அல் கவானீஜ் எனும் இடத்தில் அமையவுள்ள இந்த “புனித அல்-குர்ஆன் பூங்கா” 13 தோட்டங்கள் உள்ளடக்கியதாக 60 ஹெக்டேர் நிலப்பரப்பை விசாலமாக கொண்டுள்ளது.
புனித அல்-குர்ஆனில் கூறப்பட்ட 50 இன தாவரங்களில் 49 இனங்கள் இங்கு நடப்படவுள்ளது என துபாய் அமீரக நகராட்சி மன்ற இயக்குனர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
புனித அல்-குர்ஆனில் கூறப்பட்ட தாவரங்களில் இங்கு விடுபட உள்ளது ‘சக்கும்’ (zaqqoum) எனும் மரமாகும். புனித அல்-குர்ஆனின் வசனப்படி இந்த மரம் நரகத்தில்தான் காணப்படும்.
அத்தோட்டத்தின் நடுவே, குளிர்சாதன வசதிகள் பொருத்தப்பட்ட குகைப்பாதை ஒன்று அமைக்கப்படும் அதன் இருபுறங்களிலும் குரானின் காட்சிகள் ஒளி, ஒலி விளக்கங்களுடன் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.
இந்தப் பூங்கா வரும் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்.
மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா முறைகளைப் பின்பற்றிய விதத்தில் அமையவிருக்கும் இந்தப் பூங்காவிற்கு ஏராளமான முஸ்லிம் மக்களும் வருவார்கள் என்பது அரசின் எண்ணமாக இருக்கின்றது. ஆயினும், இதனை எதிர்ப்பவர்களும் இருக்கின்றனர்.
Post a Comment