Cairo,Egypt)
எகிப்தின் இக்வானிய ஆட்சி கவிழ்ப்பில் இஸ்லாமிய கட்சியான ஹிஸ்புன்நூர் கட்சியும் பங்காளி என சில தரப்பு விமர்சித்துவருகின்றனர்.அதன் உண்மை தன்மை என்ன என்பதை காண முன் அக்கட்சி ஆற்றிய மிகப்பெரிய சாதனை என்ன என்பதை இங்கு நாம் காண்போம்.
ஹிஸ்புன்நூர் கட்சியானது சென்ற பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்ற ஒரே இஸ்லாமிய கட்சி என்ற பெருமையை பெற்ற கட்சியாகும்.அரசியலில் குதித்து சில மாதங்களிலேயே நூற்றுக்கும் அதிகமான ஆசனங்களை பாராளுமன்ற தேர்தலில் பெற்றுகொண்டது.
ஆசனங்கள் அடிப்படையில் இரண்டாவது பெரும் கட்சியாகவும் வாக்குகள் அடிப்படையில் அதிகூடிய மக்கள் செல்வாக்கை பெற்ற ஒரே கட்சி ஹிஸ்புன்நூர் ஆகும்.
நாட்டின் ஸ்தீரதன்மையை கருத்தில் கொண்டு அவசரமான ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும் என்பதை கடந்த ஆறுமாதமாக சாத்வீக முறையிலும் ஆலோசனை முறையிலும் இக்வானிய அரசுக்கு முன்வைத்து வரும் கட்சியில் ஹிஸ்புன்நூர் மிக முக்கிய கட்சியாகும்.
அரச எதிர்ப்பு போராட்டகாரர்களும் இதே கோரிக்கையை வைத்த போதும் அவர்கள் நிலைப்பாடு வேறு ஹிஸ்புன்நூர் கட்சியின் நிலைப்பாடு வேறு என்பதை ஹிஸ்புன்நூர் அரசியல் நகர்வுகளை அவதானிக்கின்றவர்களுக்கு புரியும்.
இக்வானிய அரசில் தமது உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல் பல கசப்பான சம்பவங்களை அனுபவித்த போதும் இக்கட்சி இக்வானிய அரசுக்கு ஆதரவுக்குரலாக பல கட்டங்களில் நின்ருவந்தமை இக்கட்சி நடுநிலைமையை கருத்தில் கொள்ளும் கட்சி என்ற உண்மையை உணர்த்தி வந்தது.இக்கட்சிக்கு வெளியில் உள்ள பல அரசியல் ஆய்வாளர்கள் கூட இக்கட்சியின் அரசியல் முதிர்ச்சியை புகழ்ந்தே வந்தனர்.
எகிப்தின் மிகப்பெரும் இஸ்லாமிய கட்சியான ஹிஸ்புன்நூரின் நடுநிலை சாணக்கிய போக்கினால் தற்போதைய அரசின் போக்கில் ஏற்பட இருந்த தீமைகள் சில குறைக்கபட்டன. முர்சிக்கு எதிரான புரட்சியின் தலைவர்களில் ஒருவரான அல் பாராதயி என்வரை ஜனாதிபதியாக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. ஏலவே முன்னாள் ஜனாதிபதி முர்சி அரசில் வரையப்பட்ட யாப்பை நிரந்தரமாக ரத்து செய்யும் நடவடிக்கை தடுக்கப்பட்டது.
எகிப்தின் இக்வானிய ஆட்சியை வீழ்த்துவதில் காரணமாக அமைந்த தரப்பு யார் என்ற கேள்வி பரவலாக எழுகின்ற ஒன்றே.
ராணுவம் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்ததாக சிலர் பேசிவருகின்றனர்.இராணுவ புரட்சி என்றால் என்ன? இராணுவ புரட்சியின் ஆட்சி எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களே இதை இராணுவ புரட்சி என்று சொல்வர்.
ராணுவம் சிவில் அரசிடமே நாட்டின் தலைமையை ஒப்படைத்துள்ளது.தற்போது எகிப்தை ஆளுபவர் சிவில் ஜனாதிபதியே தவிர ராணுவம் அல்ல.ராணுவம் இவ்வரசில் எந்த ஒரு பங்காளியாகவும் இருக்கமாட்டாது என்றும் தாம் நாட்டின் பாதுகாப்பு பொறுப்பிலேயே இருப்போம் என்றும் அறிவித்துள்ளது.
