15 வருடங்களாக ரியாத்தில் உள்ள பால்ராஜ் ஊர் திரும்புகிறார்!

 15 வருடங்களாக ரியாத்தில் உள்ள பால்ராஜ் ஊர் திரும்புகிறார்!  'வெல்கம் டூ காரைக்கால்' முகநூல் குழுமம் நடவடிக்கை15 வருடங்களாக ரியாத்தில் உள்ள பால்ராஜ் ஊர் திரும்புகிறார்! 'வெல்கம் டூ காரைக்கால்' முகநூல் குழுமம் நடவடிக்கை!!!


காரைக்கால் : சவுதி அரேபியா, ரியாத்தில் தனது கணவர் பால்ராஜ் சொல்ல முடியாத சித்திரவதைக்கு ஆளாகி கடந்த 15 ஆண்டுகளாக நாடு திரும்பாமல் இருப்பதால், அவரை மீட்டுத்தருமாறு, மாவட்ட கலெக்டரிடம் மனைவி விஜயலட்சுமி சென்ற மே 14-ஆம் தேதி புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து தனது உறவினர் ஒருவர் மூலம் பல்வேறு நாடுகளில் உறுப்பினர்களைக்கொண்ட 'வெல்கம் டூ காரைக்கால்' என்ற முகநூல் குழும நிர்வாகிகளிடம் விஜயலட்சுமி தனது கணவனை மீட்டுத் தரக்கூறி உதவியை நாடினார்.

அதனைத் தொடர்ந்து, சவூதி அரேபியா ரியாத்தில் உள்ள 'வெல்கம் டூ காரைக்கால்முகநூல் குழும செயற்குழு உறுப்பினர் ஜலீல் மூலம் பால்ராஜை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 'வெல்கம் டூ காரைக்கால்முகநூல் குழும செயற்குழு உறுப்பினர் ஜலீல் கூறுகையில்,

"காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் கொம்யூனைச் சேர்ந்த கண்ணாப்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவர், தனக்கும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை மேலபருத்திக்குடியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கடந்த 15/05/1998-ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், திருமணம் ஆகி மூன்று மாதம் ஆன நிலையில், தனது கணவர் சவூதி அரேபியா ரியாத் நகருக்கு சென்றவர் வருடங்கள் 15 ஆகியும், அங்குள்ள பிரச்சனைகளால் ஊர் திரும்பவில்லை, அதனால் அவரை மீட்டு தருமாறு  சென்ற மே 14-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அசோக்குமாரிடம் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்,. 

அதனைத்தொடர்ந்து எங்களது 'வெல்கம் டூ காரைக்கால்' அறிவுறுத்தலின் படி, பால்ராஜைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். சென்ற மே 14-ஆம் தேதி அவரிடம் முதல் முறையாக தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசினேன். அப்பொழுது பால்ராஜ் கூறும்போது,

"சவூதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ள நிதாகத் திட்டத்தினால் அவரது நிறுவனம் 'சிகப்பு' குறியில் தொடர்ந்து இருந்து வருவதால் இகாமா என்னும் குடியிருப்பு அனுமதி அட்டையை புதுபிக்க இயலாததால் ஊர் செல்வதற்கு விசா அடிக்கமுடியவில்லை என்றும், கடந்த 58 நாட்களாக வேலையின்றி இருப்பதாகவும், மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாதம் மத்தியில் எப்படியும் ஊர் சென்றுவிடுவேன்" என்றும் என்னிடம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இதனை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக சென்ற 24-ஆம் தேதி பால்ராஜை, அவர் தங்கியிருக்கும் அத்திகா காய்கறி மார்கெட் அருகில் இருக்கும் அவரது வீட்டிக்கு சென்றேன். அப்பொழுது அவர் எனக்கு தொலைபேசியில் கூறியது உண்மையென அறியமுடிந்தது,பால்ராஜ் கூறுகையில், தனக்கும் ஊர் போக ஆசையாக தான் உள்ளதாகவும், தனது அக்கா மகள் தான் தனது மனைவி என்றும் அவரை எப்படி நான் ஏமாற்றுவேன் என்றும் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

பால்ராஜ் தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் தொடர்பில் இருப்பதாகவும், அவ்வப்போது அவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார். அப்பொழுது பால்ராஜ் தனது குடும்பத்தாருக்கு ஒரு வீடியோ செய்தியை சொல்லி அதனை தனது குடும்பத்தாரிடம் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.  அந்த வீடியோவை எங்களது குழும நிர்வாகிகளுக்கு அனுப்பியிருக்கிறேன்" என்றார்.

'வெல்கம் டூ காரைக்கால்முகநூல் குழும நிர்வாகிகளுள் ஒருவரான முஹம்மது இபுறாஹிம் மற்றும் துணை செயலாளர் விக்னேஷ் ஜோதிலிங்கம் சென்ற 24-ஆம் தேதி திருநள்ளார் கொம்யூனைச் சேர்ந்த கண்ணாப்பூரில் உள்ள பால்ராஜின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மாமனார் ராதாகிருஷ்ணனைச் நேரில் சந்தித்து பால்ராஜ், அவரது மனைவி மற்றும் மாமனாருக்கு அனுப்பி வைத்த வீடியோவை காண்பித்தார், அதில் பால்ராஜ் கூறும்போது, "தன்னை  'வெல்கம் டூ காரைக்கால்முகநூல் குழுமத்தின் ஜலீல் சந்தித்ததாகவும், தற்போது தனது நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகளால் ஊர் வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும், எப்படியும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் ஊர் வந்திவிடுவதாகவும், யாரும் கவலைப்படவேண்டாம்" என்றும் கூறியுள்ளார்.

இந்நேரம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger