குடி தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.
அந்த காலங்களில் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள். குளங்கள், நீர் தேக்கங்கள் இப்படியாக சுத்தமான குடி நீரை மக்கள் அருந்தி வந்தனர்.
இன்றோ, வீடுகள் தோறும் மினரல் வாட்டர் கேன்கள், பாக்கெட் வாட்டர், பாட்டால் வாட்டர், என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை.
தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ இதை பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி விட்டனர் இந்த கார்பரேட் கொள்ளையர்கள். உலகம் முழுவதும் தண்ணீர் இன்று ஒரு தலை சிறந்த பிசினெஸ்.
1992ல் நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்
உலகின் பல பகுதிகளில் நல்ல தண்ணீர் அதாவது குடி தண்ணீர் பற்றாக்குறை, காணப்படுகிறது. இதற்க்கு காரணம் குடிதண்ணீர் வேகமாக மாசு அடைந்து வருவதே. தொழிற்சாலைக் கழிவுகள், காடுகள் அழிப்பு, சுற்று சூழல் மாசுபடுதல் இவற்றால் நல்ல தண்ணீர் வளங்கள் அழிந்து குடி தண்ணீருக்கு பெரும் தட்டுபாடு நிலவி வருகிறது.
கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது போல் தண்ணீரை சுத்திகரிக்க தேவையில்லை. லைப் வாட்டர், அக்வாஃபினா, பிஸ்லரி, பெய்லி, நெஸ்ட்வேயின் பவர் லைஃப், பார்லே, கேரிகோ போன்ற நிறுவனங்களின் தண்ணீரில் ஆர்கட்னா குளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற நச்சு பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது மினரல் வாட்டர் என்கிற பெயரில் விற்கப்படும் தண்ணீர்கள் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டதும் அல்ல.
மேலும் இந்த தண்ணீரை அருந்துவதன் மூலம் கேன்சர் போன்ற ஆள் கொல்லி நோய்கள் ஏற்ப்படுகின்றன. இதனால் மக்கள் இந்த மினரல் வாட்டரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்க்கு பதிலாக தரம் வாய்ந்த பில்ட்டர்களை வாங்கி நமது கார்பரேசன் வாட்டரை பில்ட்டர் செய்து குடித்தல் அதுவே போதுமானது. அல்லது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு அருந்தலாம். சுருங்க சொன்னால் மண்பானையில் துளசி இலைகளை போட்டு தண்ணீரை தேக்கி அருந்தி வருவது மிகவும் நன்மைபயக்க கூடியது.
சிந்திக்கவும்
Post a Comment