புதுடெல்லி: சர்க்கரை நோய்க்கான பியோக்ளிடசோன் (Pioglitazon)உட்பட மூன்று முக்கிய மருந்துகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும் வலி நிவாரணியான அனால்ஜின், மனச் சோர்விற்கான டீன்சிட்(Deanxit) ஆகிய மூன்று மருந்துகளையும் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நோயாளிகளின் பாதுகாப்பு கருதி அனால்ஜின் ஏற்கனவே தடை செய்யப்பட்டுவிட்டதாகவும், சர்க்கரை நோய்க்கான மருந்து, இருதய நோய்க்கும், சிறுநீரகப்பையில் தோன்றும் புற்று நோய்க்கும் (கான்சர்) நோய்க்கும் வழிவகுக்கும் என்று நம்பப்படுவதால் இம்மருந்துகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..
இது குறித்த உத்தரவு குறிப்பிட்ட மருந்து நிறுவனங்களுக்கு இந்த மாதம் 18ஆம் தேதியே தகவல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப் படுகிறது.
ரூ.700 கோடிக்கு விற்பனை சந்தையுள்ள இதன் விற்பனை நிறுத்தப்பட்டால், பல தயாரிப்பு நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதப்படுகின்றது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியா ஜப்பான் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு, இந்தியாவில் இன்னும் விற்பனையாகிக் கொண்டு இருக்கும் மருந்துகளை முற்றிலும் நீக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளமை குறிபிடத்தக்கது.
Post a Comment