படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?...

 பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாகஇருக்கும். குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடைகண்டுகொள்ளலாம். அதற்கு முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை காண வேண்டும்.

 எப்படி திறன்களை கண்டுகொள்வது?

 உங்களுக்கு எந்த துறையில் ஈடுபாடு உள்ளது என கண்டு கொள்ளுங்கள். திடீரென்று அந்தத் துறையின் மேல்ஆர்வம் வந்திருக்கிறதா? அல்லது இயற்கையாகவே அந்தத்துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறதாஎன்பதை காணவும்.

 எடுத்துக்காட்டாக சிறு வயதில் இருந்தே அதிக அக்கறையுடன் பணம் மற்றும் நிதி நிர்வாகத்தை சிறப்பாகமேற்கொண்டிருக்கிறீர்கள் எனில், அந்ததுறையின் மீதும் ஈடுபாடும் இருக்கிறது என்றால் நிதித்துறையைதாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.

 பெற்றோர்கள்/ ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கலாமா?

 உங்கள் தனித்திறமையை, அக்கறை கொண்ட ஆசிரியர்கள் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.நீங்கள் கணிதத்தில் திறமையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது அறிவியலில் ஈடுபாடு கொண்டவரா? மொழித்திறமையுடையவரா? என்பதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளலாம்.

 அதே போன்று சிறு வயதில் இருந்து உங்களை கவனித்து வரும் பெற்றோரிடம் உங்கள் தனிப்பட்ட திறமைகள்,கவனம், ஈடுபாடு குறித்து ஆலோசனை செய்வதால், சரியான வழியை கண்டுகொள்வதற்கு வாய்ப்புகள்இருக்கிறது.

எந்த மாதிரியான ஆலோசகர்களை அணுகலாம்?

 பல்வேறு வகைகளில் உங்களை பரீட்சித்து பார்த்து, நீங்கள் அந்த குறிப்பிட்ட துறைக்கு ஏற்றவரா? என்பதைஆராய்ந்து கண்டறிபவர்களாக இருக்க வேண்டும். உங்கள் திறமையை, ஆளுமையை கண்டு கொள்பவர்களாகஇருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் திறமைகள் எந்த துறைக்கானவை என்பதை கண்டுகொண்டுஅந்தத்துறையில் என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெளிவாக சொல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.

அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் எது?

 படிப்புகள் அனைத்துமே அதிகம் வருமானம் தரக்கூடியதுதான். படித்த படிப்பினை எப்படி நம் திறமையின் மூலம்பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. அதனால் இந்தப் படிப்புதான் வருமானம் தரக்கூடியது என கூறமுடியாது.

 ஆர்வத்துடன் படிப்பதற்கு அவசியமானவை என்ன?

 மிகுந்த ஈடுபாடு.
 அர்ப்பணிப்பு உணர்வு.
 படிப்பின் மேல் காதல்.
 புரிந்து கொள்ளும் ஆர்வம்.
 சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை.
நன்றி - tntjsw 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger