இணையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் வெளியீடு..

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள்
இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளதுபுதிய பாடத்திட்டம் குறித்து பொது மக்கள்கல்வியாளர்கள்தங்களது கருத்துக்களை இ-மெயில் மூலம் தெரிவிக்க வழி வகுக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு, 2014 -15ஆம் கல்வியாண்டுக்கானபாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது.

புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கான கல்வியாளர்கள் குழுவை கடந்தஆண்டு அரசு நியமித்ததுதற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 24பாடங்களை அந்த கல்வியாளர்கள் குழு வடிவமைத்துள்ளதுபுதிய வரைவுபாடத்திட்டம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.

மே மாதம் 30ஆம் தேதி வரை புதிய வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில்பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறதுபுதிய வரைவுப்பாடத்திட்டம்குறித்து கல்வியாளர்கள்பொது மக்கள் தங்களது கருத்துக்களை மாநில கல்வியியல்மற்றும் ஆராய்ச்சி இயக்குனர்சென்னை-6 என்ற முகவரிக்கு தபால் மூலம்அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியுள்ளார்.


இணையத்தில் உள்ள புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய க்ளிக்குக - Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std) புதிய பாடத்திட்டம் தொடர்பான உங்கள்கருத்துகளை scerttn@gmail.com அல்லது  dtert@tn.nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல்அனுப்பலாம்.        
 

திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது
tntjsw 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger