை கொலை செய்து குவிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய இரானுவத்தையோ அல்லது ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளின் இரானுவத்தையோ எதிர்த்து ஆசிய மனித உரிமை அமைப்பு எப்போதாவது ஐ.நா வில் குரல் எழுப்பியதுண்டா?
பாலஸ்தீனத்தில் அழிக்கப்படும் மனித உயிர்கள் பற்றி வாய் திறந்ததா மனித உரிமை அமைப்பு. ஆனால் ரிசானா விஷயத்தை மாத்திரம் இவ்வளவு தூரம் தூக்கிப் பிடிப்பதற்கான காரணம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு இஸ்லாமிய குற்றவியல் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கம் இதில் சம்பந்தப்படுவதினால் அதனை குறை காணும் பொருட்டே இது போன்ற அறிக்கைகளையெல்லாம் மனித உரிமை அமைப்புகள் விடுகின்றனவே தவிர ரிசானா மீது கொண்ட அக்கரையினால் அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை அரசின் அரசியல் தந்திரம்.
ரிசானா நபீக் விஷயத்தில் இலங்கை அரசு தன்னை ஒரு தியாகியாகவே சித்தரித்துள்ளதை மீடியாக்கள் மூலம் நாம் அறியக் கிடைக்கின்றது. ரிசானா தொடர்பான அறிக்கைகளை வைத்து மாத்திரம் ரிசானா பற்றிய முடிவுக்கு வருபவர்கள் ரிசானா விஷயத்தில் அரசாங்கம் செய்தது சரி முடிந்தவரை போராடினார்கள் போன்ற வாதங்களினால் தங்கள் உள்ளத்தை அமைதிப்படுத்திக் கொள்கின்றார்கள்.
உண்மையில் ரிசானா விஷயத்தில் அரசாங்கம் என்ன செய்தது? என்ன செய்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக நாம் புரிய வேண்டும்.
ரிசானா நபீக் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டார் என்ற விஷயம் ரிசானா மரணத்தைத் தழுவி சுமார் 2 மணி நேரங்களுக்குப் பின் தான் இலங்கை அரசுக்கு இது தொடர்பான தகவல்கள் தெரிய வந்தன. பாராளுமன்றத்தில் ரிசானா தொடர்பான ஒரு கேள்வி எழும் போது அதற்கு ஒரு அமைச்சர் விரைவில் ரிசானா விடுவிக்கப்படுவார் பதில் சொல்கின்றார். அப்போது இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் தான் ரிசானாவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை சுட்டிக் காட்டுகின்றார். இந்த சம்பவத்தில் இருந்துதான் ரிசானா பற்றிய அரசாங்கத்தின் கண்கானிப்பு அவரை மீட்க வேண்டும் என்று எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டினார்கள்? இப்போது ரிசானா தொர்பிpல் அரசாங்கம் சொல்லும் செய்திகளுக்கும் அரசாங்கம் நடந்து கொண்ட முறைகளுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பதை அறிய முடிகின்றது.
•      ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிந்ததும் ரிசானாவுக்காக பாராளுமன்றத்தில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
•      சவுதியை கண்டித்து ஜனாதிபதியின் அறிக்கை வெளியிடப்பட்டது.
•      சவுதி தாயை கண்டித்து பௌசி அறிக்கை விட்டார்.
•      சவுதிக்கான இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்.
•      வெளிநாடு செல்பவர்களின் வயதெல்லையாக 25 அறிவிக்கப்பட்டது.
இவையனைத்தும் எதற்காக ரிசானா மீது கொண்ட பாசத்திலா? அல்லது வேசமா? கண்டிப்பாக இதுவும் ஒரு அரசியல் காய் நகர்த்தல் தான்.
ரிசானாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் போல் இதற்கு முன்பும் பல இலங்கையர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் அரசு இப்படியான நிலையை எடுத்ததா? இப்போது மாத்திரம் இந்த நிலைக்கு அரசாங்கம் செல்வதற்கான காரணம் ரிசானா என்ற பெண்னைப் பற்றி உலகம் முழுவதும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். ரிசானாவின் பெயரால் மூட்டப்பட்டுள்ள தீயில் அரசாங்கம் குளிர் காய நினைக்கின்றது. இது தான் உண்மை.
உண்மையாக ரிசானா விஷயத்தில் அரசாங்கம் எதோ ஒரு வகையில் அக்கரை காட்டியிருந்தால் ரிசானா விஷயத்தில் ஒவ்வொரு நாளும் கண்காணித்திருக்க வேண்டும். ஆனால் ரிசானா தண்டிக்கப்பட்டு இரண்டு மணி நேரங்களுக்குப் பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பான அமைச்சருக்கு தெரிவிக்கும் வரை அவருக்கு இந்த செய்தி தெரியாது என்றால் இவர்கள் ரிசானா விஷயத்தில் அரசியல் நடத்துகின்றார்கள். ரிசானாவைப் பற்றிய ஒரு சிரிய அக்கரை கூட இவர்களுக்கு இருக்கவில்லை. ஏன்பது தெளிவு.
