சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் மாமனிதர் நூல் ஸ்ரீலங்காவில் வெளியீடு!


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (20.12.2012) அன்று ‘யார் இந்த முஹம்மத் (ஸல்) அவர்கள்?’ என்ற தலைப்பில் நபியவர்களின் தூய வாழ்வைப் பற்றிய சுமார் 60 பக்கங்கள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. சகோதரர் பீஜே அவர்கள் தமிழில் எழுதிய மாமனிதர் என்ற நூலை சுருக்கி 60 பக்கங்களில் சிங்களம் ஆங்கிலம் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்.
 ஜமாத்தின் தேசிய தலைவர் ஆர்.எம் ரியாழ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலங்கை அரசின் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான அமைச்சர் ரவுப் ஹக்கீம், இலங்கையின் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தனாயக்க, இலங்கை புதிய சோசலிச கட்சியின் தலைவரும் பிரபல சிங்கள எழுத்தாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன, இலங்கை மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சாத் நிசாம்தீன், நைசர் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அனாஸ், உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மற்றும் இலங்கையின் பிரபல தமிழ் நாளிதலான வீரகேசரியின் செய்தி ஆசிரியர் ஜவ்பர், விடிவெள்ளி வார இதழின் செய்தி ஆசிரியர் பரீல் மற்றும் நீதி அமைச்சகத்தின் ஊடகச் செயலாளர் டாக்டர் ஹபீஸ், நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சகத்தின் ஊடகச் செயலாளர் இம்தியாஸ் உட்பட இலங்கையின் புத்தி ஜீவிகள், எழுத்தாளர்கள் சமூக ஆர்வளர்கள் என்று பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ரவுப் ஹக்கீம் புத்தகம் தொடர்பாக பேசியபோது சிங்களம் பேசக் கூடிய பெரும்பான்மை இனத்தவர்கள் வாழும் இலங்கை நாட்டில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சிங்கள மொழியிலான இஸ்லாமியப் பிரச்சாரம் பாராட்டத் தக்கதாகும் என்று குறிப்பிட்டதுடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப் பணிகளையும் சிலாகித்துப் பேசினார். அடுத்ததாகப் பேசிய புதிய சோசலிசக் கட்சியின் தலைவரும் பிரபல சிங்கள எழுத்தாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன அவர்கள் இஸ்லாம் வட்டியை எதிர்க்கும் ஒரு மார்க்கமாகும். இஸ்லாத்தில் வட்டிக்கு சிறிதளவும் அனுமதியில்லை. இலங்கை அரசு வட்டியுடன் கூடிய பொருளாதார முறையைக் கொண்டிருப்பதே அதன் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகும்.
 எனவே இஸ்லாத்தின் கருத்துக்கள்தான் மக்களை நேர்வழிப்படுத்தும். இஸ்லாத்தின் பொருளாதாரக் கொள்கைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 இந்நிகழ்வில் “நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்வு” என்ற தலைப்பில் சிங்கள மொழியில் ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் அவர்களும் தமிழ் மொழியில் ஜமாத்தின் துணைத் தலைவர் பர்சான் அவர்களும் உரையாற்றினார்.
குறிப்பு : இந்தியா மதச்சார்பற்ற நாடாக உள்ளது. இலங்கை மதச்சார்புள்ள நாடாக உள்ளதால் அந்த நாட்டின் சூழ்நிலையை அனுசரித்து நமது நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகளை அழைக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனவே இதை இந்தியாவில் உள்ளவர்கள் முன்மாதிரியாகக் கொண்டு அரசியல்வாதிகளை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்

நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger