மும்பை: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேரை என்கவுண்டர் முறையில் படுகொலை செய்ததை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரானகுஜராத் IPS அதிகாரி G L சிங்கால், "இச்செயலுக்காக இறைவனே என்னை தண்டித்து விட்டான்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவியதாக கூறி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் என்கவுண்டர் மூலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது திட்டமிட்ட சதி என்றும் இது போலி என்கவுண்டர் என்றும் நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த போலி என்கவுண்டர் படுகொலையை முன்னின்று நடத்தியவர்களில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் குஜராத் IPS அதிகாரி G L சிங்கால். ஜாமீனில் வெளி வந்துள்ள இவர் அப்ரூவராக மாறியுள்ளார். மேலும் கொலையை மூடி மறைப்பதற்காக 2011 நவம்பரில் குஜராத் அமைச்சர்கள் அரசு அதிகாரிகளான குஜராத் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா ,கல்வி அமைச்சர் புபேந்தர் சுடாசமா ,மற்றும் பிரபுல் படேல் , IAS அதிகாரி முர்மு ,அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதி ஆகியோரது பேச்சினை ரகசியமான முறையில் பதிவு செய்த ஒரு ஒலிப்பேழையை தானாகவே முன்வந்து CBI அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் .
மேலும் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ள சிங்கால், "இந்தப் படுகொலைக்கு இறைவனே எனக்கு தண்டனை கொடுத்துவிட்டான். இரு மாதங்களுக்கு முன்பு என்னுடைய 17 வயதுடைய ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னரே இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையை கூற முன் வந்தேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் குஜராத் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முதல்வர் மோடி உள்ளிட்டோருக்கு இந்தப் படுகொலையில் தொடர்பிருப்பதாகவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Post a Comment