அது மட்டுமன்றி ரிசானாவின் பெயரால் அரசாங்கம் செய்த மிகப் பெரும் மோசடிதான் ரிசானாவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கும் விதமாக சவுதிக்கான இலங்கைத் தூதுவரை திருப்பி அழைத்ததாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் உண்மையில் சவுதிக்கான இலங்கைத் தூதுவர் தனது பதவிக் காலம் முடிந்ததினால் தான் திரும்பி வந்தார் என்பது அடுத்த நாளே தெரியவந்தது. ஏன் இந்த நாடகத்தை அரசு நிகழ்த்த வேண்டும்? ரிசானாவின் பெயரால் அரசியர் நடத்துவதற்கான இப்படியான ஒரு ஏமாற்று விசயத்தை ஏன் அரசு கையில் எடுக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்தால் இறுதியில் கிடைக்கும் பதில் அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா.
இஸ்லாமிய குற்றவியல் தவறானதா?
“இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை”என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.
ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.
கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?
குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளா னவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மனநிறைவு அடைய வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.
குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும்இ குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள்இ காவல் நிலையங்கள்இநீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.
ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.
அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.
குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?
திருட்டு கற்பழிப்புஇ கொலை கொள்ளை இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோஇசில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும் பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.
சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.
நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும் அயோக்கியத் தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக் குள்ளேயே செய்து தரப்படுகின்றன.
இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால்இ எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ எந்த மக்களைக் கொலை செய்கிறானோ எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
இந்தப் பெயரளவிலான தண்டனை யால் ஒரு பயனும் ஏற்படாது;ஏற்படவில்லை.
 53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
 15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!
என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.
சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் “நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்?ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே” என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
மேலும் குற்றவாளிகள் சிறைச் சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.
சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.
ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.
மனிதாபிமானச் (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.
பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மன நிறைவு அடைவானா?என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் “ஆறு மாதம் சோறு போடலாம்” எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் “பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்” என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?
கற்பழிக்கப்பட்டவள் அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.
ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோஇ மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால்இ இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்இபல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
கண்ணை இழந்தவன் குற்ற வாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.
அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளி யாகும் நிலைமையும் உருவாகும். கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும்இ சிறைச் சாலையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? “கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது” என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.
இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.
திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள்இ பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.
மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.
முதன் முதலாகத் திருட எண்ணுபவ னும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.
கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
“இவர்கள் இங்கே இருக்கிறார்களா?” என்று திருடர்களின் புகைப் படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாள மாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.
தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.
“பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?
நேர்மையையும் ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல்இ அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கிய னுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.
இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.
உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன. கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.
உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும்இஉடமைக்கும்இ கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும். குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்திஇ கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா?என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.
இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.
மேலும் “எடுத்தேன்; கவிழ்த்தேன்” என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.
மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 24:4இ 24:13)
இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.
(மேலதிக தகவல்களுக்கு திருமறைக் குர்ஆனின் இந்த வசனங்களையும் பார்த்துக கொள்ளலாம் : 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)
இப்போது கசப்பது இதற்கு முன் இனித்தது ஏன்?
அரபு நாட்டில் நடை முறையில் உள்ள இஸ்லாமிய சட்டத்தை ரிசானாவின் மரண தண்டனையின் பின் குறை கண்டு அறிக்கை விடும் அரசியல் வாதிகள் இதற்கு முன் அவற்றை ஆதரித்து அறிக்கை விட்டதை மறந்துவிட்டார்கள் போலும். இலங்கையில் நடை பெரும் குற்றச் செயல்களைத் தடக்க வேண்டும் என்றால், முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் அரபு நாட்டு சட்டம் இலங்கையில் நடை முறைப் படுத்தப்பட வேண்டும் என்று இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் பல முறை பேசியுள்ளதை நாம் நினைவு கூற வேண்டும்.
ரிசானாவுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பேசிய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்கள். இலங்கையில் குற்றச் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றால் அரபு நாட்டு சட்டங்கள் இங்கே அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த செய்தி ஊடகங்களில் வெகுவாகப் பேசப்பட்டது.
அதே போல் அமைச்சர் மேவின் சில்வா, அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் உள்ளிட்ட பலரும் பாராளுமன்றத்தில் கூட அரபு நாட்டுச் சட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பில் சிலாகித்துப் பேசியிருக்கின்றார்கள். ரிசானா நபீக்கின் மரண தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பு இனித்த இஸ்லாமிய சட்ட யாப்பு – இப்போது கசக்கிறதின் மர்மம் என்ன?
இலங்கை அரசு செய்ய வேண்டியது.
