பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது‏

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்ணை அண்ணாபல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள  553 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சம் பி.இ., பி.டெக்.இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதுஇந்தாண்டு புதிதாக 11 பொறியியல்கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.)அங்கீகாரம் அளித்துள்ளதால் கூடுதலாக 3,300 இடங்கள் நிரப்பப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளனர்கணிதம்இயற்பியல்வேதியியல் ஆகிய பாடங்களின்மதிப்பெண் அடிப்படையில் கட் ஆஃப் மார்க் கணக்கிடப்படுகிறது200க்கு எடுத்தகணிதம் மதிப்பெண் 100க்கும் இதேபோல் இயற்பியல் மதிப்பெண் 50க்கும்வேதியியல்மார்க் 50க்கும் மாற்றப்படும்.

அதன் அடிப்படையில் 200க்கு எத்தனை மதிப்பெண் என்பது தெரிய வரும்ஒன்றுக்குமேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மார்க் பெறும்போது யாருக்கு முன்னுரிமைஎன்ற கேள்வி எழுகிறதுஅந்த நேரத்தில் கணித மதிப்பெண்ணும் அதுவும் சமமாகஇருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண்ணும் ஒருவேளை அதுவும் இணையாகஇருக்கும் பட்சத்தில் (அப்போது வேதியியல் மதிப்பெண் சமமாகத்தான் இருக்கும்) பிளஸ் 2 நான்காவது பாடத்தில் உள்ள மதிப்பெண்ணை பார்ப்பார்கள்.

அந்த மதிப்பெண்ணும் சமமாக இருப்பின் பிறந்த தேதியை பார்ப்பார்கள்அதாவது யார்சீனியரோ அவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார்கள்பிறந்த தேதியும்ஒரே தேதியாக இருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும்ரேண்டம் என்பது,விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கீடுசெய்யப்படும் 10 இலக்க எண் ஆகும்.

ரேண்டம் எண் மதிப்பு அதிகமாக உள்ளவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவர்.அந்த வகையில்இந்தாண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு ரேண்டம் எண்                     வெளியிடப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறைஅமைச்சர் பி.பழனியப்பன் ரேண்டம் எண்ணை கணினியில் வெளியிட்டார்.


ரேண்டம் எண்ணை www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்

நன்றி - TNTJSW  
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger