வட இந்தியாவில் கடுமையான பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது.
பாலங்களும் சாலைகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை அடுத்து ஐம்பதாயிரம் பேர் வரையிலானோர் சிக்குண்டுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள கேதர்நாத் என்ற புனித நகரமும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன.
இங்குள்ள கோயில்களுக்கு யாத்திரை வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய ராணுவம் முன்னின்று செயல்படுத்துகிறது.மேலும்
ஹெலிகாப்டர் துணையுடன் இராணுவத்தினர் மீட்பு பணிகளைச் செய்துவருகின்றனர்
மிகவும் ஒதுக்குப்புறமான மலைப் பகுதிகளை இன்னும் சென்று சேர முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Post a Comment