சென்னை: 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி சேவையை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி முதல் நிறுத்துமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.
அவசர செய்திகள் அனுப்ப மக்கள் தந்தி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கம்ப்யூட்டர் மயமான உலகில் இன்டர்நெட், இமெயில், எஸ்.எம்.எஸ்., செல்போன் வந்த பிறகு கடித போக்குவரத்தும், தந்தி சேவையின் பயன்பாடும் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த 1853ம் ஆண்டு இந்தியாவில் தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில் புறாக்களை விட்டு தூது அனுப்பியவர்களுக்கு தந்தி சேவையின் அறிமுகம் வரப்பிரசாதமாய் இருந்தது. ஆனால் தற்போது அந்த சேவைக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
இமெயில், இன்டர்நெட்
இமெயில், இன்டர்நெட், செல்போன் வருகையால் மக்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதும், தகவல் தெரிவிப்பதும் எளிதாகிவிட்டது. அவசரமாக செய்தி அனுப்ப வேண்டும் என்றால் செல்போனை தான் மக்கள் முதலில் எடுக்கின்றனர். இதனால் தந்தி சேவையின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.
லாபம் இல்லை
தந்தி சேவையின் பயன்பாடு குறைந்துவிட்டதால் அதன் மூலம் லாபம் கிடைக்கவில்லை. இதனால் இந்த சேவையை அளித்து வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதை நிறுத்த முடிவு செய்துள்ளது.
160 ஆண்டுகள் சேவைக்கு ஜூலையில் 15ல் மூடுவிழா
160 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி சேவையை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

Post a Comment