மூக்கில் மூளையுடன் பிறந்த அபூர்வக் குழந்தை

சிட்னி: மேரி குண்ட்ரம் என்ற அந்தப் பெண்ணுக்கு தான் கர்ப்பம் தரித்து சில மாதங்களுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்தையின் குறைபாடு தெரிய வந்தது. இண்டர்நெட்டை தோண்டித் துருவி ஆராய்ந்த போது, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்ததௌ. அதாவது, அத்தகைய குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே இறந்து விடும் என்பது தான் அது. அந்தக் குழந்தைக்கு அப்படி என்ன குறைபாடு எனக் கேட்கிறீகளா.... குழந்தையின் மூளை, தலைக்கு வெளியே மூக்கருகே அமைந்திருந்தது.

கபாலத்திற்கு வெளியே மூளை... 




நீங்கள் படத்தில் பார்க்கும் இக்குழந்தை தான் மூளை வெளியே இருக்கும்படியாக பிறந்தவன். பெற்றோர் அவனுக்கு டோம்னிக் குண்ட்ரம் என பெயரிட்டுள்ளனர்.

கருவிலேயே கண்டறிந்தனர்... 




இவனது இந்த அசாதரண தன்மை இவன் தாயின் வயிற்றில் ஐந்து மாத கருவாக இருந்தபோது தான் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், குறையை சரி செய்ய அப்போது இயலவில்லை.

ஆபத்து அதிகம்... 


மூக்கின் வழியாக வெளி வந்த மூளையுடன் பிறந்த டோம்னிக்கிற்கு உடனடி உயிர் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்றாலும், மூளை கபாலத்திற்கு வெளியே இருந்ததால் விரைவாக நோய்த்தொற்றுதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்தனர் மருத்துவர்கள்.

ஆபரேஷன் செய்யலாம்... 



தற்போது ஏழு மாதம் முடிவடைந்த நிலையில் அவனுக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர் மருத்துவர்கள். பின்னர், அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்தனர்.

ஆபரேஷன் வெற்றி... 




பொஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர்களின் முயற்சியால், ஆபரேஷன் மூலம் இவரது மூளையை மண்டையோட்டுக்குள் உரிய இடத்தில் வைத்து தைத்து சாதனை புரிந்துள்ளனர்.

லக்கி பாய் டோம்னிக்.... 


இதற்கு முன்னதாக இதே போன்று செய்யப்பட்ட ஆபரேஷன் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் பிடித்ததாம். ஆனால், டோம்னிக்கிற்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சுமார் 36 வகையான படிகளின் முறைமையில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் மருத்துவர் மியாரா.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger