சீனாவில் பெண்களுக்குத் தட்டுப்பாடு - இஸ்லாம் கூறும் தீர்ப்பு

சீனாவில் பெண்களுக்குத் தட்டுப்பாடுஅல்லாஹுவின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

கீழ்க்கண்ட இந்த செய்தியை ஒரு இணையதளம் மூலம் படித்தேன்,இது போன்ற நவீன கால பிரட்சினைகளுக்கு 1434 ஆண்டுகளுக்கு முன்னரே சத்திய மார்க்கமாம் இஸ்லாம் அழகிய வழிகளில் முற்றுப்புள்ளி வைத்து விட்டது,இதைப்பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்தால் இது வல்லோன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதை நூரு சதவிதம் நிச்சயமாக நம்பமுடியும்.....இனி இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரைகளுக்குள் செல்வோம்,இதைப்பற்றி இஸ்லாம் கூரும் தீர்ப்பையும் தெரிந்து கொள்வோம் .

மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் பெண்கள் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பதன் பேரில் கடந்த 1980ம் ஆண்டு முதல் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை திட்டம் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டுவர நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து போனது தெரியவந்துள்ளது.
பெண் குழந்தைகள் தட்டுப்பாட்டுக்கு ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை' திட்டமே காரணம் என கூறப்படுகிறது. சென்ற 2012 ஆம் ஆண்டு சீனாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், 117 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெறவேண்டும் என்ற கட்டாய சட்டம் இருப்பதால் ஆண் குழந்தை பெறவே விரும்புகின்றனர். தம்பதியர்  கருவில் பெண் குழந்தை இருந்தால் அதனைக் கருகலைப்பு செய்துவிடுவது சீனாவில் வாடிக்கையாகிவிட்டுள்ளது. பெண்களின் விகிதம் குறைந்து வருவதால் நிலைமையைச் சீரமைக்க சீன அரசு முயன்று வருகிறது.

இஸ்லாம் கூரும் தீர்ப்பு - 

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

இன்றைய நவீன உலகத்தில் பல பிரச்சினைகளை நாம் முன்னோக்கிக் கொண்டிருக்கிறோம்.அதிலும் குடும்ப வாழ்கை தொடர்;பாக பல பிரச்சினைகளை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த குடும்பப் பிரச்சினைகளில் மிக முக்கியமானதுதான் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை.
தமக்கு குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியினர் குழந்தையை பெற்றெடுக்காமல் இருப்பதற்காக மருத்துவத்தின் மூலம் குடும்பக்கட்டுப்பாட்டை செய்து கொள்கின்றனர்.
சீனா போன்ற நாடுகள் இரண்டு குழந்தைகளை ஒரு தம்பதியினர் பெற்றெடுத்தால் அதன் பின் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என சட்டமே உருவாக்கியுள்ளது.
இந்தியா போன்ற நாடுகள் இதனை மறைமுகமாக பிரச்சாரம் செய்கிறது.
பயணிகள் பஸ்களில் ஆட்டோக்களில் அரச அலுவலகங்களில் என்று பெரும்பாலான இடங்களில்  நாம் இருவர் நமக்கொருவர் போன்ற வாசகங்கள் விளம்பரப் படுத்தப் பட்டுள்ளது இதனை தெளிவாக விபரிக்கிறது.
எதிர்கால சந்ததியினரை இல்லாமல் செய்யும் முயற்சியாகத்தான் இந்த மருத்துவ சத்திர சிகிச்சை மூலம் செய்யப் படும் குடும்பக்கட்டுப்பாடு அமைந்துள்ளது.
குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் பெரும்பாலும் பெண்ணின் கருப்பையை (குழந்தை உருவாகும் பகுதி)அகற்றிவிடுகிறார்கள்.
கருப்பை அகற்றப் பட்டால் பிற்;காலத்தில் அந்தப் பெண் எவ்வளவு ஆசைப்பட்டாலும் மீண்டும் குழந்தையை சுமக்க முடியாது.
கணவனிடம் குடும்ப சுகத்தை அனுபவிக்க முடியும் அதன் மூலம் எந்த பிரயோஜனத்தையும் எதிர்பார்க்க முடியாது.
இந்தப் பிரச்சினைக்கு இஸ்லாம் மிக அழகியதொரு தீர்வை சொல்லித் தருகிறது.
இஸ்லாம் காட்டித் தரும் முறையின் மூலம் குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்கள் விரும்பினால் குழந்தை பெறவும் முடியும் பெறாமல் இருக்கவும் முடியும்.
இஸ்லாமிய சட்டத்தில் சந்ததி நிருத்தம் என்பது கிடையாது.
கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளது.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் அஸ்ல்‘ (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),நூல் : புகாரி (5209)
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்… அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) , நூல் : முஸ்லிம் (2606)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),நூல் : முஸ்லிம் (2610)
மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.
நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி (2542)
தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிடையாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும். தற்காலிக கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குடும்பகட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது.
குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள்.

கூடுதல் தகவல் - நன்றி - rasminmisc 


Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger