சீனாவின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள பாலைவனத்தில் டுங்ஹுவாங் எனும் நகருக்கு அண்மையில் இந்த நீரூற்று உள்ளது. யுயேயாங்குவான் (பிறை ஏரி) என அழைக்கப்படும் இந்த நீரூற்று 2000 வருடகால பழைமையானதாகும்.
அப்பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி மிக அரிதாகவே பெய்யும் நிலையில் இந்த நீரூற்றின் மூலம் தூய்மையான நீர் கிடைத்து வந்தது.
அந்நீரூற்றின் மூலம் உருவான ஏரி 218 மீற்றர் நீளமும் 54 மீற்றர் அகலமும் கொண்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரி பாலைவன மணலினால் முற்றாக மூடப்படும் அபாயம் காணப்பட்டது. 1960களில் 5 மீற்றர் ஆழமானதாக இருந்த இந்த ஏரியில் 1990களில் ஒரு மீற்றர் அளவுக்கே நீர் காணப்பட்டது.
இதனால் ஏரியில் நீரை நிரப்பும் நடவடிக்கைகளை சீன அரசாங்கம் மேற்கொண்டது. இதனால் அந்த ஏரியும் அதைச்சூழவுள்ள நகரமும் புத்துயிர் பெற்றுள்ளன. தற்போது அங்கு பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் சென்றுருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - இலங்கை முஸ்லிம்
Post a Comment