மாஸ்கோ: அமெரிக்காவால் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டு தேடப்பட்டு வருகிற ஸ்னோடென் திடீரென ரஷிய தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து திடீரென மாயமானார். மேலும் அவர் அடுத்த 3 நாட்களுக்கு ரஷியாவை விட்டு வெளியேறுவதற்காக எந்த ஒரு விமானத்திலும் முன்பதிவும் செய்திருக்கவில்லை..
விக்கிலீக்ஸ் அசாஞ்சேவைத் தொடர்ந்து அமெரிக்காவை அலற வைத்திருக்கும் பெயர் ஸ்னோடென்...உலக நாடுகளின் அனைத்து இணைய தள தகவல் பரிமாற்றங்கள், சமூக வலைதள தகவல்கள் அனைத்தையும் அமெரிக்கா பிரிசம் என்ற ஆப்பரேஷன் மூலம் கண்காணித்து வருவதை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். இதன் மூலம் உலகை அதிரவைத்த ஸ்னோடென்னை தேடும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியது அமெரிக்கா.
இந்நிலையில் அவர் சீனாவின் ஹாங்காங்கில் இருந்து மாஸ்கோ வழியாக கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக அவர் மாஸ்கோவில் இறங்கி மாற்று விமானம் மூலம் ஹவானா செல்லத் திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டபடி அவர் மாஸ்கோ சென்றிருந்தார். ஆனால் அமெரிக்காவோ ஸ்னோடென்னை உடனடியாக கைது செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ரஷியாவை வலியுறுத்தியது.
இதை ரஷியா நிராகரித்துவிட்டது. மாஸ்கோ விமான நிலையத்துக்கு மாற்று விமானத்தில் ஏறுவதற்காகத்தான் ஸ்னோடென் வந்திருக்கிறாரே தவிர.. அவர் ரஷியாவில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.. அவருடன் ரஷிய அதிகாரிகள் எந்த ஒரு தொடர்பும் வைத்திருக்கவில்லை.. அவரை நாடு கடத்துவது என்பதும் ரஷியாவின் மீது குற்றம்சாட்டுவது என்பது நான்சென்ஸ் என்று ரஷிய அதிபர் புதினும் சாடினார்.
இதனிடையே புதிய திருப்பமாக மாஸ்கோவில் இருந்து ஹவானா செல்லும் விமானத்தில் ஸ்னோடென் இன்று செல்லவில்லை. அவர் மாஸ்கோ விமான நிலையத்திலும் இல்லை. அவர் எங்கே போனார் என்ற தகவலும் தெரியவில்லை. அத்துடன் மேலும் 3 நாட்களுக்கு மாஸ்கோவில் இருந்து ஹவானா புறப்படும் எந்த ஒரு விமானத்திலும் ஸ்னோடென் பெயரில் விமான டிக்கெட் பதிவும் செய்யப்படவும் இல்லை. இதனால் மாஸ்கோவில் மாயமான ஸ்னோடென் எங்கே என்பது மர்மமாக இருந்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment