மைக்ரோ சாஃப்ட் தேர்வில் 9-வயது தமிழக சிறுவன் சாதனை!



மைக்ரோ சாஃப்ட் தேர்வில் 9-வயது தமிழக சிறுவன் சாதனை!கலிபோர்னியா:  அமெரிக்காவின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்திய தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கம்ப்யூட்டர் பட்டதாரிகளுக்கான ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP.NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப தேர்வை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடத்தியது.
இதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யான் என்ற சிறுவனுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. இந்தத் தேர்வில் பிரணவ் வெற்றி பெற்று பட்டதாரிகளுக்கு நிகரான சாதனையைப் படைத்துள்ளார்.
பிரணவின் பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger