அமெரிக்கா: சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் அகலமுள்ள சூறாவளிக்காற்று அமெரிக்காவின் ஓக்லஹாமா பகுதியினைத் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆகியுள்ளது.
ஓக்லஹாமாவின் புறநகர் பகுதிகளான மூர், மெக்ளைன் ஆகியவற்றில் நேற்று மதியம் டொர்னாடோக் சூறாவளி காற்று கோரத்தாண்டவமாடியது. வானுக்கும் பூமிக்கும் இடையே சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்ற இந்தச் சூறாவளி ஒக்லஹாமாவின் புறநகர் பகுதிகளை சின்னாபின்னமாக்கியுள்ளது.
இக்காற்றில் ஒரு பள்ளிக்கூடத்தை முழுமையாக தூக்கி சாப்பிட்ட டொர்னாடோக், கார்கள், வீடுகள், மரங்கள் என எதையும் விட்டு வைக்காமல் சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ளது.
பிளாசா டவர்ஸ் பள்ளி சுத்தமாக தரைமட்டமாகியுள்ளது. பள்ளிக்கூடத்திலிருந்த குழந்தைகள் எவரையுமே காணவில்லை. இதுவரை 95 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 9 டொர்னாடோக்கள் வீசியதாக கூறியுள்ள சூறாவளி கணிப்பு மையம், மேலும் பல மோசமான டொர்னாடோக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளதால் ஒக்லஹாமா பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நேரம்
Post a Comment