டாக்டர், இன்ஜினீயர் படிப்பு மட்டும்தானா மதிப்பு மிக்கது? இந்த இரண்டுக்கும்இணையாக பல துறைகள் இருக்கின்றன. அதற்கு அடித்தளமாக இருக்கிறதுமூன்றாவது க்ரூப் (Group III).
கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய கட்டாயப்பாடங்களையும், வணிக கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ்ஃபார் கம்யூனிகேஷன்ஸ், வரலாறு, பொலிட்டிகல் சயின்ஸ், எதிக்ஸ் அண்ட்இந்தியன் கல்ச்சர் மற்றும் அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்) ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாகவும் கொண்டதே இந்தப் பிரிவு.
''பொதுவாக, கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வம் இல்லாத மாணவர்கள்மூன்றாவது க்ரூப்பைப் பரிசீலிப்பார்கள். ஆனால், கணக்குப்பதிவியல் என்ற பாடம்இருப்பதால், அவர்களில் பலருக்கும் தயக்கம் இருக்கும். வழக்கமான கணிதத்துக்கும்,கணக்குப்பதிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தப் பாடத்தில் கூட்டல்மற்றும் கழித்தல் கணக்குகள் மட்டுமே துணைபுரியும். மற்ற எந்தக் கணக்குகளுக்கும்இதில் தொடர்பு இல்லை.
வியாபார அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுத் துறை அமைப்புகள் எனஅனைத்து இடங்களிலும் வரவு - செலவு ஏடுகள் முறைப்படி பராமரித்து வரவேண்டும். இந்தக் கணக்குகளை முறைப்படி கணக்கேடுகளில் எழுதுவதற்கு சிறப்புத்தேர்ச்சியும், வியாபாரச் சட்டங்கள் சார்ந்த அறிவும் தேவை. அதைத்தான்கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகள் சொல்லித்தருகின்றன.
இந்தப் பிரிவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில்வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பி.காம், எம்.காம் போன்ற பட்டப்படிப்பில்பயின்று பட்டம் பெற்று, தொடர்புகொள்ளும் திறனை (Communication Skills)வளர்த்துக்கொள்பவர்களுக்கு, உள்ளூரில் தொடங்கி உலக நாடுகள் வரை உயர்பதவிகள் காத்திருக்கின்றன.
வணிகவியல் பிரிவில் கற்கும் திறமையுள்ள மாணவர்கள், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ். போன்ற பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்று உயர் பதவிகளை வகிக்கமுடியும். இந்தப் படிப்புகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் படிப்புகள்போல் அதிக செலவுகள்ஆகாது என்பது மற்றொரு சிறப்பு. பொருளியலும் முக்கியப் பாடமாக இருப்பதால்,பிற்காலத்தில் போட்டித் தேர்வுகளில் அசத்த முடியும். நிர்வாகம், வணிகவியல்சார்ந்த துறைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்வதால், நீங்கள் ப்ளஸ்-2முடிப்பதற்குள் இன்னும் புதுப்புது உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஏற்படவும்வாய்ப்பு உண்டு.
எனவே, நீங்கள் க்ரூப்-1, க்ரூப்-2 பிரிவுகளில் சேர்வதற்குத் தேவையான அதிகமதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வணிகவியல், கணக்குப்பதிவியல் முதலானபாடங்களில் ஆர்வம் இருந்தால், தாராளமாக இந்தக் க்ரூப்பைத் தேர்வு செய்ய்யலாம்.
TNTJSW
|
Post a Comment