TNPSC தேர்வுகள் பாடத்திட்டத்தில் மாற்றம்!...

  • விஏஓ தேர்வில் பொதுத் தமிழ் நீக்கம்;  அடிப்படை கிராம நிர்வாகம்  புதிய 
  • பகுதி சேர்ப்பு
  • குரூப்-4 தேர்வில் பொதுத் தமிழ் மதிப்பெண்கள் குறைப்பு
  • குரூப்-2 தேர்வில் பொதுத் தமிழ் நீக்கம்
  • குரூப்-2 தேர்வில் மூன்றடுக்கு முறை (முதல்நிலைமுதன்மைத் தேர்வுநேர்காணல்
  • அறிமுகம்
  • குரூப்-1 முதன்மைத் தேர்வில் பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு போட்டித் 
தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளதுபல்வேறு போட்டித் 
தேர்வுகளில் தமிழ் மொழிக்கான முக்கியத்துவம்குறைக்கப்பட்டுள்ளது
பொது அறிவு பாடங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது
மாணவர்களின்பொது அறிவுத் திறனையும் சிந்தித்து எழுதும் ஆற்றலையும் 
சோதனை செய்யும் வகையில் இந்தப் புதியபாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் 
கூறுகிறார்கள்குரூப்-1குரூப்-2குரூப்-3குரூப்-4குரூப்-6குரூப்-7,குரூப்-8
விஏஓ, எஸ்எ்எல்சி-டிப்ளமோ நிலையில் தொழில்நுட்பப் பணிகளுக்கான 
தேர்வுகள்இளநிலைப்பட்ட மற்றும் முதுநிலைப் பட்ட நிலையிலான 
தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வுகள் என பத்து வகை போட்டித்தேர்வுகளுக்கான 
புதிய பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
இணைய தளத்தில்வெளியிட்டுள்ளது.

குரூப்-1 தேர்வு

தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாடத் திட்டப்படி, பட்டப் படிப்பு
 தகுதியுடைய மாணவர்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் ஏற்கெனவே 
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், தற்போது புதிதாக எந்த மாற்றமும் 
செய்யப்படவில்லை. மெயின் எனப்படும் முதன்மைத் தேர்வில் ஏற்கெனவே 
இரண்டு தாள்கள் இருந்தன. அதற்கு 600 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 
தற்போது மூன்று தாள்களுக்கான பாடத்திட்டம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் இரண்டாவது தாளில் இந்திய அரசியலமைப்பு, இந்தியப் புவியியல், 
யூனியன் பிரதேசம் மற்றும் மாநில நிர்வாகம் குறிப்பாக தமிழ்நாடு மாநில நிர்வாகம், 
ஆகியவை குறித்த கேள்விகள் இருக்கும். அத்துடன், மாணவர்கள் விருப்பத்தின் 
அடிப்படையில், தமிழ் மொழி (தமிழ் மொழி மற்றும் தமிழ்ச் சமூகம்) அல்லது ஆங்கில 
மொழித்திறன் பாடத்தை எழுதவேண்டும். அதேசமயம், தமிழ்நாடு அரசுப் 
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் 
குரூப்-1 மெயின் தேர்வில் நான்கு தாள்களுக்கான தேர்வுத் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. 
 குரூப் - 1 நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 80 மதிப்பெண்களிலிருந்து
 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப்-2 தேர்வு

ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி, பட்டப் படிப்பு தகுதியுடைய மாணவர்களுக்கான 
குரூப்-2 தேர்வில் பொது அறிவுப் பகுதியில் 100 கேள்விகளும் பொதுத் தமிழ் 
அல்லது பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும் கேட்கப்படும். இவை இரண்டுக்கும் 
சேர்த்து 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போதைய புதிய முறைப்படி குரூப்-2
 தேர்வு நேர்காணலுடன் கூடிய தேர்வு (குரூப்-2), நேர்காணல் இல்லாத தேர்வு
 (குரூப்-2ஏ) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரூப்-2 நேர்காணலுடன்
 கூடிய தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வில் 200 கேள்விகளும் பொது அறிவுக் 
கேள்விகளாக இருக்கும். அதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த 
மாணவர்களுக்கான மெயின் என்ற முதன்மைத் தேர்வில் பிரிவு-1, பிரிவு-2, பிரிவு-3 
பகுதிகளுக்கான வினாக்கள் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். பிரிவு-4க்கான 
கேள்விக்கு கட்டுரை வடிவில் பதில் அளிக்க வேண்டியதிருக்கும். இதில் 
தகுதி பெறும் மாணவர்களுக்கு நேர்காணல் இருக்கும். குரூப்-2ஏ பிரிவு மாணவர்களுக்கு 
நேர்காணல் இருக்காது. இந்த குரூப்2-ஏ பிரிவு மாணவர்களுக்கான போட்டித் தேர்வில் 
அப்ஜெக்ட்டிவ் முறையில் பொது அறிவில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 300 
மதிப்பெண்கள் வழங்கப்படும்.

