ஜித்தா: சவூதி அரசின் 'நிதாகத்' எனும் புதிய தொழிலாளர் கொள்கையை கால நீட்டிப்பு செய்து சவூதி மன்னர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
சவூதி அரேபிய சட்டத்திற்கு புறம்பாக வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடியுரிமையை சரி செய்துக்கொள்ள மூன்று மாத கெடு நாளையோடு (ஜூலை 3) முடிவடைவதாக அறிவித்திருந்தது. அதன்பிறகு சிறைவாசம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்து வந்தது.
இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சவூதி சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று இதற்கான கெடு முஹர்ரம் 1, 1435 (நவம்பர் 4, 2013) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மன்னர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.
பல்வேறு நாட்டு தூதரகங்கள் அந்தந்த நாடினருக்கான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு சட்ட சிக்கல்களை முடித்துக்கொடுப்பது போன்ற உதவிகளை இரவு பகலாக செய்துவந்தன. இருப்பினும் ஐம்பது விழுக்காடுகூட முடிவடையாத நிலையில், இதற்கான கால அவகாசம் போதவில்லை என்று தூதரகங்கள்,பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சவூதி அரசாங்க அலுவலகங்களும் கூறிவந்தது குறிப்பிடத் தக்கது.
Post a Comment