ரிசானா நபீக்கின் மரண தண்டனையின் பின்னால் கருத்து வெளியிடும் அரச அமைச்சர் அனைவரும் பலவிதமான செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள். ஆனால் இவர்களின் யாரும் இனிமேல் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்பக் கூடாது. அதை நிறுத்த வேண்டும் என்று கருத்துச் சொல்வதில்லை. எதை முதலில் செய்ய வேண்டுமோ அதை விடுத்து தேவையற்ற வாதப் பிரதிவாதங்களைத் தான் உருவாக்கி வருகின்றார்கள்.
அது போல் வருமையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பிரேமதாசவின் கிராம அபிவிருத்தி,  சந்திரிக்காவின் சமூர்த்தி, மஹிந்த ராஜபக்ஷவினால் வருமை ஒழிப்பிற்காக கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் திவி நெகும போன்றவற்றை வெளிப்படைத் தன்மையை பேணி அரசு நடை முறைப்படுத்தும் பட்சத்தில் வருமையை இல்லாதொழிக்கும் ஒரு முயற்சியாக இது அமையும் இல்லாத பட்சத்தில் இன்னும் பல ரிசானாக்கல் இலங்கையில் நாளும் நாளும் உருவாக்கப்படுவார்கள் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சவுதி அரசின் தவறான நிலை.
இஸ்லாமிய குற்றவியலை நடை முறைப்படுத்துவதற்கு சவுதி அரசு காட்டிய ஆர்வத்தை நாம் மதிக்கும் அதே வேலை இஸ்லாமிய குற்றவியலை நடை முறைப்படுத்துவதற்கு சவுதி காட்டும் அதே அக்கரையை பெண்களை வெளிநாட்டு வேலை வாய்புக்கு எடுக்கும் விஷயத்திலும் நடை முறைப்படுத்த வேண்டும்.
உம்ரா செய்வதாக இருந்தால் கூட ஒரு பெண்மனி தனியாக சவுதிக்கு வரக் கூடாது என்று சட்டம் இயற்றியுள்ள சவுதி அரசு (இஸ்லாம் பெண்கள் தனியாக உம்ராவுக்கு செல்லக் கூடாது என்று தடை விதிக்கவில்லை) வேலை வாய்ப்புக்கு பெண்களை சேர்த்துக் கொள்ளும் விஷயத்தில் மாத்திரம் மார்க்க வரம்மை மீறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
மார்க்க விஷயத்தை அனைத்துத் துரைகளிலும் சரியான முறையில் சவுதி அரேபிய அரசு நடை முறைப்படுத்த வேண்டும்.
நமது கடமை என்ன?
பெண்களை ஆண்கள் நிர்வகிக்க வேண்டும்.
பெண்களை நிர்வாகம் செய்யக் கூடிய கடமையும், கடப்பாடும் ஆண்களுக்குத் தான் இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகள், வாழ்கைச் செலவினங்கள் என அனைத்து விஷயத்திலும் பெண்களை ஆண்கள் தான் நிரவகிக்க வேண்டும். மாறாக பெண்கள் ஆண்களுக்கு உழைத்துக் கொடுத்து பெண்களின் உழைப்பில் ராஜ வாழ்க்கை வாழும் ஆண் வர்க்கத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
சீதனக்கொடுமை இல்லாமலாக்கப்பட வேண்டும்.
ரிசானா நபீக் போன்ற பல ரிசானாக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்பைத் தேடிச் செல்வதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று தான் சீதனக் கொடுமையாகும். மஹர் கொடுத்து திருமணம் புரிய வேண்டிய ஆண்கள் வெட்கம் இழந்து, கௌரவத்தை இழந்து, பெண்களிடம் சீதனம் என்ற பெயரில் பணத்தையும், பொருளையும் கை நீட்டி வாங்கும் வக்கற்ற காரியத்தில் ஈடுபடுவதினால் தான் இன்று இலங்கை போன்ற நாடுகளில் பல ரிசானாக்கள் உருவாகியிருக்கின்றார்கள்.
ஆண்கள் இனிமேலாவது இந்த கேவலமாக, அசிங்கமான செயல்பாட்டில் ஈடுபடாமல் இஸ்லாம் காட்டிய வழியில் மஹர் கொடுத்து மணமுடிப்பார்களா? மீதமுள்ள ரிசானாக்களுக்காவது விடிவு கிட்டுமா?
தனவந்தர்கள் ஸகாத், தர்மங்களை சரியாக வழங்க வேண்டும்.
செல்வந்தர்கள் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சொத்து, செல்வங்களில் இருந்து சரியான முறையில் ஸக்காத், தான தர்மங்களை வழங்க வேண்டும். அப்படி வழங்காத பட்சத்தில் ரிசானா போன்றவர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கும் இது போன்ற தனவந்தர்களும் பொறுப்பாளியாவர் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கை நாட்டில் இருந்து எத்தனையோ பெண்கள் வெளிநாட்டை நோக்கி படையெடுத்த வன்னமுள்ளார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால் செல்வந்தர்கள் அல்லாஹ் வழங்கிய சொத்துக்களில் இருந்து ஏழைகளுக்கு வாரி வழங்குங்கள்.
அல்லாஹ் நமது செயல்களை பொருந்திக் கொள்வானாக!
நன்றி - rasminmisc 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger