பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்!பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடி சிறப்புத் தேர்வுக்கு 'தத்கல்' முறையில் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணாக்கர்கள் சிறப்புத் துணைத்தேர்வுக்கு உரிய தேதிக்குள் விண்ணப்பிக்காமலிருந்தால் "தத்கல்' முறையில் நாளை பகல் 12:00 மணிவரை விண்ணப்பிக்கலாம். என்று கல்வித்துறை அறிவித்துள்ளது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்களாகவோ, தனித்தேர்வர்களாகவோ தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் இப்போது இந்தத் தேர்வை எழுதலாம்.

பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்கள், பதிவு செய்து பயிற்சி வகுப்பிற்கு செல்லாதவர்கள், பயிற்சி வகுப்பிற்குச் சென்று பயிற்சி பெற்று செய்முறைத் தேர்விற்கு வருகை புரியாதவர்கள் என அனைத்து நிலைத் தேர்வர்களும் சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓரிரு பாடங்களில் மட்டும் தேர்வெழுதி, இதர பாடங்களில் தேர்வெழுதாதவர்களும் தேர்வுக்கு அனுமதிக்கப்படாதவர்களும் (அறிவியல் பாடம் உள்பட) சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் பாடத்தில் எழுத்துத் தேர்வு மட்டும் எழுதி, செய்முறை தேர்வை எழுதாதவர்கள், தற்போது அறிவியல் பாடத்தில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலோ அல்லது தோல்வி அடைந்திருந்தாலோ, சிறப்புத் துணைத் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு இரண்டினையும் எழுத வேண்டும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இன்றும், நாளையும் பதிவு செய்யலாம். நாளை நண்பகல் 12 மணிக்குப் பிறகு விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இயலாது.

தேர்வுக் கட்டணம் ரூ.125, கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 என மொத்தம் ரூ.625 செலுத்த வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சலான் மூலமாக மட்டுமே தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஜூன் 12-க்குள் கோர் பேங்கிங் சேவை உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. வங்கி சலான், செய்முறை பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் மார்ச் 2013-இல் தேர்வு எழுதியதன் மதிப்பெண் விவரப் பட்டியல் நகலினை இணைத்து ஜூன் 18, 19 ஆகிய இரண்டு நாள்களில் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தனித்தேர்வர்கள் இவ்விண்ணப்பத்தில், அவர்கள் இறுதியாகப் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் புகைப்படத்தில் சான்றொப்பம் பெறுதல் வேண்டும். விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலுர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது

இந்நேரம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger