பெங்களூர்: பெங்களூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடுகையில் கவனமாக இருப்பது நல்லது.
பெங்களூரில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். பெட்ரோல் பங்கில் எப்படி நீங்கள் உங்களுக்கு தெரியாமலேயே ஏமாறுகிறீர்கள் என்பதை பார்ப்போம்.
அவிஷேக் ஷர்மா என்பவர் பெங்களூர் ஜே.பி. நகர் பகுதியில் உள்ள பங்க் ஒன்றுக்கு சென்று தனது காருக்கு ரூ.1,000க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார். மீட்டர் ரூ.700ஐ தொட்டபோது பங்க் ஊழியர் ஒருவர் அவரிடம் வந்து கிரெடிட் கார்ட் பில்லில் கையெழுத்து கேட்டுள்ளார். அவர் கையெழுத்து போட்டுவிட்டு திரும்புவதற்குள் மீட்டர் ரூ.1,000த்தை தொட்டுவிட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த சர்மா மீட்டர் பில்லை சண்டை போட்டு வாங்கிப் பார்த்தால் அதில் ரூ.731க்கு மட்டுமே பெட்ரோல் போடப்பட்டது இருந்தது தெரிய வந்தது.
இதே போன்று விவேக் சிங்கால் என்பவர் குடும்பத்துடன் சினிமாவுக்கு காரில் கிளம்பினார். வழியில் திலக் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ.1000க்கு பெட்ரோல் போட்டுள்ளார். மீட்டர் ரூ. 760 வந்ததும் பங்க் ஊழியர் ஒருவர் அவரது கவனத்தை திசை திருப்ப பெட்ரோல் பற்றிய சலுகைகள் குறித்து பேசியுள்ளார். அந்த சந்து கேப்பில் மீட்டர் ரூ.1,000த்தை தொட்டது.
அவர் மட்டுமல்ல தீபக் சிங் என்பவர் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டு பலமுறை இப்படி ஏமாந்துள்ளார். தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் தனது பைக் தான் மைலேஜ் தருவதில்லை என்று இத்தனை நாட்களாக நினைத்துள்ளார்.
பெங்களூர்வாசிகளே, பெட்ரோல் பங்க் சென்றால் உஷாராக இருங்கள்.
அவிஷேக் சர்மா பிரச்சனை செய்து பில்லை வாங்கிப் பார்த்து உண்மையைக் கண்டுபிடித்துவிட்டார். அதனால் பங்க் மேனேஜர் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரியாமலேயே எத்தனையோ பேர் உள்ளனர்.
இந்நேரம்

Post a Comment