குரூப்-4 தேர்வு

குரூப்-4 தேர்வுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சிதான். 
இந்தத் தேர்வையையும் பல லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். குரூப்-4 தேர்வில்
 பழைய முறைப்படி, பொது அறிவுப் பகுதியில் 100 வினாக்களும் பொதுத் தமிழ் 
அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதற்கு மொத்த 
மதிப்பெண்கள் 300. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய முறைப்படி, 
ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும் பொது அறிவுப் பகுதியில் 150 கேள்விகள் கேட்கப்படும். 
அதற்கு 225 மதிப்பெண்கள் உண்டு. பொது அறிவியல், கரண்ட் அபையர்ஸ், புவியியல், 
இந்திய மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் கலாசாரம், இந்திய அரசமைப்பு, 
இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், மெண்டல் எபிலிட்டி டெஸ்ட் 
ஆகியவை குறித்த வினாக்கள் கேட்கப்படும். பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 
குறித்து 20 பாடப்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கான மதிப்பெண்கள் 
எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை. மொத்த மதிப்பெண்கள் 300 என வைத்துக்
 கொண்டால் இந்த பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலப் பகுதிக்கு 75 மதிப்பெண்களே 
இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே, இந்தப் பகுதிக்கு 150 மதிப்பெண்கள் 
வழங்கப்பட்டு வந்தது.

விஏஓ தேர்வு

ஏற்கெனவே நடத்தப்பட்ட விஏஓ தேர்வை சுமார் பத்து லட்சம் பேர் எழுதினார்கள். 
இந்தப் பணிக்கான குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சிதான். 
ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி, விஏஓ தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும். 
இதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். 100 வினாக்கள் பொது அறிவு 
தொடர்பாகவும் 100 வினாக்கள் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 
தொடர்பாகவும் கேட்கப்படும். பொதுத் தமிழா அல்லது பொது ஆங்கிலமா
 என்பதை விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட வேண்டும். பொது அறிவுக்
 கேள்விகளில் பெரும்பாலான கேள்விகள் தமிழ்நாடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.

தற்போது புதிய முறைப்படி விஏஓ தேர்வில் பொதுத் தமிழோ அல்லது பொது ஆங்கிலமோ 
இல்லை. ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும் பொது அறிவுப் பாடத்தில் 150 கேள்விகள் 
கேட்கப்படும். இதில் பொது அறிவியல், கரண்ட் ஈவன்ட்ஸ், புவியியல், இந்திய 
மற்றும் தமிழக வரலாறு மற்றும் கலாசாரம், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், 
இந்திய தேசிய இயக்கம், மென்டல் எபிலிட்டி டெஸ்ட் ஆகியவை குறித்த கேள்விகள் 
இருக்கும். அதாவது, குரூப்-4 தேர்வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு
(ஜெனரல் ஸ்டடீஸ்) பாடத் திட்டத்தில் உள்ளபடியே அதே பாடத்திட்டம்
 இதற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விஏஓ தேர்வில் கிராம நிர்வாக அடிப்படைகள்
 குறித்த பகுதி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 50 கேள்விகள் கேட்கப்படும்.
 அதற்கு 75 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தப் புதிய முறையிலும் 200 
வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள்தான்.

“விஏஓ தேர்வில் தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளதும், கிராம நிர்வாக 
அதிகாரிகளுக்கான அடிப்படை விஷயங்கள் புதிதாகச் சேர்க்கப்படுள்ளதும் 
மாணவர்களைச் சிரமத்தில் ஆழ்த்தும். பொதுவாக, மற்ற போட்டித் தேர்வுகளில் 
பணி தொடர்பான விஷயங்கள் குறித்த கேள்விகள் கேட்கப் படுவதில்லை.
துறை சார்ந்த தேர்வுகளில் கேட்கப்படுவதுபோல, கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு
 மட்டும் அதுகுறித்த கேள்விகளைக் கேட்பது ஏன்”என்று கேட்கிறார்கள், இத்தேர்வை 
எழுதத் தயாராகி வரும் மாணவர்கள்.

தேர்வு எப்போது?

குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற ஜூலையில் வெளியிடப்படும். குரூப்-2 
தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு உள்ள பணிகள்) அறிவிப்பு வருகிற ஜூனிலும்
 குரூப்-2ஏ தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு இல்லாத பணிகள்) அறிவிப்பு வரும் ஜூலை 
மாதமும் குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வருகிற மே மாதமும் வருவாய்த் 
துறையில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பு வருகிற 
ஆகஸ்ட் மாதமும் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்
 தேர்வாணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்
 தேர்வாணைய இணையதளத்தில் பாடத்திட்டங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. 
இந்தத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும்போது, இந்தத் தேர்வுகள் குறித்த 
விரிவான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணிகளில் உயர் அதிகாரிகளுக்கான 
தேர்வுகள். பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள்கூட, 
தற்போதைய புதிய முறைப்படி எளிதாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று விட முடியும். 
தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணிகளில் 20 சதவீத 
ஒதுக்கீடு உள்ள நிலையில் பொதுத் தமிழ் பாடத்துக்கான முக்கியத்துவத்தைக்
 போட்டித் தேர்வுகளில் குறைப்பது சரியாக இருக்காது. இது குறிப்பாக கிராமப்புற, 
தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்குப் பாதிப்பாக இருக்கும்” என்கிறார்கள் 
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள்.

நன்றி:- புதியதலைமுறைக்கல்வி
நன்றி - tntjsw 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger