உரிமம் இல்லாமல் நடத்தப்பட்ட மழலையர் பள்ளிகளைத் தடை செய்தது போல, கூடுதல் கட்டணம் வாங்கும் பள்ளிகளையும் தடை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் கூட்டணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ரா.தாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
உரிய அங்கீகாரமில்லாமல் இயங்கி வந்த 900 பள்ளிகளை தடை செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.
உரிய அங்கீகாரமில்லாமல் இயங்கி வந்த 900 பள்ளிகளை தடை செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.
இந்த நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழகத்தில் பல தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆகவே, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளையும் தடை செய்து அதன் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்
ஆகவே, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளையும் தடை செய்து அதன் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்
Post a Comment