புனே வரை நீண்ட வாதம்...2


“ஆதாம் தவறு செய்ததால் அவர் பாவி என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், ஆதாமுக்கு பிறந்த ஒரே காரணத்தினால் அவர்களது சந்ததிகளும் பாவிகள் என எவ்வாறு ஏற்றுக்கொள்வது? உதாரணத்திற்கு ஆதாமில் இருந்து 1001 ஆம் தலைமுறையாக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள். தங்களது இந்த 6 மாத குழந்தையை 100 கொலை, 200 கொள்ளை, 300 திருட்டு, 400 வழிப்பறிகளை ஏன் செய்தாய் என நான் விசாரிக்கலாமா? அல்லது இத்தனை பாவமும் இக்குழந்தையின்மேல் உள்ளது என்று சொன்னால் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என வினவினோம். 
அதற்கு அவர் “அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்குத்தான் விபரமே தெரியாதே. அவர்களை எப்படி விசாரிப்பது?” என்றார். அப்போது நாங்கள் “மனிதர்களாகிய நாமே இப்படி நினைக்கும்போது, அனைத்தையும் அறிந்த ஆண்டவர் நாம் செய்யாத ஒரு தவறுக்காக நம்மை எப்படி தண்டிப்பார்?” என வினவினோம்.  
அதற்கு அவர்கள் “ நீங்கள் சொல்வது சரிதான். அதனால்தான் அன்பே உருவான ஆண்டவர், மனிதர்கள் அனைவரையும் இந்த பாவத்தில் இருந்து விடுவிக்க, தனது ஒரே குமாரனை இப்புவியில் பிறக்கச்செய்து, அவரை பலிகொடுத்து பாவங்களுக்கு பிராய்ச்சித்தம் செய்தார். அதனால், அந்த பாவம் மன்னிக்கப்பெற்று மனிதர்கள் அனைவரும் நிவாரணம் அடைந்தனர்” என்றார். 
பிறகு நாங்கள் வரிசையாக எங்களது கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தோம்.
  1. ஆதாம் செய்த தவறுக்கு ஆதாமை பலிகொடுத்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். அதை விடுத்து ஆண்டவரின் மகனை பலிகொடுக்க காரணம் என்ன?
  2. எந்தஒரு மனிதனும் பாவங்களில் இருந்து விடுபட வேண்டுமென்றால் பலிஆகத்தான் வேண்டுமா?
  3. ஆதாம் செய்த ஒரே தவறானது தடுக்கப்பட்ட ஒரு மரத்தின் பழத்தை புசித்ததுதான். கொலை, கொள்ளை, விபச்சாரம், கற்பழிப்பு போன்ற பாவங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால், தடுக்கப்பட்ட பழத்தை உண்ணுதல் என்பது ஒரு சிறு பாவம்தான். அந்த சிறு பாவத்திற்கே ஆண்டவரின் மகனை பலிகொடுத்தால்தான் விமோச்சனம் கிடைக்கும் என்றால், கொலை, கற்பழிப்பு போன்ற பெரும்பாவங்களுக்கு யாரை பலிகொடுப்பது?
  4. ஏசுவை பலிகொடுத்ததால் ஆதாமிலிருந்து ஏசுவரை உள்ள மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக வைத்துக்கொண்டாலும், அதற்குப்பிறகு 2010 ஆண்டுகளாக உலகில் நடந்துவரும் பாவங்களுக்கு விமோச்சனம் என்ன?
  5. ஒருவேலை, அனைத்து மக்களுக்காகவும், அனைத்து பாவங்களுக்காவும்தான் ஏசு பலிகொடுக்கப்பட்டார் என்று வைத்துக்கொண்டால், நாம் அனைவரும் நேரடியாக சுவர்க்கம் சென்றுவிடுவோமா?
  6. ஒருவேலை என்னுடைய அனைத்து பாவங்களுக்கும் முன்னதாகவே எனக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டதென்றால், நான் எத்தனை கொலைகள் செய்தாலும் எவ்வளவு கொள்ளையடித்தாலும் அதற்காக ஆண்டவர் என்னை கேள்வி கேட்கமாட்டாரா?

என அடுக்கடுக்காக கேள்விகளை வைத்துக்கொண்டே இருந்தோம். அவர்களும் தங்களால் முடிந்தவரை பதில்களை கூறினார்கள். ஆனாலும் அந்த பதில்களில் அவர்களே திருப்தி அடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அவர்கள் நால்வருமே தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டு பதில்களை கூறினார்கள். ஆனால் இந்த அனைத்து கேள்விகளுக்கும் அவர்களால் பதில் கூற இயலவில்லை. 