வன்முறைகளை தூண்டும்விதமாக மக்களை உசுப்பேற்றி குழப்பங்களை விளைவிக்காமல் அமைதிவழியில் அரசியல் நகர்வுகளை வைக்கும் பட்சத்தில் தீர்வுகள் குழப்பம் இல்லாமல் கிட்டும்.
ராணுவம் புரட்சி செய்தால் அங்கு சிவில் அதிகாரம் இருக்காது.ராணுவ ஆட்சியில் இராணுவமே நாட்டின் நிர்வாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எடுக்கும்.இந்த இரண்டு நிலையும் அல்லாத சிவில் அரசிடம் ஆட்சியை ராணுவம் கொடுத்த பின்பும் இராணுவ ஆட்சி என்று சொல்வது பிழையாகும்.
இக்வானிய ஜனாதிபதி அவர்கள் ஆட்சியில் இருந்தவாறே பல தீர்வுகளை கொண்டுவந்திருக்க வேண்டும்.அதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் திட்டங்களையும் ஹிஸ்புன்நூர் கட்சியும் இன்னும் சில கட்சிகளும் வைத்தன.ஆனால் இவற்றை இக்வானிய அரசு பதவி போதையில் அலட்சியம் செய்தது.எதிரியை எப்படி அணுகுவது ஆட்சியை எப்படி தக்கவைப்பது என்ற ஆளுமை அற்ற இக்வான்கள் தமது தவறுகளை மறைக்க அடுத்தவர்களை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.
நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு எதிரியின் பலத்தை கருத்தில்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியே இன்னுமொரு தேர்தலை அறிவிப்பது தவறா?அவ்வாறு அறிவிக்க கூடாது என்பது அல் குர்ஆன் ஆயத் கூறும் ஹராமான விடயமா
எகிப்திய பாதுகாப்பு தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் ,
ஏற்கனவே பாதுகாப்பு படை அறிவித்த ஒரு வார கால அவகாசம் எந்த முன்னேற்றமும் இன்றி முடிவடைந்த நிலையில் மீண்டும் இரண்டு நாட்கள் சந்தர்பம் வழங்குவதாகவும் இதை பயன் படுத்தி சம்மந்தபட்ட இரு தரப்பினரும் (அரசாங்கமும் ,போராட்டகாரர்களும் ) ஒரு முடிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, நாட்டின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சந்தர்பம் பயன் படுத்தப்படாதபோது அடுத்து வரும் நாட்களுக்கான அரசியல் வரைபை இராணுவ தலமையகம் வெளியிடும். அதை நடை முறை படுத்துவதற்கு தேவையான அணைத்து நடவடைகைகளையும் இராணுவம் மேற்கொள்ளும் .
மேலும் இந்த நடவடிக்கையில் எந்தொரு தரப்புக்கும் சார்பில்லாமலும் ,இந்த போராட்டத்தில் கலந்துள்ள இளைஞர்களை உள்ளடக்கியதாகவும் அந்த தீர்வு அமையும் என்றும் தனது அறிக்கையில் ராணுவம் அறிவித்திருந்தது.
இந்த அறிக்கை அரசியல் ஆய்வாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும் இருந்தது.
நாட்டின் ஜனாதிபதியே பாத்துகாப்பு படையின் தலைவராக இருக்கும் நிலையியல் ஜனாதிபதி முர்சி உள்வாங்கபடாமல் பாதுகாப்பு அமைச்சின் அவை இந்த அறிக்கையை வெளியிட்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையை ஏலவே அறிந்த ஹிஸ்புன்நூர் ஜனாதிபதி முர்சி அவர்களிடம் பலமாத காலமாக அவசரகால ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியது.ஆனால் இக்வானிய அரசு இதை அலட்சியம் செய்தே வந்தது.ஹிஸ்புன்நூர் கட்சியின் இந்த கோரிக்கை ஆரம்பத்தில் இஸ்லாமிய இயக்கங்களிடம் விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தாலும் இறுதிக்கட்டத்தில் சில இஸ்லாமிய கட்சிகள் கூட ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தினர்.
இதில் இக்வானிய முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கலாநிதி ஜமால் ஹிஷ்மத் அவசரமான ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.ஆனாலும் இக்வானிய உயர்பீடம் இந்த கோரிக்கையை செவிமெடுக்க தயாராக இருக்கவில்லை.
எதிர்ப்பு ஆர்பாட்டகார்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி முர்சி அவர்கள் சில நடுநிலை முடிவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கபட்ட விடயங்கள் கூட நடக்கவில்லை.
