இஸ்லாமாபாத்: கடுமையான பாதுகாப்புடன் நடைபெற்ற பாகிஸ்தானின் பாராளுமன்றத் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே ஆளும் கட்சி பெரும் பின்னைடைவை சந்தித்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் (என்) மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சியும் அதிக இடங்களைப் பெற்று முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அதிக வாக்குகளைப் பெற்று சர்கோடா தொகுதியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பெஷாவர் முதல் தொகுதியில் இம்ரான் கான் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 272 பாராளுமன்ற இடங்களில் 100-க்கு மேற்பட்ட இடங்க்ளை நவாஸ் ஷெரீப்-ன் கட்சி கைபற்றும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை முஸ்லீம் லீக் (என்) கட்சி கைபற்றும் பட்சத்தில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்பாரா என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தானில் எழுந்துள்ளது.
நன்றி - இந்நேரம்
Post a Comment