சில காலமாக இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 அளவில் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ஆறு சதவிகிதத்திலிருந்து எட்டு சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. நடப்பு கணக்கில் பற்றாக்குறை அதிகரித்து வருவதையடுத்து மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்தது.
இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து தங்கத்தின் விலை உயரும் நிலை ஏற்பட்டது. அதன்படி, இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு கிராம் 2 ஆயிரத்து 600க்கும், ஒரு சவரன் 20 ஆயிரத்து 800 ஆகவும் விற்பனையானது. இந்த விலையேற்றம் தொடரக்கூடும் என்று நகைவியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நேரம்
Post a Comment