ஜனாதிபதி முர்சி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முடியுமா?இல்லையா?என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை முர்சி அறிவிப்பதாக தன்னிடம் கூறினார் என்று எகிப்தின் அரசியல் ஆய்வாளர் பஹ்மி ஹுவைதி என்பவர் கூட கூறி இருந்தார்.அதுகூட நடக்கவில்லை என்பது அரசியல் ஆய்வாளர்களிடம் ஆச்சர்யகுறியை ஏற்படுத்தி நின்றது.
ஆட்சி கவிழ்ப்புக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்புவரை ஜனாதிபதி முர்சி அவர்கள் ராணுவத்துடனான சந்திப்பில் தான் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை அறிவிக்க போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு தனது கடைசி உரையில் அவர் அதை செய்யவில்லை என்றும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தில் சட்ட திட்டங்களில் விட்டுகொடுப்பு உள்ளது நெகிழ்வுத்தன்மை உள்ளது என்று ஏற்றுகொல்கின்றவர்கள் எதற்காக அரசியலில் உள்ள விட்டுகொடுப்பை ஏற்றுகொள்ளவில்லை.இரண்டு தீமைகளில் குறைந்த தீமையை எடுப்பது பற்றிய இஸ்லாமிய உசூல் கலை இவர்களுக்கு தெரியாதா?
நெகிழ்வுத்தன்மை அல்லாத அகீதா சம்மந்தப்பட்ட விடயங்களில் கூட அனுசரிப்பு செய்பவர்கள்,கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றவர்கள் அரசியலில் விட்டுகொடுப்பு என்று ஒன்று உள்ளதை மறந்துவிட்டார்களா? அகீதா விடயம் அடிப்படை அதில் சமரசம் இல்லை என்று தெரிந்தும் அதில் சமரசம் கொண்டார்கள்.அரசியல் என்பது அஹ்லு சுன்னா அறிஞர்களிடம் கிளை விடையமாகும் அது நெகிழும் தன்மை கொண்டது சமரசம் செய்ய முடியுமானது என்று இருந்தும் அதில் அவர்கள் சாதூரியமாகவோ சாத்வீகமாகவோ யோசிக்காமல் அதிரடி பேச்சுகள் எதிரியின் பலம் அறியாத அலட்சியபோக்குகள் என்று எத்தனையோ தவறுகளுக்கு வழிவகுத்துவிட்டனர்.சில இஸ்லாமிய கட்சிகள் சொன்னதற்கு அமைய அவசர தேர்தல் ஒன்றை முர்சி அறிவித்திருந்தால் தற்போதைய பிரச்சினையில் பல பிரச்சினைகளுக்கு ஆட்சியில் இருந்தவரே தீர்வுகள் சொல்லியிருக்க முடியும்.தேர்தலும் நீதமாக நடத்தபட்டிருக்கும்.
தாலிபான்கள் ஐந்துவருடமாக ஆட்சி செய்து அமெரிக்க சூழ்ச்சியில் வீழ்ச்சி கொண்டதை எள்ளி நகையாடிய இக்வான்கள் தமது ஆட்சியை ஒருவருடம் நகர்த்துவதில்கூட படுதோல்வி அடைந்த பரிதாப நிலையில் உள்ளனர்.
தவறுகள் எவ்வாறாயினும் திருந்துவத்தகான வாய்ப்புகள் பல உள்ளன அதில் இந்த சந்தர்பமே மிகப்பெரிய அனுபவ பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எது எப்படியோ ஆட்சி மாற்றம் என்பது எகிப்தில் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. இக்வான்கள் விழுந்த பின்பும் தமது தவறுகளை திருத்திகொள்ளாமல் அடுத்தவர்களின் மீது குற்றத்தை சுமத்தி தப்பிக்க எண்ணுவது தங்கள் ஆட்சியின் வாய்ப்பை நழுவ விட்டதுபோல் தவறுகளில் இருந்து திருந்தும் வாய்ப்பையும் நழுவ விட்டதாகவே கருதப்படும்.
இவர்களின் இந்த அனுபவமற்ற அரசியல் நகர்வு எகிப்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி அப்பாவி பொதுமக்களை பலியாடாக்கி ரெத்தம் சிந்தும் புரட்சிக்கு வித்திட்டாமல் பாதுகாக்க அல்லாஹ்வை வேண்டுவோம்.
Post a Comment