பிறகு இந்த தலைப்பை ஓரமாக வைத்துவிட்டு ஏசு இறைவனின் மகனா என்ற தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தோம். ”பைபிளில் ஆதாம், மோசே, ஆபிரஹாம், இஸ்மவேல், நோவா, தாவீது, சாலமோன் போன்ற பலரை கர்த்தரின் மகன் என குறிப்பிட்டிருந்தும்கூட, ஏசுவை மட்டும் கர்த்தரின் மகன் என்று கூறக் காரணம் என்ன?” என்ற கேள்வியை முதலாவது கேள்வியாக முன்வைத்தோம்.  
அதற்கு அவர்கள்,“மற்றவர்கள் அனைவரும் தாம்பத்தியம் என்னும் பாவத்தின் மூலமாக பிறந்தார்கள். ஆனால் ஏசு ஒருவரே ஆண் பெண் உறவு என்ற பாவமில்லாமல் கன்னி மரியாளுக்குப் பிறந்தவர். அதனால்தான் அவரை கர்த்தரின் மகன் என்று கூறுகிறோம்” என்று கூறினார்கள்.
அப்போது நாங்கள் “ஆணும் பெண்ணும் திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதை பாவம் என்று கர்த்தருக்கு பிடிக்காத காரியமாக கிறிஸ்தவர்களாகிய நீங்கள் கருதினால், பிறகு அந்த பாவமான காரியத்தை செய்வதற்கு உங்கள் ஆலயங்களிலேயே திருமணத்தை நடத்தி வைப்பது ஏன்? அதையும் மதகுருக்களான தங்களைப்போன்றவர்களே முன் நின்று செய்துவைப்பது ஏன்? அனைவரையுன் திருமணமே செய்யாமல் பிரம்மச்சாரிகளாகவே வாழவேண்டுன் என ஆணையிட்டுவிடலாமே?” என கேள்வி எழுப்பினோம். 
அதற்கு அவர் “திருமணம் முடிக்காமல் அனைவரும் பிரம்மாச்சாரிகளாகவே இருந்துவிட்டால் பிறகு மனித இனமே அழிந்துவிடுமே! நம் தலைமுறையோடு உலகத்தில் மனிதர்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமே! பிறகு அதனை எவ்வாறு சட்டமாக்குவது? இது நடைமுறைக்கு பொருந்தாத ஒன்றல்லவா?” என்றார். 
அதற்கு நாங்கள் “மனித சமுதாயத்தை நிலைநிறுத்தக்கூடிய, சந்ததிகளை பெருகச்செய்யக்கூடிய ஒரு புனிதமான பந்தத்தையும் உறவையும் தாங்கள் பாவமென சித்தரிக்க காரணம் என்ன?” என வினவினோம். அதற்கு மௌனத்தை தவிர வேறு எதையும் அவர்களால் பதிலாக தர இயலவில்லை. 
பிறகு நாங்கள் “திருமணமும் தாம்பத்தியமும் ஒரு புறம் இருக்கட்டும். தகப்பன் இல்லாமல் பிறந்த ஒரே காரணத்தால் ஏசுவை கர்த்தரின் குமாரன் என குறிப்பிடும் நீங்கள், தாயும் இல்லாமல் தகப்பனும் இல்லாமல் பிறந்த ஆதாமை கர்த்தரின் குமாரன் என குறிப்பிடாதது ஏன்? அதைவிட, அனைத்து மக்களும் பெண்களில் இருந்து ஜனித்திருக்க, மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு ஆணின் விலா எலும்பில் இருந்து பிறந்த ஏவாளை கர்த்தரின் மகள் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?” 
“அல்லது தந்தையில்லாமல் தாய் மூலமாக பிறந்த காரணத்தால்தான் ஏசுவை கர்த்தரின் மகன் என கூறுகிறீர்கள் என்றால், தற்போது விஞ்ஞான வளர்ச்சியில் குளோனிங் முறைப்படி தந்தை இல்லாமல் தாய் மூலமாக பிறக்கும் குழந்தைகளை எல்லாம் கர்த்தரின் புதல்வர்கள் என ஏற்றுக்கொள்ள தாங்கள் தயாரா?” என வினவினோம். 
அதற்கு அவர்கள்.....
                                             தொடரும்...
நன்றி - jesusinvites 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger